Wednesday, June 24
Shadow

விஜய் 62 படத்தின் கதை இதை பற்றி தான் பேச போகிறது

இன்று இந்திய சினிமாவே மிகவும் எதிர்பார்க்கிற படம் என்றால் அது விஜய் 62 என்று தான் சொல்லணும் காரணம் இந்த கூட்டணிக்கு இது மூன்றாவது படம் இதனால் மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது அதோடு கடந்த இரண்டு படங்களும் நூறு கோடி வசூல் மழை பொழிந்த படங்கள் வேறு அதோடு இந்த கூட்டணி சேர்ந்தாலே சோசியல் மெசஜ் கதையாக தான் இருக்கும் இதனால் எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

விஜய் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படம் குறித்து பல தகவல்கள் வரும் நிலையில், இதில் விஜய் கிராமத்து இளைஞனாக நடிப்பதாகவும் செய்திகள் வருகின்றது.

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குறித்து இப்படத்தின் கதைக்களம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply