Friday, April 12
Shadow

விஜய் 62 இதுவரை இல்லாத ஒரு பட்ஜெட்டில் உருவாகும் மிக பிரமாண்ட படம்

விஜய் என்றாலே தமிழ் சினிமாவில் வசூல் மன்னன் பட்டியலில் உள்ள மிக முக்கிய நடிகர் என்று சொல்லலாம் அவரை நம்பி பணம் போட்ட படம் எடுக்கும் தயாரிப்பாளர் நஷ்டம் என்பது மிக குறைவு என்று தான் சொல்லணும் அந்த அளவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் தான் விஜய் அதிலும் விஜய் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி என்றால் துணிந்து பணத்தை வாரி இறைக்கலாம் காரணம் இவர்கள் இணைந்த படங்கள் வசூல் ரீதியாக சாதனை படைத்த படங்கள் இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.

விஜய் திரைப்பயணத்தில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட படங்கள் துப்பாக்கி, கத்தி. இந்த இரண்டு வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் விஜய் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் ஏ.ஆர். முருகதாஸ்.

இவர்களின் மூன்றாவது கூட்டணிக்காக ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட்டிங். இவர்கள் மீண்டும் இணைகிறார்கள் என்ற தகவலை தவிர மற்ற விஷயங்கள் சரியாக வெளிவரவில்லை. ஆனால் சமீபத்தில் லைகா நிறுவனம் தயாரிக்க இருந்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வந்திருந்தது.
தற்போது இப்பட பட்ஜெட் ரூ. 125 கோடி என செய்திகள் வந்துள்ளது.

ரஜினி நடித்த எந்திரன் படத்துக்குப் பிறகு படத் தயாரிப்பிலிருந்து விலகியிருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் படத்தின் மூலம் மீண்டும் படங்கள் தயாரிக்க ஆரம்பிக்க இருக்கின்றனர்.

Leave a Reply