
விஜய் என்னும் மூன்று எழுத்து தளபதி தற்போது நடித்து கொண்டு இருக்கும் படம் மெர்சல் இந்தப்படம் வெளிவருவதற்கு முன்பே அனைவரையும் மெர்சல் செய்து கொண்டு இருக்கிறது என்று சொன்னால் மிகையாகது ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி மிக பெரிய வெற்றியை தொட்டுள்ளது. இன்னும் இரண்டு நாளில் இந்த படத்தின் டிசர் வெளியாக உள்ளது. இந்த டிசர்க்கு உலக சினிமா ரசிகர்கள் வரவேற்க தயாராகி வருகிறார்கள். இந்த டீசரை சாதனை படைக்க ரசிகர்கள் காத்துகொண்டு இருகிறார்கள்.இந்த சந்தோசத்துடன் மேலும் ஒரு சந்தோசம் என்னவென்றால் அது விஜய் 62 படத்தை பற்றிய தகவல்.
தளபதியின் விஜய் 62 படபிடிப்பு எப்போது ஆரம்பிக்கும் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் ஒரு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் விஜய் 62 படத்தை பற்றி மனம் திறந்தார். அப்போது பேசிய அவர் நான் ஸ்பைடர் படத்தோடு விஜய் படத்தின் வேலைகளையும் ஆரம்பித்துவிட்டேன் என்று கூறினார் அதோடு இந்த படத்தின் கதையும் தயாராகிவிட்டது. ஜனவரி மாதம் படபிடிப்பு சென்னையில் ஆரம்பம் ஆகும் என்றும் கூறினார். இதற்கான அறிவிப்பு ஸ்பைடர் ரிலீஸ் ஆனதும் அறிவிப்பேன் என்று அதிகாரபூர்வமாக கூறினார்.
