இளைய தளபதிக்கு பதில் எஸ்.ஏ.சந்திரசேகர் செய்த மிகப்பெரிய உதவி !!
தமிழ் சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டவர் இளைய தளபதி விஜய்.இவர் படங்கள் வெளியானால் திருவிழாவை போல் இவரது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.இவருக்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி கேரளாவிலும் பெரும்திரளானோர் ரசிகர்களாக உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் ஸ்ரீ நாத் என்பவர் விபத்தில் இறந்து விட்டார். இவரது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளதால் இவர் குடும்பத்திற்கு உதவி தேவைப்படுவதை அறிந்த நடிகர் விஜய் அவரது தந்தை எஸ்.ஏ.சி அவர்களின் மூலம் ஸ்ரீ நாத் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்துள்ளார்.