Thursday, October 22
Shadow

அஜித்தின் விவேகம் வியாபாரம் வெளிநாட்டு உரிமத்துக்கு போட்டி

அஜித் என்றாலே ஒரு மாஸ் எப்பவும் இருக்கும் அஜித் படம் வெளியாகிறது என்றாலே திருவிழா கோலம் தான் அதிலும் அஜித்தின் விவேகம் அதற்கு ஒரு படி மேல் காரணம் அஜித் லுக் மட்டும் இல்லை முதல் முறையாக சிக்ஸ் பேக் அதுவும் மேலும் ரசிகர்களை மேலும் இந்த படம் பார்க்க ஆவலை தூண்டியுள்ளது .அதே போல படத்தின் வியாபாரமும் இதுவரை இல்லாத விலைக்கு வியாபாரம் ஆகியுள்ளது அதும் போட்டி போட்டு கொண்டு நடந்து வருகிறது.

படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருக்கும் நிலையில் இப்போதே படத்தின் வியாபாரங்கள் சூடுப்பிடித்திருக்கிறது.

ஏற்கனவே சென்னை மற்றும் மதுரை ஏரியாக்களில் விவேகம் படம் நல்ல விலைக்கு விற்கப்பட்டிருக்கும் நிலையில், சமீபத்தில் கோவை ஏரியாவில் மட்டும் 9 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. இதுவரை எந்தவொரு அஜித் படமும் இந்த விலைக்கு விற்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுஒருபக்கம் இருக்க வெளிநாட்டிலும் விவேகம் படத்தை வாங்க போட்டா போட்டி நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. சமீபத்தில் ‘விவேகம்’ படத்தின் ஒருசில ஆக்சன் காட்சிகளையும் மற்றும் ஒரு பாடல் காட்சியையும் வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காட்டினார்களாம் விவேகம் படக்குழுவினர். அந்த காட்சிகளை எல்லாம் பார்த்த விநியோகிஸ்தர்கள் படம் வேற லெவலை இருப்பதை அறிந்து இதன் ரிலீஸ் உரிமையை பெற போட்டி போடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதற்கு முன் இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் இந்த படத்தின் வியாபாரம் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும், இந்த படம் வசூலில் சாதனை செய்யும் என்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமாக தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Leave a Reply