Friday, March 13
Shadow

சிம்புவுக்கு நாங்கள் ரொம்ப தொல்லை கொடுத்தோம்: ஒத்துக்கொண்ட பிரபல நடிகர்

நடிகராக இருந்த சிம்பு தற்போது ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகி இருக்கிறார். அவரது இசையில் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த படத்திற்கு சிம்பு இசையமைத்தது குறித்து சந்தானம் கூறிய போது,

இந்த படத்திற்கு இசையமைக்க சிம்புவிடம் கேட்கலாம் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் விடிவி கணேஷ் தான் கூறினார். பின்னர் இதுகுறித்து சிம்புவிடம் பேசினோம். முதலில் யோசித்த அவர், பின்னர் ஒத்துக் கொண்டார். பிறகு நாங்கள் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை. சில நாட்கள் கழித்து அவரே அழைத்து தனது டியூன்களை போட்டுக் காட்டினார். ஒரு சில சமயம் இரவு தூங்கும் போது கூட போன் செய்து பாடல்களை இசைத்துக் காட்டினார். அதேநேர்தில் நாங்களும் பாடல் ஸ்டேட்டஸ் குறித்து அறிய, அவரை இரவில் தொல்லை செய்தோம். மொத்தத்தில் அவரை நல்ல டார்ச்சர் செய்தே நல்ல பாடல்களை பெற்றுள்ளோம். அதுமட்டுமின்றி 5 பிரபலங்கள் பாடல்களை பாடியுள்ளனர். அது எங்களுக்கு பெருமை என்றார்.

இப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். விவேக், சம்பத், ரோபோ சங்கர், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் வருகிற 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Leave a Reply