
பிரபல இந்திய தொழிலதிபர்களுள் ஒருவரான சச்சின் நடிக்கும் தமிழ்ப்படம் யார் இவன். வெண்ணிலா கபடி குழு உட்பட மூன்று தமிழ்ப்படங்களை தெலுங்கில் மொழி மாற்றம் செய்து இயக்கிய சென்னைக்காரர் டி சத்யா, முதன் முதலாக இயக்கும் நேரடித் தமிழ்ப்படம் யார் இவன்.
விளையாட்டுப் பின்னணியில் நடக்கும் ஒரு கிரைம் திரில்லர் தான் யார் இவன்… ப்ரோ கபடி வீரராக சச்சின் நடிக்கிறார்… தனது ரசிகையையே காதலிக்கிறார்… ஒரு கொலை நடக்கிறது… அந்தச் சூழ்நிலைகளில் இருந்து தன்னையும் தன் காதலையும் காப்பாற்றிக் கொள்ள என்ன செய்கிறார் என்பது தான் கதை..” என்கிறார்கள்.

சச்சின் ஏற்கனவே ராம் கோபால் வர்மா இயக்கிய வில்லாதி வில்லன் வீரப்பன் படத்தின் நடித்தவர் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம் இவர் தன் எட்டு வயதிலே நடிக்க வந்தவர் நடிப்பு இவரின் மூச்சாம் பணம் என்னிடம் நிறைய இருக்கு அதேபோல கலை தாகமும் அதிகம் அது தான் இந்த யார் இவன் , இந்த படம் நிச்சயம் தமிழ் சினிமாவும் ஒரு புதிய முயற்சியாக இருக்கும் என்பதில் எனக்கு சிறிதும் அச்சம் இல்லை காரணம் இயக்குனர் சத்யா அந்த அளவுக்கு மிக சிறந்த திரைகதை அமைத்துள்ளார் .
இந்த படம் ஒரு கிரைம் திரில்லர் கபடியோடு கலந்த ஒரு காதல் கதை இந்த படம் பார்க்கும் உங்களை நிச்சயம் நாற்காலி நுனிக்கு வரவைக்கும் என்பதில் எந்த ஒரு அச்சமும் இல்லை என்பதை பெருமையோடும் நம்பிக்கையோடும் சொல்லுகிறேன் வரும் செப்டம்பர் 15ம் தேதி இந்த படம் தமிழ் மட்டும் தெலுங்கி வெளியாகிறது.
