Saturday, December 10
Shadow

நவம்பர் 20ம் தேதி “2.o” படத்தின் பர்ஸ்ட் லுக்

நவம்பர் 20ம் தேதி “2.o” படக்குழு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட மிகப் பிரம்மாண்டமான விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது லைகா புரொடக்‌ஷன்ஸ்.

மும்பையில் உள்ள யாஷ் ராஜ் ஸ்டுடியோவில் மாலை 5 மணிக்கு இவ்விழா நடைபெற இருக்கிறது. இவ்விழா லைகா நிறுவத்தினத்தின் அதிகாரப்பூர்வ யு-டியூப் பக்கத்தில் (https://www.youtube.com/LycaProductions) பிரத்யேகமாக நேரடியாக ஒளிபரப்ப இருக்கிறது. மேலும் லைகாவின் மொபைல் அப் (Android & IOS) மூலமாக இந்நிகழ்வை நேரடியாக காணலாம்.

இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இயக்குநர் ஷங்கர், அக்‌ஷய்குமார், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், எமி ஜாக்சன் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவ்விழாவை தொகுத்து வழங்கவிருக்கிறார் இந்தி திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கரன் ஜோஹர் அவர்கள்.

முதன் முறையாக “2.o” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவரவிருக்கிறது. எப்போதுமே எந்தவொரு விஷயத்தில் புதுமையை விரும்பும் இயக்குநர் ஷங்கர், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விஷயத்திலேயே தனது புதுமையை தொடங்கவிருக்கிறார்.

Leave a Reply