
மதுரையை அதிரவைக்கும் புதிய மர்மம்… சசிகுமார் மீண்டும் புலனாய்வில்! ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ டிரெய்லர் வெளியீடு
விமர்சகர்களின் பாராட்டையும், ரசிகர்களின் பெரும் வரவேற்பையும் பெற்ற ‘வதந்தி’ தமிழ் ஒரிஜினல் வெப் சீரிஸின் அடுத்த அத்தியாயமாக உருவாகியுள்ள ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ தற்போது தனது பரபரப்பான டிரெய்லரை வெளியிட்டு, ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம், மர்மம், வதந்தி, அரசியல், மனித உணர்வுகள் என பல அடுக்குகளைக் கொண்ட இந்த க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார். புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ள இந்தத் தொடரை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இந்த முறை கதையின் மையமாக மதுரை நகரம் களமாகிறது. பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் ஜல்லிக்கட்டு திருவிழாவின் விறுவிறுப்பான பின்னணியில் நகரும் இந்தக் கதை, ஒரு சாதாரண கொலை வழக்காகத் தொடங்கி பல அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெறும் இடத்தில் கண்டெடுக்கப்படும் மனித எலும்புக்கூடு, காவல்துறை அதிகாரி எஸ்.ஐ. மூசா ரஸா முன்னிலையில் புதிய விசாரணைக்கு வழிவகுக்கிறது. ‘மணி’ என்ற மர்ம நபரை மையமாகக் கொண்டு நகரும் இந்த வழக்கு, விசாரணை முன்னேற முன்னேற அரசியல் அழுத்தம், ஊடக பரபரப்பு, பொதுமக்களின் கருத்து, மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் மனிதர்களின் இருண்ட முகங்களை வெளிப்படுத்துகிறது.
மூசா ரஸாவாக நடிகர் எம். சசிகுமார் மீண்டும் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வெளியாகியுள்ள டிரெய்லர், தொடக்கம் முதல் இறுதி வரை பதற்றத்தையும் சஸ்பென்ஸையும் தக்கவைத்திருக்கும் விதமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் அடுத்த நொடி என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்குவதுடன், உண்மை என்பது வெளியில் தெரியும் தோற்றத்தைவிட மிகவும் சிக்கலானது என்பதை உணர்த்துகிறது.
இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் கூறுகையில், “‘வதந்தி’ தொடரின் மையக் கருத்து எப்போதும் உண்மைக்கும் வதந்திக்கும் இடையிலான மெல்லிய கோட்டை ஆராய்வதுதான். முதல் சீசனுக்கு கிடைத்த அன்பே இரண்டாவது சீசனை இன்னும் ஆழமான கதைக்களத்துடன் உருவாக்கும் தன்னம்பிக்கையை அளித்தது. இந்த முறை ஒரு குற்றத்தை மட்டும் அல்ல, அதிகாரம், மௌனம், சமூக அமைப்புகள் மற்றும் நீதியின் உண்மையான முகத்தையும் ஆராயும் கதையை உருவாக்கியுள்ளோம். மதுரையின் கலாச்சாரப் பின்னணி இந்தக் கதைக்கு தனித்துவமான உயிரோட்டத்தை அளிக்கிறது,” என்றார்.
நடிகர் சசிகுமார் பேசுகையில், “மூசா ரஸா கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது அவரது நேர்மையும் உண்மைக்கான அர்ப்பணிப்பும்தான். எந்த சூழலிலும் உண்மையை விட்டுக்கொடுக்காத ஒரு காவல் அதிகாரியின் மனநிலையை வெளிப்படுத்தும் வாய்ப்பு இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் கிடைத்தது. இது வெறும் புலனாய்வு கதையாக மட்டுமல்லாமல், மனித உணர்வுகளையும் ஒழுக்கப் போராட்டங்களையும் பேசும் ஒரு பயணமாகவும் அமைந்துள்ளது. இந்தப் பயணம் ரசிகர்களை இறுதி வரை சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்தார்.
எட்டு எபிசோட்களைக் கொண்ட ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ வரும் ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் தமிழில் வெளியாகிறது. மேலும் தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளுடன், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
முதல் சீசனைப் போலவே, இரண்டாவது சீசனும் விறுவிறுப்பான திரைக்கதை, ஆழமான கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கையை டிரெய்லர் ஏற்படுத்தியுள்ளது.
Sasikumar Returns as SI Moosa Raza in Prime Video’s Gripping Crime Thriller ‘Vadhandhi Season 2 – The Mystery of Mani’; Trailer Unveiled
Prime Video has officially unveiled the gripping trailer of its much-awaited Tamil Original series ‘Vadhandhi Season 2 – The Mystery of Mani’, promising an intense blend of crime, mystery, suspense, and emotional drama. Following the critical acclaim and audience appreciation received by the first season, the new chapter raises the stakes with a darker and more layered investigation.
Created, written, and directed by Andrew Louis, the eight-episode series is creatively produced by Pushkar and Gayathri under the banner of Wallwatcher Films. The story delves into themes of guilt, hidden truths, rumours, redemption, and justice, offering viewers a compelling investigative thriller.
Set against the culturally rich backdrop of Madurai, the series follows SI Moosa Raza, played by M. Sasikumar, as he takes on a chilling new case that begins with the discovery of a human skeleton at a national highway construction site. What initially appears to be a routine murder investigation gradually unfolds into a far more complex mystery surrounding a mysterious prisoner named Mani.
As the investigation progresses, Moosa Raza finds himself navigating a web of political influence, media scrutiny, public perception, and deeply buried secrets. With every clue leading to unexpected revelations, the series explores how truth is often more complicated than it appears.
Alongside Sasikumar, the ensemble cast includes Yashwant, Anagha Maruthora, Aparna Das, Vivek Prasanna, Revathi Sharma, and Arjun Nandakumar, each playing pivotal roles in the unfolding mystery.
The newly released trailer offers a glimpse into a tense and emotionally charged narrative packed with suspense, unexpected twists, and high-stakes investigative drama. The visuals capture Madurai’s vibrant cultural landscape while seamlessly integrating the adrenaline-filled atmosphere of the Jallikattu festival into the storytelling.
Speaking about the series, creator and director Andrew Louis said, “At its core, Vadhandhi has always questioned what we choose to believe and the uncomfortable truths we often ignore. The overwhelming response to the first season inspired us to return with a story that goes beyond solving a crime. This season explores how power, silence, and deeply rooted systems influence our understanding of justice. Madurai’s unique cultural identity added authenticity and emotional depth to the narrative. I am grateful to Pushkar, Gayathri, Prime Video, and the entire cast and crew for believing in this vision. I hope audiences enjoy the mystery while continuing to reflect on its themes long after the series ends.”
Sharing his experience of portraying SI Moosa Raza, M. Sasikumar said, “What drew me to Moosa Raza was his unwavering integrity and his belief that justice must always be rooted in truth, regardless of the personal cost. Beyond the police uniform lies a man facing emotional conflicts, moral dilemmas, and difficult choices. That emotional journey makes this much more than a crime thriller. Working with Andrew Louis, Pushkar, Gayathri, Prime Video, and such a talented cast and crew has been an enriching experience. I hope audiences join Moosa on this investigation and remain engaged until the very last revelation.”
‘Vadhandhi Season 2 – The Mystery of Mani’ will premiere exclusively on Prime Video from August 7 in Tamil, with dubbed versions in Telugu and Hindi. The series will also be available with subtitles in 15 languages, reaching audiences across more than 240 countries and territories worldwide.
With an intriguing premise, a powerful cast, and a suspense-filled narrative, ‘Vadhandhi Season 2 – The Mystery of Mani’ is poised to deliver another compelling chapter in one of Tamil streaming’s most acclaimed investigative thriller franchises.
