Wednesday, October 28
Shadow

சண்முக பாண்டியனின் அடுத்த அதிரடி பயணம் தொடக்கம்!

சண்முக பாண்டியனின் அடுத்த அதிரடி பயணம் தொடக்கம்!

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புரொடக்ஷன் நம்பர் 10 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது – மாலை 6 மணிக்கு டைட்டில் லுக்கை வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன்

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. தயாரிப்பு நிறுவனத்தின் 10-வது படைப்பாக உருவாகும் இப்படம் தற்போது ‘புரொடக்ஷன் நம்பர் 10’ என அழைக்கப்படுகிறது.

இப்படத்தில் கதாநாயகனாக சண்முக பாண்டியன் நடிக்கிறார். ‘கட்டப்பாவ காணோம்’ படத்தை இயக்கிய மணிசியோன் இப்படத்தை இயக்குகிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படம், சண்முக பாண்டியனின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க படமாக அமையும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக பிரசன்ன குமார், இசையமைப்பாளராக மனு இரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பு தொடக்க விழாவில் தயாரிப்பாளர் தரப்பினர், படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

விழாவில் பிரேமலதா விஜயகாந்த் கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். பூர்ண ஜோதி சுதீஷ் கிளாப் அடிக்க, படத்தின் முதல் காட்சி படமாக்கப்பட்டது.

மேலும் டாக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷ், நடிகர்கள் இளவரசு, தம்பி ராமையா, படூர் ரமேஷ், மைனா நந்தினி, இந்திரஜா ரோபோ சங்கர், பட்டிமன்றம் ராஜா, பிரகதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் அர்வியும் விழாவில் பங்கேற்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் இரு படங்களின் படப்பிடிப்பு

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது அடுத்தடுத்த படைப்புகளில் கவனம் செலுத்தி வருகிறது. அந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘வாணவேடிக்கை’ திரைப்படத்தின் படப்பிடிப்பும், அதே நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையில் உருவாகும் இந்த புரொடக்ஷன் நம்பர் 10 திரைப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது அடுத்தகட்ட திரைப்படப் பணிகளை வேகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியாகிறது டைட்டில் லுக்!

இதற்கிடையே, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தின் டைட்டில் லுக்கை வெளியிடுகிறார். இதன் மூலம் ‘புரொடக்ஷன் நம்பர் 10’ என்ற தற்காலிக பெயரில் கவனம் பெற்றுவரும் படத்தின் உண்மையான தலைப்பு என்ன என்பது இன்று மாலை அதிகாரப்பூர்வமாக தெரியவர உள்ளது.

படத்தின் தலைப்பு மற்றும் டைட்டில் லுக் வெளியான பிறகு, இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Shanmuga Pandian’s Next Action-Packed Journey Begins!

Captain Cine Creations’ Production No. 10 Begins with a Traditional Pooja – Sivakarthikeyan to Reveal the Film’s Title Look at 6 PM Today

The shooting of a new Tamil film produced by LK Sudheesh under the banner of Captain Cine Creations commenced in Chennai today with a traditional pooja ceremony. The film, which marks the production house’s 10th venture, is currently referred to as ‘Production No. 10’.

Shanmuga Pandian plays the lead role in the film, which is directed by Manisiyon, who previously helmed Kattappaava Kaanom. The film is being developed with an interesting storyline and is expected to be an important addition to Shanmuga Pandian’s filmography.

The technical crew includes Prasanna Kumar as the cinematographer and Manu Ravichandran as the music composer.

Shooting Begins with a Traditional Pooja

The shooting commencement ceremony was held in Chennai in the presence of members of the film’s cast and crew, along with several personalities from the Tamil film industry.

Premalatha Vijayakanth switched on the camera to mark the beginning of the shoot, while Poornajothi Sudheesh sounded the clap for the first shot.

Dr. Janu Sri Sudheesh, actors Ilavarasu, Thambi Ramaiah, Patoor Ramesh, Maina Nandhini, Indhraja Robo Shankar, Pattimandram Raja and Pragathi were among those who attended the event and extended their wishes to the team. Director and cinematographer Arvi was also present at the ceremony.

Captain Cine Creations Working on Two Films Simultaneously

Captain Cine Creations is currently moving ahead with its upcoming projects at full speed. The shooting of ‘Vaanavedikkai’, another film produced by the banner, is progressing alongside the shoot of Production No. 10.

With two projects currently being filmed, Captain Cine Creations is gearing up for an active phase of production, with more updates expected from the banner in the coming days.

Title Look to Be Unveiled Today at 6 PM

Adding to the anticipation surrounding the project, the official title look of the film will be unveiled today at 6 PM.

Actor Sivakarthikeyan will launch the title look, bringing an end to the curiosity surrounding the film’s temporary identity as ‘Production No. 10’. The official title is expected to give audiences the first major glimpse into the film and its theme.

Further details about the cast, crew and other aspects of the project are expected to be announced following the title reveal.