“சாத்தியமில்லை” என்ற வார்த்தைக்கு சினிமாவில் இடமில்லை… புதிய கற்பனை உலகை உருவாக்கும் ‘மந்திரா ஸ்டுடியோஸ்’!
“சாத்தியமில்லை” என்ற வார்த்தைக்கு சினிமாவில் இடமில்லை… புதிய கற்பனை உலகை உருவாக்கும் ‘மந்திரா ஸ்டுடியோஸ்’!
ஆர்.டி. ராஜா அறிவிப்பு – 33 ஆண்டுகால கலை அனுபவத்துடன் இயக்குநர் அவதாரம் எடுக்கும் டி. முத்துராஜ் – ஹைப்பர் ரியலிஸ்டிக் டிஜிட்டல் ஹைப்ரிட் திரைப்படம் உருவாகிறது!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதுமையான முயற்சிகள் கவனம் பெற்று வரும் நிலையில், திரைப்படத் தயாரிப்பில் புதிய சிந்தனைகளுக்கும், தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டப் பயன்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய தயாரிப்பு நிறுவனமாக ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ (Manthira Studios) உருவாகியுள்ளது. தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வழக்கமான திரைப்படத் தயாரிப்பு முறைகளிலிருந்து விலகி, தொழில்நுட்பம், கற்பனை மற்றும் காட்சியமைப்பை ஒருங்கிணைத்து இதுவரை ரசிகர்கள் பார்த்திராத புதிய திரை அனுபவங்களை ...









