Author: admin
A. குரு சேகரா இயக்கும் புது முகங்கள் நடிக்கும் “வளையல்”
கதையில் கதாநாயகி கேட்கும் திறன் படைத்த ஊமை. கதாநாயகன் கதாநாயகி மீது காதல் வயப்படும் போதெல்லாம் தான் ஊமை என்னும் உண்மையை சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் கதாநாயகனுக்கு தெரியப்படுத்தாமல் மறைக்கிறாள். ஆனால் ஒரு நாள் கதாநாயகனுக்கு உண்மை தெரியவருகிறது. அதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான சம்பங்களே வளையல் படத்தின் கதை.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குபவர் A. குரு சேகரா. இப்படத்தை அனைவரும் ரசிக்கும் படி மிகவும் ஜனரஞ்சகமான முறையில் எடுத்திருக்கிறார். இவர் இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
BR மூவிமேக்கர்ஸ் சார்பாக B.R.காளியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார்.
கதாநாயகனாக சக்தி சிவன், கதாநாயகியாக பாவ்யா ஸ்ரீ, முக்கிய கதாபாத்திரத்தில் சத்யஅஜித், மனோஜ் கே பாரதி உட்பட பலர் நடித்துள்ளனர்....
மீண்டும் மீண்டும் சமந்தா கல்யாணத்தில் சிக்கல்
சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது சமந்தா திருமணம் என்பது எல்லோருக்கும் அறிந்ததே மீண்டும் இவர்கள் காதலில் பப்ரபரப்பு ஏற்பட்டுள்ளது தென் இந்தியா சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெறி, 24 என தொடர் வெற்றிகளால் சந்தோஷத்தில் இருக்கும் இவர் மீண்டும் தன் காதல் குறித்து ஒரு சர்ச்சையை எழுப்பியுள்ளார்.
இவர் நாக சைதன்யாவை விரைவில் திருமணம் செய்துக்கொள்ள போவதாக கூறப்பட்டது, இருவரும் இதை மறுக்கவே இல்லை.
இந்நிலையில் நாக சைதன்யாவின் தெலுங்கு ப்ரேமத்தை குறித்து ஹார்டின் சிம்பள் போட்டுள்ளார் சமந்தா. உடனே சமூக வலைத்தளவாசிகள் விடுவார்களா? வழக்கம் போல் பல கதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்....
ஆர்யா விட்ட டோஸ்… நம்பியார் படத்தில் ஸ்ரீகாந்திற்கு நேர்ந்த ஒரு தர்மசங்கடம்
அறிமுகமானபோது எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார் ஸ்ரீகாந்த்.
இளமையில் மட்டுமல்ல உற்சாகத்திலும்.. காரணம் முதன்முறையாக
தயாரிப்பாளராகவும் காலடி எடுத்துவைத்திருக்கும் நம்பியார் படம் ஆகஸ்ட்
19ல் ரிலீஸாகவிருப்பதுதான். அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கத்தில்
ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் நம்பியார்
படத்தை வெளியிடவிருப்பது ஸ்ரீகாந்தின் சொந்த நிறுவனமான கோல்டன் ஃப்ரைடே
ஃபிலிம்ஸ். ஸ்ரீகாந்திடமே பேசுவோம்…
நம்பியார் என்ன சொல்றார்?
சினிமாக்களில் நல்லது செய்பவர் எம்ஜிஆர். கெட்டது செய்பவர் நம்பியார்.
இது எல்லா சினிமா ரசிகர்களுக்கும் தெரியும். எம்ஜிஆருக்கு வில்லங்கம்
செய்பவர் நம்பியார். அதுபோலவே ஒவ்வொரு மனிதனின் மனதிலும் நல்லதும்
இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. இரண்டும் கலந்த கூட்டணி தான் மனிதனின்
மனது. ஒரு பக்கம் நல்ல சிந்தனைகள் மேலோங்கும்போது கெட்ட சிந்தனைகள்
அத...
விஷால்-வடிவேலு-சூரி-சுராஜ் கூட்டணியில் சிரிக்க வைக்கும் ‘கத்திச் சண்டை’
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் ‘வீர சிவாஜி’ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இதன் கூடவே ‘கத்திச் சண்டை’ படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதி பாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன், இசை – ‘ஹிப் ஹாப்’ தமிழா, பாடல்கள் -நா.முத்துக்குமார், ‘ஹிப் ஹாப்’ தமிழா, எடிட்டிங் – ஆர்.கே.செல்வா, சண்டை பயிற்சி –கனல் கண்ணன், தளபதி தினேஷ், ஆக்ஷன் கணேஷ், கலை -உமேஷ்குமார், நடனம் -தினேஷ், ...
பிரபல இயக்குனர் மீது கடும் கோவத்தில் விஜய்
இளைய தளபதி விஜய் எல்லோரிடமும் அன்பாக பழகுவார், இவர் இப்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார், இந்த படம் 70% படப்பிடிப்பு முடிந்துவிட்டது, இப்போது ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
பாகம் 3 படத்தை இயக்கி கொண்டிருக்கும் இயக்குனர் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது, என்ன பிரச்சனை என்ற தெரியவில்லை அந்த படத்திலிருந்து விஜய் விலகிவிட்டார், மேலும் அந்த இயக்குனர் மீது கோபத்தில் உள்ளாராம்....
விஜய் அஜித படத்தின் வியாபாரத்தை மிஞ்சும் சிவகார்த்திகேயனின்ரெமோ
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வர்த்தகரீதியாகஅதிகவருமானம் ஈட்டு தரும் நாயகன் பட்டியலில் இடம் பெற்று உள்ளவர் .அதற்கு சாட்சி ரஜினி முருகன்விட பல மடங்கு பொருள் செலவு மட்டும் இல்லமல் புது விதமான கதையம்சத்துடன் வித்தியாசமான தொட்ட்ரங்களுடன் வருகிறார் சிவகார்த்திகேயன் இதை நாம் அறிந்ததே இந்த படத்தின் வியாபாரம் பற்றி பாப்போம் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த படத்தின் ரிலீஸ் உரிமைகள் போட்டி போட்டு வியாபாரம் ஆகிவருகின்றது. இந்த படத்தின் தயாரிப்பாளர் அவ்வப்போது இந்த படத்தின் ரிலீஸ் உரிமைகளை பெற்ற விநியோகிஸ்தர்களின் பெயர்களை அதிகாரபூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியா ரிலீஸ் உரிமையை பெறுபவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது செ...
இனி சினிமாவில் எப்படி நடிப்பார் என்று சவால் விடும் அமலாபால் மாமனார்
அமலாபால் - விஜய் ஜோடி திருமணமான இரண்டே ஆண்டுகளில் பிரிந்துவிட்டனர். இருவரும் விவாகரத்து பத்திரத்திலும் கையெழுத்து இட்டுவிட்டனர். இதன்பிறகும் கூட அமலாபால் மாமனாரை கண்டு அஞ்சுகின்றாராம். தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனுடனான நட்பை இழக்க விரும்பாத, சில சினிமா பட தயாரிப்பாளர்கள் அமலா பாலை தங்களின் படங்களில் நடிக்க வைப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளார்களாம். அமலாபலுக்கு கிடைத்த இரண்டு படத்தின் வாய்ப்பு பறிபோய்விட்டது. வடசென்னை படத்தில் கூட இன்னும் முழுமையாக கன்பார்ம் ஆகவில்லை.
இதனால் அமலாபால் அப்செட். இந்த அறிவிக்கப்படாத தடை குறித்து அமலா பால் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தனிப்பட்ட விஷயங்கள் பற்றி செய்தியாளர்களிடம் பேசுவது இல்லை என்ற முடிவில் உள்ளார் அமலா. தெலுங்கு, மலையாளம் சினிமா பக்கமும் தூது அனுப்பி உள்ளாராம்.
இனி எப்படி நடிக்கிறார் என்று பார்க்கலாம் என்று சாவல் விடும் ஏ.எல். அழகப்பன்...



