‘418’ – திரைப்பட விமர்சனம் (Rank 4/5)
‘418’ – காட்சிக்குக் காட்சி மிரட்டும் திகில் அனுபவம்! ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு செல்லும் திரைப்படம்!
திகில் திரில்லர் திரைப்படம் என்றாலே வெறும் பயமுறுத்தும் காட்சிகளை மட்டுமே வைத்து ரசிகர்களைக் கவர முயற்சிக்கும் படங்களுக்கு மத்தியில், விறுவிறுப்பான திரைக்கதை, எதிர்பாராத திருப்பங்கள், புதுமையான காட்சியமைப்புகள் என அனைத்தையும் ஒருங்கே இணைத்து ரசிகர்களுக்கு ஓர் அற்புதமான திரையரங்க அனுபவத்தை வழங்கியிருக்கிறது ‘418’ திரைப்படம்.
படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது. அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பையும், எந்த நேரத்தில் என்ன நிகழுமோ என்ற பதற்றத்தையும் உருவாக்குவதில் இயக்குநர் கீர்த்தன் நாககவுடா தனித்துவமான அணுகுமுறையைக் கையாண்டிருக்கிறார். குறிப்பாக, வழக்கமான திகில் படங்களிலிருந்து மாறுபட்டு, ஒவ்வொரு ...









