“மர்மக் கண்ணாடியில் சிக்கிய உண்மை!” – ‘தீயோர் கூடம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, எதிர்பார்ப்பை கிளப்பும் கிரைம் திரில்லர்
“மர்மக் கண்ணாடியில் சிக்கிய உண்மை!” – ‘தீயோர் கூடம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, எதிர்பார்ப்பை கிளப்பும் கிரைம் திரில்லர்
தமிழ் சினிமாவில் புதுமையான கதை சொல்லும் முயற்சிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதில் இன்னொரு சுவாரஸ்யமான சேர்க்கையாக உருவாகி இருக்கும் படம் “தீயோர் கூடம்.” இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசை உலகின் முன்னணி கலைஞர் Deva வெளியிட்டுள்ளார்.
Rule Breakers Production மற்றும் Thiya Cini Creations இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ஜெகன் நாராயணன், சக்திவேல், வீரமணி, கண்ணன் ஆகியோர் தயாரித்துள்ளனர். கதையும், இயக்கமும் சக்திவேல் மேற்கொண்டுள்ளார்.
நடிகை Sakshi Agarwal முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் Daniel Annie Pope மற்றும் Vaiyapuri முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர். இவர்களுடன் சாம்ஸ், வசந்தி, ஜாஸ்பர், சத்யா, சம்யுக்தா உள்ளிட்ட பலரும் கதைக்கு வலு ச...








