Monday, November 9
Shadow

Top Highlights

ரஜினியின் காலாக்கு சிக்கல் மேல் சிக்கல் 101 கோடி கேட்டு வழக்கு

ரஜினியின் காலாக்கு சிக்கல் மேல் சிக்கல் 101 கோடி கேட்டு வழக்கு

Latest News, Top Highlights
காலா படக்கதை விவகாரம் தொடர்பாக, 101 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, வழக்கு தொடரப்படும் என, நடிகர் ரஜினிக்கு, மும்பையை சேர்ந்த ஜவஹர் என்பவர், நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மும்பையில் வாழ்ந்த தமிழர், திரவியம் நாடார். இவரது மகனான ஜவஹரின் வழக்கறிஞர், ரஜினிக்கு அனுப்பியுள்ள, நோட்டீசில் கூறியிருப்பதாவது: காலா படம், மும்பையில் வாழ்ந்த தமிழரான, திரவியம் நாடாரின் கதையை மையமாக வைத்து, எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. திரவியம் நாடார், மும்பை தமிழர்களுக்காக பாடுபட்டார்; பல கொடுமைகளை அனுபவித்து வந்த தமிழர்களுக்கு, காவலராக விளங்கினார். அங்குள்ள மக்கள், காட்பாதர் என, பொருள்படும் வகையில், திரவியம் நாடாரை, குட்வாலா சேட் என்றே அழைப்பர். ஆனால், நிஜத்திற்கு விரோதமாக, படத்தில், காட்வாலா சேட் என்ற பெயரும், இன வேறுபாட்டை துாண்டுவது போன்ற, காட்சிகளும் இருப்பதாக தெரிகிறது. என் தந்தை சட்டவிரோதமான செயல்கள் எதிலும்...
நயன்தாராவை பற்றி காதலன் விக்னேஷ் சிவன் சொன்ன அதிரடி தகவல்

நயன்தாராவை பற்றி காதலன் விக்னேஷ் சிவன் சொன்ன அதிரடி தகவல்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் தற்போதைய பரபரப்பான காதல் ஜோடி இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா. இருவரும் கடந்த சில வருடங்களாக காதலர்களாக இருக்கிறார்கள். வெளிநாட்டுப் பயணம், அடிக்கடி சேர்ந்து நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் என சமூக வலைத்தளங்களில் பலரையும் பொறாமைப்பட வைத்து வருகிறார்கள். இந்தநிலையில் இன்று மீண்டும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து பொறாமைப்பட வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். தனியார் டிவியின் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் நயன்தாராவுக்கு சிறந்த நடிகை, சிறந்த நடிகை மக்கள் தேர்வு என இரண்டு விருதுகள் வழங்கப்பட்டன. 'அறம்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அந்த விருது வழங்கப்பட்டது. விருதுகளைப் பெற்ற பின்பு நயன்தாராவுடன் இருக்கும் ஒரு செல்பி புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார் விக்னேஷ் சிவன். “என் விருது மற்றும் அவருடைய விருதுகளுட...
விக்ரமின் சாமி 2 படத்தின் ட்ரைலர் விமர்சனம்

விக்ரமின் சாமி 2 படத்தின் ட்ரைலர் விமர்சனம்

Latest News, Top Highlights
கடந்த 2003ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்து ரிலீசான படம் சாமி. த்ரிஷா, விவேக், ரமேஷ் கண்ணா எனப் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரிய ஹிட். அதன் தொடர்ச்சியாக மீண்டும் விக்ரம் - ஹரி கூட்டணியில் சாமி 2 படம் உருவானது. இப்படத்தில் திரிஷாவுடன் இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று அப்படத்தின் டிரெய்லர் ரிலீசாகியுள்ளது. சாமி முதல் பாகத்தைப் போலவே இப்படத்திலும் விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். முந்தைய பாகத்தைப் போலவே இதிலும் ஆக்சன் காட்சிகள் நிறைந்திருப்பது டிரெய்லர் மூலம் தெரிகிறது. இந்த படத்தில் வில்லனாக பாபி சிம்ஹா நடித்திருக்கிறார். எனவே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. முதல் பாகத்தில் காமெடி போர்ஷனுக்கு விவேக் நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தி...
காலா ரிலீஸ் மேலும் சிக்கல் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவு படுத்தியுள்ளார் இயக்குனர் ரஞ்சித்

காலா ரிலீஸ் மேலும் சிக்கல் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவு படுத்தியுள்ளார் இயக்குனர் ரஞ்சித்

Latest News, Top Highlights
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் வரும் வியாழனன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு ரிலீசாகும் படம் என்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால், எதிர்பார்ப்புகளுக்கு இடையே எதிர்ப்புகளும் உருவாகி வருகின்றன. கர்நாடகாவில் காலா படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நி க் காலா என அழைக்கப்படும் திரவியம் நாடாரின் மகன், காலா படத்திற்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த சூழ்நிலையில், இன்று காலா படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் சென்னை மற்றும் தமிழ்நாடு நாடார் சங்கங்கள் இணைந்து மனு தர இருக்கின்றன. இதுதொடர்பாக தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்துரமேஷ் நாடார் ஒன்இந்தியாவிற் ு அளித்த பேட்டியில் கூறியதாவது: ரஜினிக்கும் எங்களுக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லை. திருநெல்வேலியில் இருந்த...
அதிக பாடல் பாடி கின்னஸ் உலக சாதனை படைத்த S.P.பாலசுப்ரமணியம் பிறந்த நாள் இன்று அவரை பற்றிய சில அறியாத விஷயங்கள்

அதிக பாடல் பாடி கின்னஸ் உலக சாதனை படைத்த S.P.பாலசுப்ரமணியம் பிறந்த நாள் இன்று அவரை பற்றிய சில அறியாத விஷயங்கள்

Latest News, Top Highlights
இன்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடும் SPB-பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ள கொகேணட்டாம் பேட்டை திருப்பதியில் படித்து முடித்து, பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம் என அழைக்கப்படுகிற எஸ்.பி.பி-க்கு சாவித்திரி என்ற மனைவி. காதல் மணம். பல்லவி, சரண் என இரண்டு குழந்தைகள். பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும் , நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். முதன் முதலாக எஸ்.பி.பி. திரைப் பாடலாகப் பாடியது `சாந்தி நிலையம்’ படத்துக்காக `இயற்கை எனும் இளைய கன்னி, ஏங்குகிறாள் துணையை எண்ணி’என்ற பாடலை பாடினார். ஆனால், திரைக்கு முதலில் வந்தது `அடிமைப் பெண்’ படப் பாடலான `ஆயிரம் நிலவே வா’ பாடல். பாடலைத் தவிர, நடிப்பிலும் அசத்தியவர். தெலுங்கு, கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்த...
`பரத் எனும் நான்’ – திரைவிமர்சனம் (தலைவன்)

`பரத் எனும் நான்’ – திரைவிமர்சனம் (தலைவன்)

Review, Top Highlights
அரசியலில் முக்கிய புள்ளியாக இருக்கும் சரத்குமாரின் மகன் மகேஷ் பாபு. மக்கள் பிரச்சனைகளுக்கு செவிசாய்க்கும், சரத்குமாரால், தனது மனைவி, மகனுடன் நேரம் செலவிட முடியவில்லை. சிறுவயதில் இருந்தே மகேஷ் பாபு, அப்பா பாசத்திற்காக ஏங்குகிறார். இப்படி இருக்க மகேஷ் பாபுவின் அம்மாவும் இறந்துவிடுகிறார். இதையடுத்து தனது மகனுக்காக அரசியல் வேலைகளை சரத்குமார் தள்ளிவைக்க, சரத்குமாரின் நெருங்கிய நண்பனும், அவரது கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பிரகாஷ்ராஜ் மகேஷ் பாபுவுக்காக, சரத்குமாரை புதிய திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார். சரத்குமாரும் இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். தனது அம்மாவை இழந்து அம்மா பாசத்திற்காக ஏங்கும் மகேஷ் பாபுவின் சித்தி, அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து பக்கத்து வீட்டில் இருக்கும் தனது நண்பனுடனேயே நேரத்தை செலவிடுகிறார். மேலும் தனது நண்பனின் வீட்டில் லண்டன் செல்ல முடிவ...
ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி படத்தின் படபிடிப்பு பூஜையுடன் ஆரம்பம்

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி படத்தின் படபிடிப்பு பூஜையுடன் ஆரம்பம்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் காலத்தால் அழிக்க முடியாத ஒரு படம் என்றால் அது ராதா மோகனின் மொழி படம் என்று சொல்லலாம் காரணம் அந்தபடத்தின் வெற்றிமட்டுமில்லை படத்தின் கதையும் தான் மக்களை மிகவும் கவர்ந்தது அதோடு இந்த படத்தின் பாடல்கள் மிக பெரிய வெற்றியை கொடுத்தது அன்று எல்லோரும் முணுமுணுக்கும் பாடல் என்றால் காற்றின் மொழி என்ற பாடல் இன்றும் பலரால் ரசிக்கும் ஒரு பாடலாக அமைந்துள்ளது . மொழி படத்துக்கு பிறகு மீண்டும் ராதாமோகன் மற்றும் ஜோதிகா மீண்டும் இணையும் படம் என்றால் அது காற்றின் மொழி இந்த படத்தில் ஜோதிகா ஒரு ரேடியோ ஜாக்கியாக நடிக்கிறார். இந்த படம் குமரி சுளு என்று ஹிந்தியில் வெளிவந்து மிக பெரிய வெற்றி பெற்ற படம் இந்த படத்தின் தமிழ் ஆக்கம் தான் காற்றின் மொழி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் விதார்த் M.S.பாஸ்கர், மோகன்ராம், மனோபாலா, மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படபிடிப்பு இன்று பூஜை...
மூன்றாவது முறையாக பிரபல நடிகையுடன் இணையும் சிவகார்த்திகேயன்

மூன்றாவது முறையாக பிரபல நடிகையுடன் இணையும் சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் பயங்கர பிஸி நடிகர் அதோடு வெற்றி நடிகன் என்றால் அது சிவகார்த்திகேயன் என்று சொல்லலாம் படத்துக்கு படம் ரசிகர்கள் பட்டாளத்தை அதிகபடுத்தும் சிவகார்த்திகேயன் திழ் சினிமாவின் ராசி நடிகர் என்று பெயர் அனால் இவருக்கு ஒரு ராசியான ஒருவர் உண்டு அவருடன் இவர் நடித்தால் படங்கள் மிக பெரிய வெற்றியை தரும். தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி தன்னுடைய நகைச்சுவை கலந்த நடிப்பால் இன்று ரசிகர்கள் மத்தியில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக அஜித் விஜய்க்கு அடுத்த இடத்தை பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா என்ற படத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்த படத்தில் தற்போது கீர்த்தி சுரேஷ் கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதனை கீர்த்தி சுரேஷும் ட்வீட் செய்து உறுதி செய்துள்ளார். ஏற்கனவே சிவாவும் ...
X வீடியோ – திரைவிமர்சனம்  (பாடம்)

X வீடியோ – திரைவிமர்சனம் (பாடம்)

Review, Top Highlights
ஒவ்வொரு மனிதனுக்கு விழிப்புணர்வு என்பது அவசியம் அது பல முறையில் ஆக்களுக்கு சொன்னலு அதை பலர் சரியாக பயன்படுத்தி கொள்வது இல்லை இதில் குறிப்பாக பெண்கள் என்று தான் சொல்லணும் அடித்து இளம் காதலர்கள் இவர்களின் விளையாட்டு தனம் எப்படி எல்லா இன்று முடிகிறது எவ்வளவு ஆபத்து என்று சொள்ளவந்துள்ள ஒரு படம் தான் எக்ஸ் வீடியோ சமுக வலைதளங்களின் ஆபத்து பலருக்கு தெரிவதில்லை தெரிந்தாலும் அதை அலட்சிய படுத்தும் பெண்களுக்கான ஒரு படம் என்று தான் சொல்லணும் இன்ற பெண்கள் பலருக்கு எத்தனை முறை சொன்னலும் கேட்பதில்லை சுக வலைதளங்களில் பல பெண்கள் தன் புகைப்படங்கள் மற்று வீடியோ வெளியிடுவதால் வாருமாபத்தை மிக தெளிவாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சஜோ சுந்தர் இந்த படத்தில் அஜய் ராஜ்,அக்ரி சிங், ரியாமிக்கா, விஷ்வா, பிரபுஜித், ஷான் , மற்று பலர் நடிப்பில் ஜோகன் இசையில் சஜோ சுந்தர் இயக்கத்தில் வெளிவந்துள்ள பட தான் X வீடியோ ...
கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாக நடிப்பேன் X வீடியோ நாயகி

கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாக நடிப்பேன் X வீடியோ நாயகி

Latest News, Top Highlights
கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிப்பதில் தவறில்லை எனத் தெரிவித்துள்ளார் எக்ஸ் வீடியோஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ள நடிகை அக்ரிதி சிங். புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி, கடந்தவாரம் ரிலீசான படம் 'எக்ஸ்- வீடியோஸ்'. சஜோ சுந்தர் என்பவர் இயக்கியுள்ள இப்படம், ஆபாச படங்கள் உருவாக்கப்படுவதற்கான பின்புலத்தில் நடக்கும் குற்றங்களின் பின்னணியைப் பற்றி பேசுகிறது. இப்படத்தின் நாயகி அக்ரிதி சிங், ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முதல் படத்திலேயே இவ்வளவு துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்ரிதி, நான் கொல்கத்தாவில் பிறந்த பெண். கடந்த நான்கு வருடங்களாக மும்பையில் செட்டிலாகி இருக்கிறேன். முதலில் மாடலிங் தான் செய்து கொண்டிருந்தேன். பின்னர் தொலைக்காட்சி விளம்பரங்கள் நடிக்க ஆரம்பித்து, மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். சில இந்தி திரைப்படங்களில் நடி...