Sunday, November 8
Shadow

Top Highlights

அஜித்துடன் மீண்டும் இணையும்அடுத்த கூட்டணி – ரகசியத்தை கசிய விட்ட யுவன்.!

அஜித்துடன் மீண்டும் இணையும்அடுத்த கூட்டணி – ரகசியத்தை கசிய விட்ட யுவன்.!

Latest News, Top Highlights
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார். விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் யாருடன் கூட்டணி அமைப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் இணைய இருந்து பின்னர் விலகி கொண்டார். இதனையடுத்து தற்போது யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றின் போது அஜித்துடன் மீண்டும் எப்போது இணைவீர்கள் என கேட்டதற்கு அடுத்த படத்தில் அஜித் மற்றும் விஷ்ணு வர்தனுடன் இணைவேன் என கூறி அஜித்தின் அடுத்த படத்தை விஷ்ணு வரதன் இயக்க இருப்பதாக சொல்லாமல் சொல்லி உள்ளார். இதனால் தல ரசிகர்கள் குஷியாகி உள்ளனர், மேலும் இந்த கூட்டணி அடுத்த படத்தில் நிச்சயம் அமையுமா? என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்....
முக்கிய அரசியல் கட்சிக்கு எதிராக உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா டிசர்

முக்கிய அரசியல் கட்சிக்கு எதிராக உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா டிசர்

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே மாஸ் தெறிக்கும். ரஞ்சித்துடன் ரஜினி கூட்டணி வைத்தபிறகு மாஸ் மட்டுமின்றி கிளாஸாகவும் செம்ம ஸ்கோர் செய்கிறார் ரஜினி. இந்நிலையில் 'காலா' டீசர் வெளிவந்து பிரமாண்ட வரவேற்பு பெற, இதில் பல குறியீடுகள் இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். வெளியானது முதலே, செம ட்ரென்டிங்கில் இருக்கும் 'காலா' டீசர் மூலம் ரஜியை வைத்து மோடியையும், பிஜேபி-யையும் விமர்சித்திருப்பதாகவும், சமூக வலைதளங்களில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினி பேசியிருக்கும் வசனங்கள் செம வைரலாகி வருகிறது. ரஜினி இப்படத்தின் புகைப்படத்தில் 'இராவண காவியம்' புத்தகத்தை மேஜையில் வைத்திருப்பது தெரிகிறது. இந்தப் புத்தகம் இராமயணத்தை எதிர்க்கும் விதமாகவும், ஆரியத்தை எதிர்த்து திராவிடம் பேசும் விதமாகவும் உருவாக்கப்பட்டது. 1946-ம் ஆண்டு வெளியான இப்புத்தகத்தை புலவர் குழந்தை எழுதினார். இந்தப் புத்தகத்தி...
பொது இடத்தில் மனைவியிடம் அடிவாங்கிய இயக்குனர் பாலா

பொது இடத்தில் மனைவியிடம் அடிவாங்கிய இயக்குனர் பாலா

Latest News, Top Highlights
இயக்குனர் பாலா என்றாலே எப்போதும் ஒரு கோபமான முகம் நம் கண்முன் வந்து செல்லும். ஏனெனில் அந்த அளவிற்கு அவருடைய படங்களின் பாதிப்பு ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கும். ஆனால், பாலா தன் குடும்பத்தினருடன் மிக ஜாலியாக தான் இருப்பாராம், இதை அவருடைய மனைவி மலர் சொன்னாலும் யாரும் கேட்பதில்லையாம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பாலா படப்பிடிப்பில் தான் அப்படி இருப்பாராம், மனைவியிடம் அடிக்கூட வாங்கியுள்ளாராம். ஒரு முறை விமானத்திற்காக பாலாவும் அவருடைய மனைவியும் காத்திருந்த போது ஒரு பெரியவர், அவர்களை கடந்து சென்றுள்ளார். பாலா அவரை பார்த்தும் கால் மேல் போட்டு உட்கார, உடனே கோபமாக அவருடைய மனைவி பாலாவை அடித்துள்ளார், பாலாவும் தன் தவறை தெரிந்துக்கொண்டு ஒன்றுமே சொல்லவில்லையாம்....
ஹிந்தி படத்தில் ஹீரோவாகும் சத்யராஜ்

ஹிந்தி படத்தில் ஹீரோவாகும் சத்யராஜ்

Latest News, Top Highlights
2004ம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி தயாரிப்பில் ஷிவ்ராஜ் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் "அடிதடி". மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி பிரம்மாண்டமான ஒரு படத்திற்காக இணைந்துள்ளது. "சினிமா நடிகனும் அரசியல்வாதியும்" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தர் பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றார். இப்படத்தின் கதை, வசனத்தை இயக்குநர் செல்வபாரதி எழுதத் திரைக்கதை அமைத்து இயக்குகிறார் ஷிவ்ராஜ் ஒரு சினிமா நடிகன் அரசியல்வாதியாக ஆகிய போது என்னென்ன நிகழ்வுகள் நடந்தன, நடக்கின்றன, நடக்கும் என்பதை அரசியல் நையாண்டியுடன் நகைச்சுவை கலந்து முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகிறது "சினிமா நடிகனும் அரசியல்வாதியும்". தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் ...
யாழ் – திரைவிமர்சனம் (சிறப்பான படம் )

யாழ் – திரைவிமர்சனம் (சிறப்பான படம் )

Review, Top Highlights
இலங்கை தமிழர்கள் என்றாலே பாவம் அவர்களுக்கு அந்த நாட்டில் மட்டும் பிரச்சனை இல்லை நம் நாட்டிலும் தான் அவர்களை படம் எடுத்தல் கூட நம் நாட்டில் பிரச்னை தான் ஆம் இலங்கை தமிழர்களை பற்றிய படம் எடுத்தால் பல பிரச்சனைகளை அந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் சந்திக்கணும் அவர்களுக்கு ஏன் இந்த பிறவி என்று சொல்லும் அளவுக்கு தான் பிரச்சனைகள் வரும் இலங்கை தமிழ்கள் பற்றிய சரியான ஒரு ஆவன படம் கூட வருவதில் சிக்கல் அப்படியான பல சிக்கலை சந்தித்து வெளியாகி இருக்கும் இக சிறந்த படம் எந்த வித அரசியல் நோக்குகள் இல்லாமல் எந்த ஒரு தலைவனை குறிப்பிடாமல் வந்துள்ள படம் தான் யாழ் அப்படி இருந்தும் இந்த சிறந்த படம் பல இடைஞ்சல்கள் பின் தான் வெளியாகியுள்ளது. யாழ் படத்தின் இயக்குனரை முதலில் இருகரம் கூப்பி வணங்கிவிட்டு இந்த படத்தை பற்றி பார்ப்போம். யாழ் என்பது ஒரு இசைக்கருவி என்பது நாம் அறிந்த விஷயம் இந்த யாழ் இசைக்க...
கண் தானம் செய்த அமலாபால் அதோடு இலவச கண் சிகுச்சைக்கு நிதியும் திரட்டுகிறார்

கண் தானம் செய்த அமலாபால் அதோடு இலவச கண் சிகுச்சைக்கு நிதியும் திரட்டுகிறார்

Latest News, Top Highlights
பெரும்பாலான இளைஞர்களுக்கு உந்துதலாக இருக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கு நடிப்பது மட்டுமில்லாமல் இந்த இளைஞர்களை வழிப்படுத்தும் பொறுப்பும் உள்ளது. திரையை தாண்டி அவர்களது பொறுப்பு நீள்கிறது என்பதை நடிகை அமலா பால் தற்பொழுது நிரூபித்துள்ளார். கஷ்டப்படும் மக்களுக்கு சேவை செய்வதில் என்றுமே ஆர்வம் காட்டும் அவர் தற்பொழுது 'அமலா ஹோம்' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான நிதியை திரட்டுவது போன்ற விஷயங்களில் ஈடுபடவுள்ளது. இது குறித்து நடிகை அமலா பால் பேசுகையில் , '' அகர்வால் கண் மருத்துவமனைக்காக நான் ஒரு மேடை பேச்சுக்கு தயார் செய்து கொண்டிருந்தபொழுதுதான் சில முக்கியமான புள்ளிவிவரங்களை நான் கவனித்தேன். உலகம் முழுவதும் 30 மில்லியன் மக்கள் குருட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். மேலும் அதிர்ச்சியூட்டும்...
தளபதி விஜய் ரசிகர்கள் செய்த நலத்திட்ட உதவிகள் !

தளபதி விஜய் ரசிகர்கள் செய்த நலத்திட்ட உதவிகள் !

Latest News, Top Highlights
தென்னிந்திய சினிமாவில் தளபதி விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளம் இருக்கிறது.இவர் சமுதாயத்தில் மிக எளிமையுடன் மேலோங்கி இருப்பவர் மட்டும் சமூம் மேலோங்க வேண்டும் என நினைப்பவர். விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் தளபதி ரசிகர்கள் எண்ணிலடங்கா நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். அதேபோல் இன்று மதுரை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாண்டியன் கிழக்கு ஒன்றியம் சூர்யா அவர்கள் சார்பாக ஏற்பாடு செய்த நலத்திட்டஉதவிகள் : *100 வேஷ்டிகள் மற்றும் 100 சேலைகள் , *40 சில்வர் பாத்திரங்கள் , *50 சில்வர் குடங்கள் , *10 மண்வெட்டிகள் , *1 கன்றுக்குட்டி இவை அனைத்தையும் மதுரை மேலூரில் உள்ள ஒத்தகடை பகுதியில் மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி மற்றும் மேலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் குஷிகுமார் சார்பாக அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் திரு.புஸ்ஸி .N .ஆனந்த் (EX .MLA ) அவர்கள் வழங்கினார்.. இந்த நல...
அஜித்தின் விஸ்வாசம் இதுவரை வெளிவராத ஆச்சர்ய அப் டேட் மற்றும் திரைகதை

அஜித்தின் விஸ்வாசம் இதுவரை வெளிவராத ஆச்சர்ய அப் டேட் மற்றும் திரைகதை

Latest News, Top Highlights
அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கவுள்ளது. இந்தப் படத்திற்காக பல கோடி ரூபாய் செலவில் இரண்டு மிகப்பெரிய ஸ்டூடியோக்களில் செட் போடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படததைப் பற்றிய சர்ப்ரைஸ் செய்திகள் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ளது. 'அஜித் 58' படத்தின் பெரும்பாலான பகுதி படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெறவுள்ளது. இதே ஸ்டூடியோவில்தான் 'வீரம்' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வீரம், வேதாளம் ஆகிய இரண்டு படங்களிலும் ஒரு நல்ல வலுவான பிளாஷ்பேக் காட்சிகள் இருந்தன. அதைபோல் அரைமணி நேர பிளாஷ்பேக் இந...
சூப்பர்ஸ்டார் காலா படம் டீசர் செய்துள்ள மாபெரும் சாதனை

சூப்பர்ஸ்டார் காலா படம் டீசர் செய்துள்ள மாபெரும் சாதனை

Latest News, Top Highlights
காலா டிசர் மிக பெரிய சாதனையை உண்டுபண்ணியுள்ளது என்று தான் சொல்லணும் காரணம் டீசர் வெளியாகி சில மணி நேரங்களில் மிக பெரிய அளவில் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர் நேற்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட காலா டீஸர் நேற்று இரவே லீக்கானதால் அதிர்ச்சியான படக்குழு அரக்கப்பறக்க டீசரை அதிகாரபூர்வமாக வெளியிட்டது. திடீரென வெளியானதால் அந்தவிடியோவுக்கு குறைந்த அளவுக்கு மட்டுமே வியூஸ் கிடைத்துள்ளது. பல சாதனைகள் படைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. 18 மணி நேரத்தில் 9.7 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த டீசர் இதுவரை 10,244,905 பார்த்துள்ளனர்...