Sunday, November 8
Shadow

Top Highlights

பிறந்தநாளில் வரலட்சுமியை குஷியில் ஆழ்த்திய விஜய் படக்குழு

பிறந்தநாளில் வரலட்சுமியை குஷியில் ஆழ்த்திய விஜய் படக்குழு

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 62’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்கள் கூட்டணியில் பிரபல அரசியல்வாதி பழ கருப்பையாவும், ராதாரவியும் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்நிலையில், நடிகை வரலட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரலட்சுமி பிறந்த நாளான இன்று விஜய் படத்தில் நடிப்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருப்பது, அவருக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசாக அமைந்திருக்கிறது....
கபாலி பட விநியோக உரிமை  பிரச்சனைக்கு பதில் சொன்ன கலைப்புலி எஸ் தாணு

கபாலி பட விநியோக உரிமை பிரச்சனைக்கு பதில் சொன்ன கலைப்புலி எஸ் தாணு

Latest News, Top Highlights
கபாலி பட விநியோக உரிமை தருவதாகச் சொல்லி பணம் வாங்கிவிட்டு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஏமாற்றிவிட்டார் என ஜி.பி. செல்வகுமார் என்பவர் தீடீர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இது தொடர்பாக இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு விளக்கமளித்துள்ளார். ஜி.பி.செல்வகுமாருக்கும், கபாலி படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை செல்வகுமார் கபாலி படத்தை வாங்கவில்லை, விநியோகஸ்தர் வேணுகோபாலுக்கு சாட்சி கையழுத்து போட வந்தவர் தான் செல்வக்குமார் .அவர் அழைத்து வந்த வேணுகோபால் என்பவர் தான் வாங்கினார். அவருக்கும் எனக்குமான பணபரிவர்த்தனைகள் வெளிப்படையாகவும் ,நேர்மையாகவும் நடந்து வந்திருக்கின்றன. இது வரை, ரூ 61 லட்சம்  அவருக்கு நேரடியாகவும், சேலம் பகுதியில் அவர் தியேட்டர் எடுத்த வகையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அவருக்கு நான்  உதவியிருக்கின்றேன் என கலைப்புலி எஸ் தாணு  ...
ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன், நாளை முதல் ரஜினிகாந்த் 4 நாட்கள் ஆலோசனை முக்கிய முடிவுகள்

ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன், நாளை முதல் ரஜினிகாந்த் 4 நாட்கள் ஆலோசனை முக்கிய முடிவுகள்

Latest News, Top Highlights
தமிழக அரசியல் களம், நடிகர்கள் ரஜினி, கமல் வருகையால் விறுவிறுப்பு அடைந்துள்ளது. திரைத்துறையில் அவர்கள் இருவருக்கும் இடையே எப்படி போட்டி இருந்ததோ, அதே போன்று அரசியலிலும் உருவாகியுள்ளது. கமல்ஹாசன் கடந்த மாதம் “மக்கள் நீதி மய்யம்” என்ற புதிய கட்சியை மதுரையில் தொடங்கினார். இதைத் தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர்களை நியமனம் செய்து, கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியை அவர் தீவிரப்படுத்தியுள்ளார். அடுத்து அவர் அடுத்த மாதம் (ஏப்ரல்) திருச்சியில் கட்சி மாநாட்டை நடத்த உள்ளார்.     கமல்ஹாசனின் கட்சி நடவடிக்கைகள் தீவிரமாகி வருவதால், ரஜினியின் கட்சிப் பணிகள் எப்போது தீவிரம் பெறும் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் ரஜினி, புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பு தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை முதலில் ஒருங்கிணைக்க முடிவு ச...
மீண்டும்  “நீயா2”  ஜெய்  ஜோடியாக வரலட்சுமி – ராய்லட்சுமி –  கேத்ரின்  தெரேச

மீண்டும்  “நீயா2”  ஜெய்  ஜோடியாக வரலட்சுமி – ராய்லட்சுமி –  கேத்ரின்  தெரேச

Latest News, Top Highlights
  கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979 – ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம்.  “நீயா“ இன்று வரை ஹிட்டான ஹாரர் மூவி படங்களுக்கு “நீயா” ஒரு முன் உதாரணம் என்று சொல்லலாம். மீண்டும் 39 – வருடங்களுக்கு பின் அதே பெயரில் “நீயா2” படம் பிரமாண்டமாக தயாராகிவருகிறது . கதைக்கு தேவைப்பட்டதால் “நீயா2” என்று பெயர் வைத்துள்ளேன் என்கிறார், இதன் இயக்குநர் L.சுரேஷ் . இதில் ராஜநாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. 22 – அடி நீளம் கொண்ட இந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறும்கிறது. இதன் தோற்றத்தை முடிவு செய்ய நானும் கேமராமேனும் இந்தியா , தாய்லாந்து நாடுகளில் தேடினோம். இறுதியாக பேங்காக்கில் ஒரு ராஜநாகத்தை பார்த்தோம். அதன் அமைப்பு , உடல்மொழி , தன்மை என அனைத்தையும் பார்த்தும், கேட்டும்  தெரிந்துகொண்டோம். படம் முழுக்க வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக இதன் காட்சிகள் அமைந்துள்ளத...
புதிய கோணத்தில் காதலை சொல்ல வரும் அபியும் அனுவும்

புதிய கோணத்தில் காதலை சொல்ல வரும் அபியும் அனுவும்

Latest News, Top Highlights
சரிகம வழங்கும் யூட்லி ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் அபியும் அனுவும். தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், பிரபு, சுஹாசினி, ரோகிணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தரண் இசையமைத்திருக்கும் இந்த படத்தை பி ஆர் விஜயலக்‌ஷ்மி இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த மாதிரி ஒரு கதையை சொல்லி, திரைக்கதை அமைக்க சொல்லி கேட்டார். இந்த காலத்துக்கு தேவையான ஒரு படம், நிச்சயம் வெற்றி பெறும் என்றார் திரைக்கதை எழுதியிருக்கும் உதயபானு மகேஷ்வரன். இந்த நல்ல வாய்ப்பை கொடுத்த விஜயலக்‌ஷ்மி மற்றும் சரிகம நிறுவனத்துக்கு நன்றி. இது எனக்கு ரொம்பவே சவாலான படம். இந்த கதாபாத்திரத்தை செய்ய எனக்கு எந்த படமும் இன்ஸ்பிரெஷனாக இல்லை. ரொம்பவே நேர்மையான படம், சமூகத்தில் நிறைய கேள்விகளை முன்வைக்கும். இதில் நடித்தது பெருமையான வ...
இந்திய திரையுலக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆஸ்கார் விழா

இந்திய திரையுலக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆஸ்கார் விழா

Latest News, Top Highlights
சினிமாத் துறையின் மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுவது ஆஸ்கார் விருது. இந்த ஆண்டு 90வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட், டால்பி தியேட்டரில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த நடிகர்களுக்கு கௌரவம் செய்யப்பட்டது இந்திய திரையுலக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமான இந்தி நடிகர் சசி கபூர் ஆகியோருக்கும் ஆஸ்கார் விழாவில் மரியாதை செலுத்தப்பட்டது. இது குறித்து இந்தியத் திரை உலகைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்....
பரத்துடன் இணைந்த ஆண்ட்ரியா

பரத்துடன் இணைந்த ஆண்ட்ரியா

Latest News, Top Highlights
பரத் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘காளிதாஸ்’. ஸ்ரீசெந்தில் என்பவர் இயக்கி வரும் இதில் பரத் போலீஸ் அதிகாரியாக வலம் வரவுள்ளார். இன்னொரு ஹீரோவாக ஆதவ் கண்ணதாசன் நடிக்கிறார். ஹீரோயினாக மலையாள நடிகை அன் ஷீத்தல் நடிக்கிறாராம். மேலும், முக்கிய வேடத்தில் சுரேஷ் மேனன் நடித்து வருகிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்து வரும் இதற்கு சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதனை தினகரன் – சிவநேசன் இணைந்து தயாரித்து வருகின்றனர். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை பிரபல நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ ரிலீஸ் ஆகும் என எதிர்...
மிரட்டலான ‘2.0’ மேக்கிங் வீடியோ ஒரு பார்வை

மிரட்டலான ‘2.0’ மேக்கிங் வீடியோ ஒரு பார்வை

Latest News, Top Highlights
‘கபாலி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’, பா.இரஞ்சித்தின் ‘காலா’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 3 படங்கள் உள்ளது. இதில் ‘எந்திரன்’ படத்தின் 2-ஆம் பாகமான ‘2.0’வை ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நேற்று காலை படத்தின் அதிகாரப்பூர்வமற்ற டீசர் சமூக வலைதளங்களில் லீக்காகி படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது, படத்தின் புதிய மேக்கிங் வீடியோவை ‘2.0’ டீம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. https://youtu.b...
விஜய்க்கு வில்லனான அரசியல்வாதி

விஜய்க்கு வில்லனான அரசியல்வாதி

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 62’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சன் நெட்வொர்க் அலுவலகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய் கருப்பு நிற கோர்ட் ஷூட் போட்டு கண்ணாடி அணிந்து மிகவும் ஸ்டைலாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது. இதையடுத்து நேற்று சென்னை தியாகராய நகர், வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தில் விஜய் மல்டி மில்லியனராக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், இவர்கள் கூட்டணியில் பிரபல அரசியல்வாதி பழ கருப்பையாவும் இணைந்திருக்கிறார். இவர் இப்படத்தில் வி...
ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு: யாருக்கு என்னென்ன விருது?

ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு: யாருக்கு என்னென்ன விருது?

Latest News, Top Highlights
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வண்ணமயமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 24 பிரிவுகளில், ஒவ்வொன்றாக ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. அதில், சிறந்து துணை நடிகருக்கான விருது சாம் ராக்வெல் க்கு வழங்கப்பட்டது. திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங் மிசௌரி என்ற படத்தில் நடித்ததற்காக அந்த விருது சாம் ராக்வெல்க்கு வழங்கப்பட்டது. சிறந்த சிகை மற்றும் ஒப்பனை அலங்காரத்துக்கான ஆஸ்கர் விருது மூன்று பேருக்கு கிடைத்துள்ளது. டார்க்கஸ்ட் ஹவர் படத்தில் சிகை அலங்காரம் செய்த கசூரியோ சுஜி, டேவிட் மலினோஸ்கி, லூசி சிபிக் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இப்படத்தில் வின்ஸ்டன் சர்ச்சில் கதாபாத்திரத்தில் நடித்த கேரி ஓல்ட்மேன் உள்ளிட்ட நடிகர்களுக்கு தத்ரூபமான சிகை மற்றும் ஒப்பனை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில், இரண்டு ஆஸ்கர் விருதுகளை டன்க...