Sunday, November 8
Shadow

Top Highlights

வித்யா பாலன் படத்தில் ஜோதிகா

வித்யா பாலன் படத்தில் ஜோதிகா

Latest News, Top Highlights
சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா, ‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் தனது ரீஎண்ட்ரி ஆனார். அந்தபடம் நல்ல வரவேற்பை பெற்றதால், தொடர்ந்து மகளிர் மட்டும் படத்திலும் நடித்தார். தற்போது ஜோதிகா நடிப்பில் ‘நாச்சியார்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக மணிரத்தினத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் அவர் நடிக்கிறார். இந்நிலையில் வித்யா பாலன் நடிப்பில் வெளியாகிய ‘தும்ஹரி சுளு’ என்ற இந்திப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் திருமணமான நடுத்தர வயதுப் பெண்ணான வித்யா பாலனின் குறிக்கோளும், ரேடியோ ஜாக்கி ஆகி சாதிப்பதும் தான் படத்தின் கதையாகும். வித்யா பாலன் நடித்துள்ள வேடத்தில் ஜோதிகா நடிப்பார் என்றும், இந்தப் படத்தை ராதா மோகன் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் பிரித்விராஜ், ஜோதிகா, பிரகாஷ் ராஜ் நடித்த...
நட்புக்காக தயாரிப்பாளர் ஆன சிவகார்த்திகேயன்

நட்புக்காக தயாரிப்பாளர் ஆன சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
தன்னுடைய கடும் உழைப்பு மற்றும் பணிவான குணத்தால் மிகப்பெரிய உயரத்திற்கு சென்று பல நடுத்தர குடும்ப இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக மாறும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். பால்ய காலத்தில் இருந்து இன்று வரை சிவாவின் நெருங்கிய நண்பனாகவும், சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடலின் மூலம் மிகவும் பிரபலமான அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தை தான் சிவா தயாரிக்கிறார். கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் இந்த படம் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் மகளுக்கும், ஆதரவான அப்பாவுக்கும் இடையில் நடக்கும் கதையை மையப்படுத்தியது. திரைத்துறை தான் எனக்கு பெயரும், புகழும் கொடுத்தது. இந்த துறைக்கு நான் நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். சாதிக்கும் கனவில் நாங்கள் சுற்றிய போது எல்லா நிலைகள...
ஒரு ரசிகையாகவே விஜய்யுடன் நடிக்கிறேன் – கீர்த்தி சுரேஷ்

ஒரு ரசிகையாகவே விஜய்யுடன் நடிக்கிறேன் – கீர்த்தி சுரேஷ்

Latest News, Top Highlights
விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், இப்போது மீண்டும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாகி இருக்கிறார். இதுபற்றி கீர்த்தி சுரேஷ் பேசும் போது, “மீண்டும் விஜய் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை என்னுடன் நடிக்கும் நடிகராக எப்போதும் பார்க்க முடியாது. அவருடன் நடிக்கும் போது எனக்கு பிடித்த நடிகருடன் இருக்கும் ரசிகையாகவே என்னை நினைத்துக் கொள்கிறேன். நான் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘மகாநதி’யில் நடித்திருக்கிறேன். நாக் அஸ்வின் இதை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிக்க தொடங்கியபோது மேக்கப்போட மட்டும் மூன்றரை மணி நேரம் ஆனது. பின்னர் அது பழகிப்போனது. சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அவ்வளவு பெரிய நடிகை பாத்திரத்தில் நடிக்க பயமாக இருந்தது. இப்போது இந்த படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. சாவித்ரி மகளிட...
இதை யாரும் நம்பாதீர்கள் – ஓவியா

இதை யாரும் நம்பாதீர்கள் – ஓவியா

Latest News, Top Highlights
ஓவியா தற்போது ராகவா லாரன்சுடன் ‘காஞ்சனா 3’ , விமலுடன் ‘களவாணி-2’, சிம்பு இசை அமைக்கும் ‘90எம்.எல்’ படங்களில் நடித்து வருகிறார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு ‘மார்க்கெட்’ சூடு பிடித்திருக்கும் நிலையில் ஓவியா தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்று தகவல்கள் வெளியாகின. இதுபற்றி கூறிய அவர்.... “என்னைப்பற்றி யாரோ தவறான செய்தியை திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நான் சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறுவது தவறான தகவல். நான் எந்த தயாரிப்பாளரிடமும் இவ்வளவு சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன் என்று சொல்வதே இல்லை. ‘களவாணி-2’ படத்தில் நடிக்க நான் அதிக சம்பளம் கேட்டதாகவும், இதனால் வேறு நடிகையை அந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் என்றும் வதந்தியை பரப்பிவிட்டார்கள். ஆனால், இப்போது அந்த படத்தில் நான் தான் நடிக்கிறேன். இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகள் நிறைய வெ...
சூப்பர் ஸ்டாரின் ஒத்த வார்த்தைக்காக காத்திருக்கும் மூன்று  இயக்குனர்கள்

சூப்பர் ஸ்டாரின் ஒத்த வார்த்தைக்காக காத்திருக்கும் மூன்று இயக்குனர்கள்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகராக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நடித்து முடித்துள்ள காலா, 2.O ஆகிய படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. சூப்பர்ஸ்டார் என்றாலே ஒருவித புத்துனர்வு தமிழ் சினிமாவில் தடம்பதித்து விட்டு சூப்பர்ஸ்டாருடன் நடிக்கவோ இல்லை இயக்கவோ செய்யவில்லை என்றால் அது தமிழ் சினிமாவுக்கு வந்ததுக்கு பயன் இல்லாமல் போய்விடும் அப்படிதான் இன்று நடக்கும் போட்டியும் எங்கு அரசியலுக்கு போய்விட்டாள் நடிக்க மாட்டாரோ என்று போட்டி போடும் மூன்று இயக்குனர்கள் இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேலும் ஒரு அரசியல் படத்தில் நடிக்க உள்ளாராம். அதற்காக இளம் இயக்குனர்களாக அட்லீ, அருண் பிரபு, கார்திக் சுப்புராஜ் ஆகியோரிடம் கதை கேட்டுள்ளார். மேலும் மூவரிடமும் விரைவில் பதில் சொல்வதாக கூறி அனுப்பியுள்ளார், ரஜினியின் ஒத்த வார்த்தைக்காக மூவருமே காத்துக் கொண்டிருக்கிறார்...
தமிழ் மண்ணின் மண்வாசம் தான் கலர்ஸ் சேனல்

தமிழ் மண்ணின் மண்வாசம் தான் கலர்ஸ் சேனல்

Latest News, Top Highlights
இந்தியாவின் முன்னணி மீடியா நிறுவனமான வையாகாம் 18, இந்தியா முழுக்க பல்வேறு மொழிகளில் தொலைக்காட்சி சேனல்களை நடத்தி வருகிறது. அதில் கலர்ஸ் தொலைக்காட்சி மிகவும் பிரபலமானது. இந்தி, மராத்தி, கன்னடம், குஜராத்தி, ஒரியா, வங்காள மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் கலர்ஸ் சேனல், தற்போது தமிழிலும் ஒளிபரப்பாக இருக்கிறது. பிப்ரவரி 19ஆம் தேதி முதல் ஒளிபரப்பு சேவையை துவக்க இருக்கும் கலர்ஸ் சேனல் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இன்னும் 24 மணிநேரத்தில், பிப்ரவரி 19 மாலை 7 மணிக்கு ஒளிபரப்பை துவக்குகிறது கலர்ஸ் தமிழ் சேனல். எற்கனவே கலர்ஸ் இந்தி, கன்னடத்தில் நம்பர் 1 இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. மக்கள் எங்களை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள். இந்தியாவில் கேபிள் விநியோகத்தில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் இருக்கிறது. அப்படிப்பட்ட தமிழகத்...
தளபதியின் மெர்சல் திரைப்படத்தின் சாதனைகள்

தளபதியின் மெர்சல் திரைப்படத்தின் சாதனைகள்

Latest News, Top Highlights
தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றியையும் ,வசூல் சாதனையும் படைத்தது. தென்னிந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்பட்ட பட டீசர்களில் மெர்சல் டீசர் முதல் இடத்தை பிடித்துள்ளது . டீசர் 24 மணி நேரத்தில் 11.21 மில்லியன் Views தொட்டு சாதனை படைத்துள்ளது . தென்னிந்திய அளவில் அனைவராலும் U-TUBE இல் பார்க்கப்பட்ட விடீயோஸ் மற்றும் அதிக LIKES பெற்ற வீடியோகளில் மெர்சல் படம் முதல் இடத்தை பெற்றுள்ளது. *அதிக அளவில் பார்க்கப்பட்ட லிரிக்ஸ் சாங் *அதிக அளவில் லைக் செய்யப்பட்ட லிரிக்ஸ் சாங் *அதிக அளவில் பார்க்கப்பட்ட ஆடியோ டீஸர் *அதிக அளவில் லைக் செய்யப்பட்ட வீடியோ சாங் *மிக விரைவில் பார்க்கப்பட்ட 20 மில்லியன் வீடியோ சாங் *அதிக அளவில் லைக் செய்யப்பட்ட ப்ரோமோ சாங் தளபதி விஜயின் கடைசி 10 படங்களில் கேரளா BOX OFFICE கால...
ஆர்யாவுக்கு சுயம்வரம் நடத்தும் “கலர்ஸ் சேனல்”

ஆர்யாவுக்கு சுயம்வரம் நடத்தும் “கலர்ஸ் சேனல்”

Latest News, Top Highlights
கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஆர்யா, "அறிந்தும் அறியாமலும்" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு உள்ளம் கேட்குமே, நான் கடவுள், மதராச பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், வேட்டை உள்பட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் ரோமியோ என்றும் இவரை அழைப்பார்கள் இவரின் திருவிளையாடலை பார்த்து எல்லறோம் இவருக்கு எப்போது திருமணம் என்று கேட்பார்கள். அதே போல இவர் பழகும் பெண்களுடன் இவரையும் அந்த பெண்ணையும் சேர்த்து உடனே கிசு கிசு வர ஆரம்பித்துவிடும் அப்படியான பட்டியல் அதிகம் இவரின் திருமணம் இப்போ அப்போ என்று தள்ளிப்போனது. தற்போது மார்க்கெட் அவருக்கு சாதகமாக இல்லை எனவே திருமணத்துக்கு பெண் தேடுகிறேன் என்று கூறினார் அதற்காக ஒரு வீடியோ வெளியிட்டார் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது அதோடு அதற்கான ஒரு வெப்சைட் ஒன்றும் ஆரம்பித்து விருப்பம் உள்ளவர்கள் வி...
விமல் பட தயாரிப்பாளர்களுக்கு இனி கவலை இல்லை..!

விமல் பட தயாரிப்பாளர்களுக்கு இனி கவலை இல்லை..!

Latest News, Top Highlights
கடந்த ஜனவரியில் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படம் வெளியாகி 25 நாட்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதன்பிறகு வெளியான படங்கள் கூட தியேட்டரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையிலும், போட்டிக்கு புதிதாக பல படங்கள் வெளியான நிலையிலும் ‘மன்னர் வகையறா’வுக்கான வரவேற்பு இன்னும் குறையவே இல்லை என்கிறார்கள் வினியோகஸ்தர்கள். மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய விமலும், படத்தை இயக்கிய பூபதி பாண்டியனும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்றாலும் இதன் பின்னணியில் வெற்றிக்கான முக்கிய தூணாக இருந்துவருபவர் தான் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்கார வேலன். குறிப்பாக ‘மன்னர் வகையறா’ பட ரிலீசின்போது விமலின் ‘ஜன்னலோரம்’ பட இழப்பீடு விவகாரம் தலைதூக்க, தனது கையில் இருந்து 2 கோடி ரூபாய் கொடுத்து எந்தவித சிக்கலுமின்றி ‘மன்னர் வகையறா’ வெளிவர உதவினார் சிங்காரவேலன். அடுத்ததாக விமலின் நடிப்பில் தயாராகிவரும் ‘கன்ன...
அரசியலில் கமல் ரஜினிகாந்த்  கூட்டணி விவகாரம் முற்றுபுள்ளி வைத்த ரஜினிகாந்த்

அரசியலில் கமல் ரஜினிகாந்த் கூட்டணி விவகாரம் முற்றுபுள்ளி வைத்த ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
நடிகர் கால்ஹாசனும் ரஜினிகாந்த் இந்த இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் எல்லாமே காவியங்கள் அதோடு மிக சிறந்த வெற்றி படங்கள் இந்த நேரத்தில் தான் இருவரும் பிரிந்து நடிப்போம் என்ற முடிவை எடுத்தனர் இந்த முடிவு இருவரையும் தமிழ் சினிமாவின் உச்சத்துக்கு கொண்டு சென்றது தற்போது இருவரும் தனி தனி கட்சி ஆரம்பித்துள்ளனர் இதனால் இந்த இருவரும் கூட்டணி வைப்பார்கள் என்று பலர் எதிர்பார்க்கபடுகிறது அனால் அதுக்கு ரஜினிகாந்த் முற்றுபுள்ளி வைத்துள்ளார் நடிகர் கமல் வருகிற 21-ந்தேதி ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்காம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அதன்பின் மதுரை கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்காக ரஜினியை, அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார் கமல். கமல் அழைப்பு குறித்து ரஜினி கூறும்போது, ‘என்னுடைய நண்பர் கமல் ...