Sunday, November 8
Shadow

Top Highlights

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஆசை -ஸ்ரத்தா ஸ்ரீநாத்

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஆசை -ஸ்ரத்தா ஸ்ரீநாத்

Latest News, Top Highlights
விக்ரம் வேதா, இவன் தந்திரன் படங்களில் நடித்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். சினிமா அனுபவங்கள் குறித்து ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறியதாவது:- “என் தந்தை ராணுவ அதிகாரி, அம்மா ஆசிரியை. நான் சட்டம் படித்து இருக்கிறேன். கல்லூரியில் படித்தபோதே சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. அது கவர்ச்சியான உலகம் என்று பெற்றோர் பயந்தனர். பின்னர் அவர்களை சம்மதிக்க வைத்து நடிக்க ஆரம்பித்தேன். நான் மணிரத்னம் படங்களை பார்த்து வளர்ந்தவள். அவரது படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கம் எல்லோருக்கும் இருக்கும். இந்த நிலையில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்க அழைப்பு வந்தது. உடனே ஒப்புக்கொண்டு நடித்தேன். அவர் படத்தில் நடித்ததை பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். விக்ரம் வேதா படத்தில் சிறப்பான கதாபாத்திரம் அமைந்தது. நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்த பெண...
பொது மேடையில் ரசிகருக்கு முத்தம் கொடுத்த ஓவியா

பொது மேடையில் ரசிகருக்கு முத்தம் கொடுத்த ஓவியா

Latest News, Top Highlights
நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் மக்களிடையே செல்லப் பிள்ளையாக மாறிவிட்டார். இதனால், இவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், நடிகை ஓவியா மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது, அவர் மேடையிலிருந்த போது, ரசிகர் ஒருவர் அவரிடம் தன் பெயரை மூன்று முறை சொல்லுமாறு கேட்டுள்ளார். அதற்கு ஓவியா அவர் கன்னத்தில் முத்தமிட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தார். அதன்பின், மீண்டும் மேடைக்கு வந்த அவரை ஓவியா கட்டிப்பிடித்து, அனைவரையும் வாயை பிளக்க வைத்தார். தற்போது, அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது....
சிங்கத்திற்குப் பிறந்தது பூனையாகுமா?

சிங்கத்திற்குப் பிறந்தது பூனையாகுமா?

Latest News, Top Highlights
சூர்யா-ஜோதிகா தம்பதியினர் நடிப்பில் தூள் கிளப்புவார்கள் என்பது அனைவரும் அறிந்த வி‌ஷயம். இவர்களுடைய மகள் தியா, மகன் தேவ் ஆகியோரும் நடிப்பில் அசத்துகிறார்கள் என்ற விவரம் இப்போது வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் பாடகி ஷாலினி குழந்தைகளுக்கான மேடை நிகழ்ச்சி நடத்தினார். இதில் சூர்யாவின் குழந்தைகள் 2 பேரும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில், சூர்யா மகன் தேவ் மேடை நடிகருடன் வாள் ஏந்தி சண்டை போடும் வீடியோ காட்சியும், புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. மகள் தியா மேடை நாடகத்தில் நடித்த புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. இருவரும் முக பாவனைகளையும், உடல் அசைவுகளையும் அருமையாக வெளிப்படுத்தி இருப்பது இந்த வீடியோ, புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. சூர்யா ரசிகர்கள் தியா, தேவ் நடித்த வீடியோவையும் புகைப் படங்களையும் இணைய தளங்களில் வெளியிட்டு சிங்கத்துக்கு, பிறந...
சீமைக்கு ராஜாவான சிவகார்த்திகேயன்

சீமைக்கு ராஜாவான சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
மோகன் ராஜாவின் ‘வேலைக்காரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் கைவசம் பொன்ராம் படம், ‘இன்று நேற்று நாளை’ ரவிகுமார் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் புதிய படங்கள் உள்ளது. இதில் பொன்ராம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். ஏற்கெனவே, சிவா – பொன்ராம் காம்போவில் ரிலீஸான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினி முருகன்’ மெகா ஹிட்டானது. ஆகையால், இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களிடை அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இப்படத்திற்கென சமந்தா பிரத்யேகமாக சிலம்பம் பயிற்சி மேற்கொண்டாராம். மேலும், சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, யோகி பாபு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறார்கள். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். ’24 AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா இதன...
தளபதி 62 படத்தின் மைய கரு எங்கு நடக்கிறது தெரியுமா ?

தளபதி 62 படத்தின் மைய கரு எங்கு நடக்கிறது தெரியுமா ?

Latest News, Top Highlights
விஜய் - முருகதாஸ் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. இப்போது, 3-வது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவரது 62-வது படம். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘மெர்சல்’ படத்தை அடுத்து இந்த படத்துக்கும் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். கடந்த மாதம் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. அப்போது ஒரு பாடல் காட்சி படமானது. பின்னர் மொத்த படக்குழுவும் கொல்கத்தா சென்றது. அங்கு அதிரடி சண்டை காட்சிகளும் வேறுசில காட்சிகளும் படமாகின. இந்த படத்துக்கு முதல் முறையாக தெலுங்கு பட உலகின் பிரபல ரெட்டையர்கள் ராமன்-லட்சுமண் சண்டை காட்சியை அமைத்து வருகிறார்கள். கொல்கத்தாவில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. தற்போது காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. அடுத்து படத்தி...
டுவிட்டரில் வருத்தம் தெரிவித்த ரஜினிகாந்த்

டுவிட்டரில் வருத்தம் தெரிவித்த ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களுக்கிடையே நீண்ட காலமாக நீடித்து வரும் காவிரி நீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதில் காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமை இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாட்டிற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டனர். இதில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அரசியலில் தீவிரமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த்தும் இதுகுறித்து டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார். அதில் காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கருத்து த...
நயன்தாராவை ஓவர்டேக் செய்த ஓவியா

நயன்தாராவை ஓவர்டேக் செய்த ஓவியா

Latest News, Top Highlights
சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் லேடி சூப்பர் ஸ்டாரை நயன்தாராவை முந்தி ஓவியா முதலிடத்தை பிடித்திருக்கிறார். தனியார் பத்திரிகை ஒன்று 2017-ஆம் ஆண்டின் விரும்பப்பட்ட பெண் யார் என்று ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. அதல் முடிவு தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் நடிகை ஓவியா முதலிடத்தை பிடித்திருக்கிறார். 2017-ல் 3 வெற்றிப்படங்களை கொடுத்தும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இரண்டாவது இடம் தான் கிடைத்துள்ளது. அந்த அளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியா மிகவும் பிரபலமாகிவிட்டார். அவருக்கென ரசிகர் பட்டாளமும் உருவாகி இருக்கிறது. ஓவியா, நயன்தாராவை தொடர்ந்து 3-வது இடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், 4-வது இடத்தில் ஷ்ரத்தா சசிதரும், 5-வது இடத்தில் காஜல் அகர்வாலும், 6-வது இடத்தில் ஏமி ஜாக்சனும், 7-வது இடத்தில் ஆண்ட்ரியாவும், 8-வது இடத்தில் சஞ்சனா நடராஜனும், 9-வது இடத்தில் ரூஹி ச...
ராஜூ முருகனுடன் ஜிப்சி ஓட்ட தயாரான ஜீவா

ராஜூ முருகனுடன் ஜிப்சி ஓட்ட தயாரான ஜீவா

Latest News, Top Highlights
ஒலிம்பியா மூவீஸ் பட நிறுவனத்தின் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் படம் ‘ஜிப்ஸி’. கீ, கொரில்லா படங்களைத் தொடர்ந்து ஜீவா ‘ஜிப்ஸி’ படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜு முருகன். குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கும் ‘ஜிப்ஸி ’படத்தின் தொடக்கவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பா.இரஞ்சித், வினோத், பிரம்மா, சத்யா மற்றும் பிரபல தயாரிப்பாளர்கள் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க, ‘அருவி’ படத்தின் எடிட்டரான ரேமண்ட் டெரிக் கிராஸ்டா இதன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ‘நாச்சியார்’ படத்தில் கலை இயக்கு...
நாச்சியார் – திரைவிமர்சனம் (முத்திரை ) Rank 3.5/5

நாச்சியார் – திரைவிமர்சனம் (முத்திரை ) Rank 3.5/5

Review, Top Highlights
தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கும் மட்டும் இல்லை இயக்குனர்களுக்கும் ரசிகர்கள் உண்டு அந்த வகையில் ஒரு சில இயக்குனர்கள் படம் முந்தி அடித்துக்கொண்டு டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் ரசிகர்கள் உண்டு அந்த வகையில் இயக்குனர் பாலாவுக்கு அப்படியான ரசிகர்கள் உண்டு அவர் படம் என்றால் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் விநியோகிஸ்தர்கள் முதல் திரையரங்க உரிமையாளர்கள் வரை போட்டி போட்டு வாங்குவார்கள் அது பாலா இயக்கத்தில் வெளியான தாரைதப்பட்டை படத்துக்கு பிறகு தலைகீழாக மாறியது காரணம் அந்த படம் ரசிகர்களை மிகவும் வெறுத்த ஒரு படமாக அமைத்தது காரணம் கதைக்களம் முதல் காட்சியமைப்புக்கள் வரை. பாலாவுக்கு நிச்சய வெற்றி வேண்டும் என்ற நேரத்தில் வெளிவந்துள்ள படம் தான் நாச்சியார் இந்த படம் மூலம் இழந்த ரசிகர்கள் பட்டாளத்தை மீண்டும் பெறுவாரா இல்லை என்ன நடக்க போகிறது என்று பாக்கலாம் நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார்,ஜோதிகா...
“காசு மேலே காசு” இசை வெளியீட்டு விழாவில் நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான  பேச்சு.

“காசு மேலே காசு” இசை வெளியீட்டு விழாவில் நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.

Latest News, Top Highlights
நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் "காசு மேலே காசு" இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், P.வாசு, பாண்டியராஜன், தரணி, நடிகர் விவேக், மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசியதாவது.. ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பது ஈஸி ஆனால் காமெடியனாக நடிப்பதற்கு ஹார்சிய உணர்வு நிறைய வேண்டும். ஹார்சிய உணர்வு அதிகம் மிக்கவன் மயில்சாமி அதைவிட இதயம் சுத்தமானவன். மக்களை மகிழ்விப்பதில் மன்னன். எனக்கு ஹார்சிய உணர்வு கொஞ்சம் கூட இல்லை. ஆனால் இந்த படத்தின் அழைப்பிதழ் பார்த்ததும் விழுந்து விழுந்து சிரிச்சேன். இந்தப்படத்தின் பாடல்களை பார்த்தேன் நிச்சயம் இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும். நம் நிலம் களவாடப்படுகிறது, மொழி களவாடப்படுகிறது, கொஞ்சம் விட்டால் இந்த இனமே களவாடப்படும் முழித்துக்கொள். டைனோசர் இனம் அழியக்காரணம் அதனிடம் எதி...