Sunday, November 8
Shadow

Top Highlights

தான் ரசிகர்கள் எப்படி இருக்கவேண்டும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வேண்டுகோள்

தான் ரசிகர்கள் எப்படி இருக்கவேண்டும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வேண்டுகோள்

Latest News, Top Highlights
தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிரப்போக போகும் நம்ம சூப்பர்ஸ்டார் தற்போது மும்முரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார் முதலில் விவசாயிகளுக்கு தேவையான நலன்களை செய்யும் படியான நல வாரியங்கள் அமைக்க முடிவெடுத்து அதற்கான வேளைகளில் தன் ரசிகர்களோடு ஆலோசித்து வருகிறார் இந்த நேரத்தில் தன் ரசிகர்களை பற்றியான ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த் ரஜினி, ரசிகர் மன்ற நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி வீடியோ கான்பிரசிங் மூலம் உரையாற்றினார். அந்த வீடியோவில், ரசிகர்களிடம் ஒழுக்கமும், கட்டுப்பாடும் இருந்தால் போதும். மற்றதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான். நமக்குள் ஏதேனும் சண்டை வருகிறதா என சிலர் பார்த்துக் கொண்டு உள்ளனர். குடும்பங்களை கவனித்த பிறகு மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என ரஜினி அறிவுரை வழங்கி உள்ளார்....
மாணவிகளிடம் பேச பயந்த புதுமுக நடிகர் “பிரபா”

மாணவிகளிடம் பேச பயந்த புதுமுக நடிகர் “பிரபா”

Latest News, Top Highlights
ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற வைபவ் 2018 நிகழ்ச்சியை திருட்டு V C D மற்றும் மதுரைமாவட்டம் போன்ற படங்களில் நடித்துள்ள நடிகர் பிரபா கலந்துக்கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்த்தார். விழாவில் மகளிர் கூட்டத்தில் பேசிய அவர் பெண்கள் கல்லூரி என்றதும் கொஞ்சம் பயந்து, தயக்க பட்டுத்தான் இங்கு வந்தேன். ஆனால் இங்கே வந்து பார்த்த்தும் உங்களை கண்டு வியந்தேன். இங்குள்ள அனைவருமே அன்பை பொழிந்தார்கள். நீங்கள் ஆண்களை விட மிகுந்த திறமைசாலிகளாக உள்ளீர்கள். பெண்கள் தான் இந்த நாட்டையும் வீட்டையும் தாங்குபவர்கள். நீங்கள் மிகுந்த தைரியத்துடன் இருக்க வேண்டும். எதிர்த்து போராடும் குணத்தை கற்றுக்கொள்ள வேண்டும். இது உங்களின் வாழ்வில் முக்கியமான பருவம். இப்போது படிப்பில் கவனம் செலுத்துங்கள். தாய், தந்தையை ஆசிரியரை மதியுங்கள். உங்கள் வாழ்வு இப்போது உங்களின் கடின முயற்சியில் உள்ளது. எல்லோரும் வாழ...
எனக்கு பயத்தையும் படபடப்பையும் ஏற்படுத்துகிறது ப்ரியா பிரகாஷ் வாரியர் ஏன் தெரியுமா ?

எனக்கு பயத்தையும் படபடப்பையும் ஏற்படுத்துகிறது ப்ரியா பிரகாஷ் வாரியர் ஏன் தெரியுமா ?

Latest News, Top Highlights
மலையாளத்தில் 'ஒரு அதார் லவ்’ படத்திலிருந்து 'மானிக்க மலராயா பூவி' என்ற பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டது. பிப்ரவரி 9-ம் தேதி வெளியிடப்பட்ட இப்பாடலை இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்திருக்கிறார்கள். இதில் சில காட்சிகளே வந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ப்ரியா பிரகாஷ் வாரியர். ஒரே நாளில் இவருடைய ட்விட்டர் பக்கத்தில் (@priyapvarrier) பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை சுமார் ஐம்பதாயிரத்தை கடந்திருக்கிறது. மேலும், இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டியிருக்கிறது. மோகன்லால், துல்கர் சல்மான், அனுஷ்கா உள்ளிட்ட பலரின் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை ப்ரியா பிரகாஷ் வாரியர் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு கிடைத்திருக்கும் எதிர்பார்ப்பு குறித்து ப்ரியா பிரகாஷ் வாரியர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: 'மானிக்க மலராயா பூவி'...
விமல் மற்றும் வரலக்ஷ்மி நடிக்கும் கன்னிராசி

விமல் மற்றும் வரலக்ஷ்மி நடிக்கும் கன்னிராசி

Latest News, Top Highlights
நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விமல், அடுத்ததாக ‘கன்னி ராசி’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். கிங் மூவி மேக்கர்ஸ் P.ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில், எஸ்.முத்துக்குமரன் இயக்கும் இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக, வரலட்சுமி நடித்து வருகிறார். பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, கதைக்களத்தை அமைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.முத்துக்குமரன். இப்படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை எஸ்.செல்வகுமார் மேற்கொள்ள, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ராஜா முகமது எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுத, கலா மற்றும் விஜி நடனம் அமைக்கின்றனர். இப்படம் குறித்து பேசிய இயக்குநர் “படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னிராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ...
‘துருவங்கள் பதினாறு ‘ இயக்குநர் கார்த்திக் நரேனின்  புதிய படத்தின் பெயர் வெளியீடு !

‘துருவங்கள் பதினாறு ‘ இயக்குநர் கார்த்திக் நரேனின் புதிய படத்தின் பெயர் வெளியீடு !

Latest News, Top Highlights
'துருவங்கள் பதினாறு ' இயக்குநர் கார்த்திக் நரேனின் புதிய படத்தின் பெயர் இன்று 5 மணிக்கு வெளியிடப்பட்டது. சென்ற ஆண்டில் 100 நாள் ஓடி மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த படம் 'துருவங்கள் பதினாறு'. இப்படம் விமர்சன ரீதியிலும் வசூலிலும் பேசப்பட்ட படம் என்ற பெருமையைப் பெற்றது. இப்படத்தை இயக்கிய கார்த்திக் நரேனின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு கூடியது. அவர் தனது அடுத்த படமாக 'நரகாசுரனை' இயக்கி உள்ளார் . அரவிந்த்சாமி , ஸ்ரேயா , சந்தீப் கிருஷ்ணா , ஆத்மிகா நடித்துள்ளனர். இதன் இறுதிக்கட்ட தொழில் நுட்பப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இந்நிலையில் தன் மூன்றாவது படத்தின் அறிவிப்பைத் தனது ட்விட்டரில் கார்த்திக் நரேன் நேற்று மாலை 5.00 மணிக்கு வெளியிட்டார். படத்தின் பெயர் 'நாடக மேடை ' .இப்படத்தை இயக்கி தன் 'நைட் நாஸ்டால்ஜியா பிலிமோடெய்ன்மெண்ட் ' பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். ...
காதலர் தினத்தில் நண்பர்கள் தினத்தை கொண்டாடிய சதீஷ்

காதலர் தினத்தில் நண்பர்கள் தினத்தை கொண்டாடிய சதீஷ்

Latest News, Top Highlights
பிரபல காமெடி நடிகர் சதீஷ். ‘தமிழ்ப்படம்’ படம் மூலம் நடிராக அறிமுகமான இவர், ‘மெரினா’, ‘எதிர் நீச்சல்’, ‘மான் கராத்தே’, ‘கத்தி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இளம் கதாநாயகர்கள் அனைவருடன் இணைந்து நடித்துள்ள சதீஷ்க்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இவருடைய நடிப்பில் பல படங்கள் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது. இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு ‘இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார். மேலும், ம்ம்ம்ம் இதுக்கு அடுத்த லவலுக்கு தான் நமக்கு போகத் தெரியலயே’ என்றும் கூறியிருக்கிறார். உலகமே காதலர் தினத்தை கொண்டாடும் நிலையில், சதீஷ் மட்டும் நண்பர்கள் தினத்தை கொண்டாடி இருக்கிறார்....
ரசிகர்களை கவர்ந்த பிரியா வாரியருக்கு இந்த நிலைமையா?

ரசிகர்களை கவர்ந்த பிரியா வாரியருக்கு இந்த நிலைமையா?

Latest News, Top Highlights
சமீப காலமாகவே கேரள படங்களுக்கும், பாடல்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ப்ரேமம் மலர் டீச்சர், ஜிமிக்கி கம்மல் ஷெரிலுக்கு பின்னர் தற்போது டிரெண்டாகி வருகிறார் பிரியா வாரியர். மலையாளத்தில் `ஹேப்பி வெட்டிங்', `சங்ஃஸ்' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ஒமர் லூலு தற்போது `ஒரு அடாரு லவ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு வீடியோ பாடல் ஒன்றை கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி படக்குழு வெளியிட்டுள்ளது. `மாணிக்ய மலராய பூவி' என தொடங்கும் அந்த பாடலை வினீத் ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார். ஒரு பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சியின் போது மாணவர்கள் கூடியிருக்கின்றனர். அப்போது, தனது நண்பனை பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தியபடி பார்க்கும் பிரியாவின் பார்வை தான் சமூக வலைதளங்களில்...
“முந்திரிக்காடு” படக்குழுவுக்கு ராசியான ஹாரிஸ்ஜெயராஜ்

“முந்திரிக்காடு” படக்குழுவுக்கு ராசியான ஹாரிஸ்ஜெயராஜ்

Latest News, Top Highlights
தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ முந்திரிக்காடு “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான C.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன் , பாவாலட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களிடம் வெளியிடக் கேட்டோம். எந்த மறுப்பும் சொல்லாமல் சம்மதம் தெரிவித்ததோடு அல்லாமல் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். அவர் வெளியிட்ட ராசி ஏறக்குறைய இருபது லட்சம் பேர் அதை பார்த்துள்ளனர். அதோடு இல்லாமல் உலகம் முழுக்க உள...
சிம்புவுடன் சேர்ந்து 90 அடிக்கும் ஓவியா

சிம்புவுடன் சேர்ந்து 90 அடிக்கும் ஓவியா

Latest News, Top Highlights
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் `காஞ்னா-3' படத்தில் நடித்து வருகிறார். தற்போது `களவாணி-2' படத்தில் பிசியாகி இருக்கிறார். இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் ஓவியா நடிக்கும் இந்த படத்திற்கு சிம்பு இசையமைக்க இருக்கிறார். சந்தானத்தின் `சக்க போடு போடு ராஜா' படத்தை தொடர்ந்து ஓவியா படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. `குளிர் 100 டிகிரி' படத்தை இயக்கிய அனிதா உதீப் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதன்படி படத்திற்கு `90 எம்.எல்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். விஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை த...
மும்பை வில்லன்களுடன் பிரபுதேவா மோதல் சார்லி சாப்ளின் – 2 படத்திற்காக படமானது

மும்பை வில்லன்களுடன் பிரபுதேவா மோதல் சார்லி சாப்ளின் – 2 படத்திற்காக படமானது

Latest News, Top Highlights
தமிழில் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணி பட நிறுவனங்களில் ஒன்று T.சிவாவின் அம்மா கிரியேசன்ஸ். அம்மா கிரியேசன்ஸ் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் பார்ட்டி படத்தை தொடர்ந்து அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு சார்லி சாப்ளின் -2 என்று பெயரிட்டுள்ளனர். பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதாஷர்மா இருவரும் நடிக்கிறார்கள். பிரபல இந்தி தெலுங்கு நடிகையான அதாஷர்மா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. மற்றும் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், விவேக் பிரசன்னா, சாம்ஸ், சாந்தா, காவ்யா, மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, அமீத், நட்புக்காக வைபவ். இந்த படத்தின் ஒளிப்பதிவு - செளந்தர்ராஜன் இசை - அம்ரீஷ் பாடல்கள் - யுகபாரதி, முதல் முறையாக பாடல் எழுதும...