Sunday, November 8
Shadow

Top Highlights

இயல்பான காதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும் நடிகர் ராஜ்கமல்

இயல்பான காதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும் நடிகர் ராஜ்கமல்

Latest News, Top Highlights
மேல்நாட்டு மருமகன் படம் இம்மாதம் 16 ம் தேதி வெளியாவதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த நடிகர் ராஜ்கமலிடம் பேசியபோது.. இயக்குனர் சிகரம் K.பாலச்சந்தர் அவர்களின் மோதிர விரலால் குட்டுப்பட்டு “சஹானா” என்னும் அவரது தொடரில் அறிமுகமாகி, தொடர்ந்து K.B சாரின் டைரக்‌ஷன் மற்றும் டைரக்‌ஷன் மேற்ப்பார்வையில், கவிதாலயாவின் 12 தொடர்களில் நடித்தேன்.. தொடர்ந்து தொடர்களில் நடித்தால் சினிமா என்னும் கடலுக்குள் கால் பதிக்க முடியாதோ என்று, பிரபல இயக்குனர் ஒருவரின் அறிவுரைப்படி தொடரில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் தீவிரமாக வாய்ப்புத் தேடத் தொடங்கினேன்.. குணச்சித்திர வேடங்களுக்கான தேடலில் இருந்த எனது இயல்பான தோற்றம் இயக்குனர் MSS அவர்களுக்கு பிடித்துப்போக, உதயா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நான் “மேல்நாட்டு மருமகன்” திரைப்படத்தின் கதாநாயகன் ஆனேன்.. ஆனால் பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்த ...
உலகெங்கும் இந்த மாதம்  16ம் தேதி  வெளியாகும் “நாகேஷ் திரையரங்கம்”

உலகெங்கும் இந்த மாதம் 16ம் தேதி வெளியாகும் “நாகேஷ் திரையரங்கம்”

Latest News, Top Highlights
ட்ரான்ஸ் இண்டியா மீடியா நிறுவனத்தின் திரு. ராஜேந்திர எம்.ராஜன் அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படைப்பு “நாகேஷ் திரையரங்கம்”. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட “அகடம்” திரைப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த இசாக் இயக்கியுள்ள திரைப்படம் இது. “நெடுஞ்சாலை” “மாயா” படப் புகழ் ஆரி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” “இனிமே இப்படித்தான்” படங்களில் நடித்த ஆஸ்னா சவேரி ஜோடியாக நடித்திருக்கிறார். காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சிறிய இடைவேளைக்குப் பின் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர்.லதாவும், நடிகை சித்தாராவும் நடித்திருக்கிறார்கள். நெளஷாத் ஒளிப்பதிவில், ஸ்ரீ இசையில், தேவராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘நாகேஷ் திரையரங்கம்” வரும் பிப்ரவரி 16 அன்று வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் இன்று வரைய...
விஷாலை வீண் வம்புக்கு இழுத்து விளம்பரம் தேடும் ‘வாராகி’!

விஷாலை வீண் வம்புக்கு இழுத்து விளம்பரம் தேடும் ‘வாராகி’!

Latest News, Top Highlights
தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என அனைத்து பொறுப்புகளையும் தாங்கிய வாராகி தனது முதல் படைப்பான ‘சிவா மனசில புஷ்பா’ திரைப்படத்தை விரைவில் வெளியிடவிருக்கிறார். படத்தின் தலைப்பிலேயே பல அரசியல் சிக்கல்களை உள்ளடக்கிய இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன் சென்னை பிரசாத் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழா சரியாக மாலை 5 மணியளவில் துவங்கியது. விழா ஆரம்பத்தில் விஷாலின் ஊழல் பற்றிய வீடியோ ஒன்றை வெளியிடுவதாக அறிவித்தார் வாராகி. அப்படி என்ன ஆதாரம் என்பதை பார்ப்பதற்காக பத்திரிக்கையாளர்களும் மணிக்கணக்கில் காத்திருந்தனர். 5 மணி நேரத்திற்கு பிறகு சரியாக 10 மணியளவில் அந்த விடீயோவை வெளியிட்டார் வாராகி. அந்த வீடியோவில் நடிகர் ஜே கே ரித்திஷ் மற்றும் இன்னும் சிலர் பேசிக் கொண்டிருந்த வீடியோ ஒன்று திரையிடப்பட்டது. அதில், விஷாலை பற்றி அவர்கள்தான் கருத்து கூறுகிறார்களே தவிர விஷால் ஊழல...
சொல்லிவிடவா –  திரை விமர்சனம்(சொல்லவே இல்லை)  (2/5)

சொல்லிவிடவா – திரை விமர்சனம்(சொல்லவே இல்லை) (2/5)

Review, Top Highlights
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிருபராக வேலை பார்க்கிறார் நாயகன் சந்தன் குமார். சதீஷும், பிளாக் பாண்டியும் அதே கம்பெனியில், கேமரா மேனாக பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல், மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் நிருபராக வேலை பார்க்கிறார் நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன். இவருக்கு உதவியாளராக யோகி பாபு வருகிறார். ஐஸ்வர்யா, அவளது தாத்தா விஸ்வநாத்துடன் வாழ்ந்து வருகிறார். ஐஸ்வர்யாவுக்கு பாதுகாவலராக சுஹாசினி வருகிறார். சுஹாசினியின் மகனுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கார்கில் போர் நடக்கிறது. போரை நேரில் படம் பிடிப்பதற்காக இரு தொலைக்காட்சி நிறுவனங்களின் சார்பாக சந்தன் குமாரும், ஐஸ்வர்யாவும் டெல்லி செல்கிறார்கள். இவர்கள் இருவரும் தன்னுடைய உதவியாளர்களிடம் பொய் சொல்லி அழைத்து செல்கிறார்கள். டெல்லி சென்ற பின் உண்மை தெரிந்து சதீஷ், பிளாக் பாண்டி...
ரசிகரின் செல்போனை உடைத்த நடிகை மீது போலீசில் புகார்

ரசிகரின் செல்போனை உடைத்த நடிகை மீது போலீசில் புகார்

Latest News, Top Highlights
நடிகர், நடிகைகளுடன் ரசிகர்கள் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் அவர்களுக்கு சில நேரங்களில் அசவுகரியங்கள் ஏற்படுவது உண்டு. ஆனாலும் அதை பொறுத்துக்கொண்டு அவர்களுடன் நின்று படம் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் தெலுங்கு நடிகை ஒருவர் செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பறித்து எறிந்து உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நடிகையின் பெயர் அனசுயா பரத்வாஜ். ஐதராபாத்தில் வசிக்கிறார். இவர் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். டெலிவிஷனில் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். தார்னா பகுதியில் ஒரு ரசிகர் அனசுயாவுடன் செல்பி எடுக்க முயன்றார். இதனால் கோபம் அடைந்த அனசுயா ரசிகரின் செல்போனை பறித்து ரோட்டில் வீசி எறிந்து உடைத்தார். இதையடுத்து அனுசுயா மீது அந்த ரசிகரின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் நாயகி தான் அந்த போனை உடைக்கவில்லை என்று கூறிவருகிறார்....
விஜய் பட வில்லனுக்கு படப்பிடிப்பின்போது காயம்

விஜய் பட வில்லனுக்கு படப்பிடிப்பின்போது காயம்

Latest News, Top Highlights
பிரபல வில்லன் நடிகர் வித்யூத் ஜம்வால். இவர் விஜய் நடித்துள்ள துப்பாக்கி, அஜித்குமார் நடித்துள்ள பில்லா-2 படங்களில் வில்லனாக நடித்துள்ளார். சூர்யாவுடன் அஞ்சான் படத்திலும் நடித்துள்ளார். தற்போது ஜங்கிள் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இந்த படத்துக்கான சண்டை காட்சி படமாக்கப்பட்டது. வித்யூத் ஜம்வால் ஜன்னல் வழியாக வெளியே குதிப்பதுபோன்று அந்த காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக அவரது உடலில் கயிறு கட்டி பாதுகாப்பாக குதிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனாலும் வெளியே குதிக்கும்போது எதிர்பாராதவிதமாக தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது....
ரஜினியின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறாரா இந்த பிரபல இயக்குநர்?

ரஜினியின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறாரா இந்த பிரபல இயக்குநர்?

Latest News, Top Highlights
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கினார். அந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யை வைத்து ‘மெர்சல்’ படத்தை இயக்கினார். பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே வெளியாகிய இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 100 நாட்களை கடந்து புதிய மைல்கல்லையும் தொட்டது. இந்த படத்தில் விஜய் முதன்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். விஜய்யுடன் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா நடித்திருந்தார்கள். இந்நிலையில், அட்லி அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் பிரபாஸ் நடிப்பதாக ஒரு பேச்சு அடிபட்டது. இந்நிலையில், அடுத்த படத்தில் ஹீரோவாக ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கோலிவுட்டில் பரவலாக...
ஆஸ்திரேலியாவில், ஈழன் இளங்கோவின் இயக்கத்தில் உருவான,  ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’

ஆஸ்திரேலியாவில், ஈழன் இளங்கோவின் இயக்கத்தில் உருவான, ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’

Latest News, Top Highlights
ஆஸ்திரேலியாவில், ஈழன் இளங்கோவின் இயக்கத்தில் உருவான, ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ திரைப்படம் வெளியாக உள்ளது. நீண்ட காலமாகக் காத்திருந்த இத்திரைப்படத்தின், இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் திகதி, மாசி மாதம் 2018 அன்று ஆஸ்திரேலியாவில், பெண்டில்ஹில்லில் உள்ள யாழ் மண்டபத்தில் நடைபெற உள்ளது. ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ ஒரு நடப்பியலுக்கு மாறுபட்ட தன்மையுடைய கதை பாணியில் அமைக்கப்பட்ட, இலங்கை அரச படையினரால் துன்புறுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட தமிழர்களினதும், அகதிகளாய் அயல் நாடுகளில் தமிழர் படும் அவலங்களையும், உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு உருவான படம். பாதிப் படம் தமிழில் துணையுரையுடன் ஆங்கிலத்திலும், மீதி ஆங்கில துணையுரையுடன் தமிழிலும் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் துணைக் கதைகள், குறும்படங்களாக பல சர்வதேச விருதுகளை தட்டிச்சென்ற கதைகள் என்பது குறிப்பிடத...
எக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா? சென்சார் போர்டின் ஓரவஞ்சனை

எக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா? சென்சார் போர்டின் ஓரவஞ்சனை

Latest News, Top Highlights
ஒரு படம் சென்சார் போர்டின் விதிகளைத் தாண்டி வரும்போது சில வெட்டுக்களையும், பல மியூட்களையும் முதுகில் தாங்கிக் கொண்டுதான் வெளியாகிறது. சென்சாரைப் பொருத்தவரையில் அவர்கள் பார்வையிலும், அரசியல் அதிகாரமிக்கவர்களைப் பாதிக்காத வகையிலும் இருந்தால் பிரச்சனையில்லை. சான்றிதழ் எளிதாகக் கைக்கு வந்துவிடும். கொஞ்சம் சமூகப்பிரச்சனைகள், கிளாமர் உள்ள படங்கள் திணறத்தான் செய்கின்றன. அப்படி திணறி வர முடியாமல் போன படம் எக்ஸ் சோன் என்ற பெயரில் சென்சாருக்கு வந்த இந்திப் படம். மேல்முறையீடு வரை சென்றும் கடைசி வரை வெளி வர முடியாமலே போய்விட்டது. ஆனால் இப்போது எக்ஸ் வீடியோஸ் என்ற படத்திற்கு ஏ சான்றிதழும் சென்சார் போர்டு பெண் உறுப்பினர்களிடமிருந்து பாராட்டும் கிடைத்திருப்பது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் வீடியோஸ் படம் தமிழ் இந்தி ஆகிய மொழியில் தயாராகியுள்ளது. இயக்குநர் ஹ...
கலகலப்பு-2  திரைவிமர்சனம் (சரவெடி) Rank 3/5

கலகலப்பு-2 திரைவிமர்சனம் (சரவெடி) Rank 3/5

Review, Top Highlights
சுந்தர் சி இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளியானது கலகலப்பு. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி. மீண்டும் தனது கிளுகிளுப்பூட்டும் காமெடி பட்டாளத்தை களமிறக்கியிருக்கிறார் சுந்தர் சி, இக்கூட்டணி எடுபட்டதா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் காணலாம். ஜெய் தனது பூர்வீக சொத்து ஒன்றை கண்டுபிடிக்க காசிக்கு செல்கிறார். அங்கு ஜீவா நடத்தி வரும் ஒரு பாழடைந்த விடுதி ஒன்றில் தங்குகிறார். தாசில்தாராக வரும் நிக்கி கல்ராணி மீது காதல் கொள்கிறார் ஜெய். இதற்கிடையே தனது தங்கைக்கு மாப்பிள்ளையாக சதீஷை தேர்வுசெய்யும் ஜீவா, சதீஷின் தங்கை கேத்தரின் தெரசாவுடன் காதல் வயப்படுகிறார். ஒருகட்டத்தில் ஜீவா நடத்தும் விடுதிதான் தனக்கு சேரவேண்டிய இடம் என்பது தெரியவர, ஜீவாவுடன் நட்புறவாடுகிறார் ஜெய். இதுஒருபுறம் நடக்க தங்கள் இருவரிடமும் முன்பு பணத்தை ஏமாற்றிய சிவா, தற்...