Sunday, November 8
Shadow

Top Highlights

காலம் கடந்தும் தளபதியின் தெறி படம் தெரிக்கவிட்ட சாதனை

காலம் கடந்தும் தளபதியின் தெறி படம் தெரிக்கவிட்ட சாதனை

Latest News, Top Highlights
நல்ல படங்களை எப்போதும் நல்ல வரவேற்ப்பு கொடுப்பது தமிழ் ரசிகர்களின் மனசு என்று தான் சொல்லணும் ஆம் எப்போதுமே ஒரு நல்ல படம் என்றால் அந்த படத்தை கைவிட்டதாக சரித்திரம் இல்லை அப்படி தான் அட்லீயின் முதல் படம் ராஜாராணி படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது இதனால் இவருக்கு அடித்த யோகம் விஜய்யின் தெறி இந்த வாய்ப்பை மிகவும் அழகாக பயன்படுத்தி கொண்டார் என்று தான் சொல்லணும். தனக்கு கிடைத்த வாய்ப்பை தனக்கு மட்டும் பெருமை சேர்க்காமல் வாய்ப்பு கொடுத்த தளபதிக்கு மிகவும் பெருமையோடு பல சாதனைகளை நிகழ்த்தவும் செய்தார் என்ற பெருமை கொண்ட இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்தார் அந்த வகையில் தெறி படம் வெளியாகி ஒரு வருடங்கள் மேல் ஆகியும் அந்த படம் மேலும் ஒரு சாதனையை தற்போது நிகழ்த்தியுள்ளது . தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த படம் தெறி. இப்படம் மெகா ஹிட் ஆனது அனைவரும் அறிந்ததே. தெறி உலகம் முழுவதும் ...
பகத் பாஷில் இடத்தை பிடித்த அருண் விஜய்

பகத் பாஷில் இடத்தை பிடித்த அருண் விஜய்

Latest News, Top Highlights
மணிரத்னம் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்திற்கு `செக்க சிவந்த வானம்' என்று தலபை்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாஷில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி உள்ளிட்ட பலரும் நடிப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. அதில் பகத் பாஷிலுக்கு பதில் நடிகர் அருண் விஜய் படக்குழுவில் இடம்பிடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். வரும் 12ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் சுபாஸ்...
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கமல் ரசிகர்களின் கருத்து என்ன?

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கமல் ரசிகர்களின் கருத்து என்ன?

Latest News, Top Highlights
கமல் வருகிற 21-ந்தேதி கட்சி தொடங்குகிறார். சுற்றுப்பயணமும் செல்ல இருக்கிறார். அரசியல் நிலவரம் குறித்து தனது கருத்துக்களை உடனடியாக தெரிவித்து வருகிறார். பஸ் கட்டண உயர்வு உள்பட பல்வேறு தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு கமல் உறுதியான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சி அமைய வேண்டும். தமிழ்நாட்டு அரசியலை சுத்தப்படுத்துவதுதான் எனது முதல் கடமை என்று அறிவித்து இருக்கிறார். ஆனால், ரஜினி கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த பிறகு அரசியல் பிரச்சினைகள் பற்றி வாய் திறக்கவேயில்லை. ஆனால் கமல் ரசிகர்களிடம் கருத்து கேட்டுதான் எந்தவித முடிவும் எடுக்கிறார். கமல் நேரடியாக மக்களை சந்திக்க களம் இறங்கி விட்டார். கமல் எந்தவித பாகுபாடும் இல்லாமல் தமிழக மக்களை நேசிக்க கூடியவர். ஒரு சார்பினர் விரும்பும் ரஜினியின் ஆன்மீக அரசியல் எடுபடாது. ரஜினியை விட கமலுக்குதான் மக்கள் பலம் அதிகம் என...
ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள  “ காவியன் “  விரைவில் வெளியாக உள்ளது

ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள “ காவியன் “ விரைவில் வெளியாக உள்ளது

Latest News, Top Highlights
நடிகர் ஷாம் தற்போது “ 2M cinemas ” K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் “ கா-வியன் “ என்றும் தெலுங்கில் “ வாடு ஒஸ்தாடு “ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஷாம் ஜோடியாக ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலிவுட் நடிகர் ஜெஸ்டின் விகாஸ் இந்த படத்தின் வில்லனாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க அமெரிக்காவிலுள்ள லாஸ்வேஹாசில் ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள முதல் தமிழ் திரைப்படம் இது என்ற பெருமையை காவியன் நிச்சயம் பெரும். சண்டைக் காட்சிகளும், திரைக்கதையும் தொடக்கம் முதல் இறுதிவரை பிரமிக்கும் வகையில் இருக்கும். மிகுந்த எதிர்பார்ப்புக்கு...
மெட்ராஸ் டாக்கீஸ் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் “செக்கச்சிவந்த வானம்”

மெட்ராஸ் டாக்கீஸ் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் “செக்கச்சிவந்த வானம்”

Latest News, Top Highlights
மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. "செக்கச்சிவந்த வானம்" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன் (STR), விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். வரும் 12ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த படத்துக்கு இசை ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்கிறார்...
கார்த்திக் மற்றும் கெளதம் கார்த்திக் நடிக்கும் ‘Mr.சந்திரமௌலி’ படப்பிடிப்பு முடிவடைந்தது

கார்த்திக் மற்றும் கெளதம் கார்த்திக் நடிக்கும் ‘Mr.சந்திரமௌலி’ படப்பிடிப்பு முடிவடைந்தது

Latest News, Top Highlights
திரு இயக்கத்தில், கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசண்டரா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் உருவாகிவரும் 'Mr.சந்திரமௌலி'' படத்தின் படப்பிடிப்பு மிக தெளிவாக திட்டமிடப்பட்டு, வேகமாக நடந்து வருகின்றது. இப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவுபெற்றதையடுத்து இதன் நினைவாக கேக் வெட்டி கொண்டாடினர் இப்படக்குழு.இப்படத்தில் ரெஜினாவின் பாடல் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில் , '' தொழில் பக்தி உள்ள ஒரு கதாநாயகி ரெஜினா. அர்பணிப்பிலும், நடிப்பிலும் அவருக்கு நிகர் அவரே. அவரது ஆற்றலும் பங்களிப்பும் இந்த படத்திற்கு பெரும் பலமாகவுள்ளது. படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகின்றது. வரும் கோடை விடுமுறை காலத்தில் 'Mr.சந்திரமௌலி' ரிலீஸ் ஆகும் ''இந்த படத்தை BOFTA media works India Private Limited சார்பில...
தடத்தை முடித்த அருண் விஜய்

தடத்தை முடித்த அருண் விஜய்

Latest News, Top Highlights
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தடம் என்ற படத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான படம் தான் தடையறத் தாக்க. இந்தப்படம் ரசிகர்களிடமும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘தடம் படத்தில் அருண் விஜய்-க்கு ஜோடியாக தன்யா, ஸ்ம்ருதி, வித்யா பிரதீப் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். படத்தை ‘ரேதன்-தி சினிமா பீப்பிள் நிறுவனம் சார்பில் இந்தர் குமார் தயாரிக்கிறார். படத்திற்கு அருண்ராஜ் இசையமைக்கிறார். சமீபத்தில், இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது அருண் விஜய் அறிவித்துள்ளார். மேலும் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் அறிக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்....
காதலர் தினத்தில் சிறப்பு விருந்து கொடுக்கும் விஜய் சேதுபதி

காதலர் தினத்தில் சிறப்பு விருந்து கொடுக்கும் விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி – இயக்குநர் கோகுல் கைகோர்த்துள்ள படம் ‘ஜுங்கா’. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ சூப்பர் ஹிட் என்பதால் இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயீஷா நடித்துள்ளார். மேலும், காமெடியில் கலக்க யோகி பாபு நடிக்கிறார். சித்தார்த் விபின் இசையமைத்து வரும் இதற்கு டட்லி ஒளிப்பதிவு செய்து வருகிறார், இதனை ‘ஏ&பி குருப்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து விஜய் சேதுபதியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறாராம். இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் ஆடியோ ரைட்ஸை ‘திங்க் மிய...
ஸ்ரீதிவ்யாவின் புதிய திட்டம்

ஸ்ரீதிவ்யாவின் புதிய திட்டம்

Latest News, Top Highlights
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. அதன்பிறகு ஜீவா, ஈட்டி, பென்சில், மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்கள் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. கடந்த ஆண்டும் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் மட்டுமே ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார். சமீப காலமாக அவருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது ‘ஒத்தைக்கு ஒத்த’ படம் மட்டுமே கையில் இருக்கிறது. எனவே, தனது சொந்த மொழியான தெலுங்கில் கூடுதல் கவனம் செலுத்தி ஸ்ரீதிவ்யா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கில் வாய்ப்புகளை பெற ஸ்ரீதிவ்யா அங்குள்ள இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்....
சவரக்கத்தி – திரைவிமர்சனம் (தங்க கத்தி…) Rank3.5/5

சவரக்கத்தி – திரைவிமர்சனம் (தங்க கத்தி…) Rank3.5/5

Latest News, Review, Top Highlights
இயக்குனர் மிஷ்கினின் சகோதரர் ஆதித்யன் இயக்கத்தில் உருவாகியுள்ளது இந்த ‘சவரக்கத்தி’. இப்படத்திற்கு கதை, வசனம், திரைக்கதை அமைத்திருக்கிறார் மிஷ்கின். மேலும், மிஷ்கின், ராம் மற்றும் பூர்ணா முன்னனி நடிகர்களாக நடித்திருக்கிறார்கள். ராம் ஒரு சாதாரண சவரக்கத்தி தீட்டி சவரம் செய்யும் ஒரு கூலித் தொழிலாளி. தன் தொழிலையும் தனது அன்பான காது கேளாத மனைவி பூர்ணா மற்றும் இரண்டு குழந்தைகளையும் அளவுக்கு அதிகமாக காதல் செய்யும் ஒரு மனிதன். நிறை மாத கர்ப்பிணியான பூர்ணாவின் உடன் பிறந்த சகோதரரின் திருமணத்திற்கு தனது மனைவி, குழந்தையோடு ராம் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக மிஷ்கினின் கார் அவரை கீழே தள்ளி விட கோபத்தில் மிஷ்கினை அடித்து விடுகிறார் ராம். கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து சென்றுவிடுகிறார் ராம். மிகப்பெரிய ரெளடியான மிஷ்கின், தன்னை அடித்த ராமை கொலை செய்யாமல் விட மாட்டேன்...