Sunday, November 8
Shadow

Top Highlights

விஜய் ஆன்டனி மற்றும் நிவேதா பெத்து ராஜ் நடிக்கும் திமிருப்பிடிச்சவன் பூஜையுடன் துவங்கியது

விஜய் ஆன்டனி மற்றும் நிவேதா பெத்து ராஜ் நடிக்கும் திமிருப்பிடிச்சவன் பூஜையுடன் துவங்கியது

Latest News, Top Highlights
பொதுவாக தமிழ் திரை உலகில், ஒரு போலீஸ் அதிகாரியின் கதை என்றாலே நாம் எளிதில் யூகிக்க முடிகிற கதை அமைப்பு, காட்சி அமைப்பு என்றுதான் இருக்கும். விஜய் ஆண்டனி நடிப்பில், அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கும் "திமிரு புடிச்சவன்" வழக்கதிலிருந்து முற்றிலும் மாறுப் பட்டு இருக்கும் என கூறப் படுகிறது. இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் இனிதே நடந்தது. "வழக்கத்தில் இருந்து மாறு பட்டு , இதுவரை பார்த்திராத ஒரு போலீஸ் அதிகாரியின் கதையை கதையாக வடித்து இருக்கிறேன்.ஒரு காவல் நிலையத்தில் நடக்கும் அன்றாட சம்பவங்களே மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அவர்கள் இடையே இருக்கும் பரஸ்பர உறவு இந்த படத்தில் பிரதிபலிக்கும். இந்த கதையை எழுதும் போதே ஒரு பெரிய நட்சத்திரம் நடித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் நினைத்தேன்.ஐந்து வருடங்களுக்கு முன்னரே விஜய் ஆண்டனி சாரிடம் கதை சொன்னேன். இன்னும் சில காலம் போகட்டும் என்றார். இன்ற...
பணம் கொடுக்காமல் டப்பிங் பேச வர முடியாது – அரவிந்த்சாமி திட்டவட்டம்!

பணம் கொடுக்காமல் டப்பிங் பேச வர முடியாது – அரவிந்த்சாமி திட்டவட்டம்!

Latest News, Top Highlights
வினோத் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றியான படம் சதுரங்க வேட்டை. இதன் தொடர்ச்சியாக அரவிந்த் சாமி நடிக்க நிர்மல் குமார் இயக்க உருவாகி வருகிறது ‘சதுரங்க வேட்டை 2’. த்ரிஷா ஹீரோயினாகவும் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி, நாசர், ராதாரவி, வம்சி கிருஷ்ணா, அமித் பார்கவ், ஸ்ரீமன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், டப்பிங் பேச மறுத்திருக்கிறார் அரவிந்த் சாமி. காரணம், அவருக்கு பேசப்பட்ட சம்பளம் முழுமையாக வந்து சேரவில்லையாம். முழு சம்பளத்தையும் செட்டில் செய்தால் தான் டப்பிங் பேசுவேன் என்று சொல்லிவிட்டாராம். அரவிந்த் சாமியின் சம்பளத்தைப் பாக்கி வைத்தது ஏன் என படத்தின் தயாரிப்பாளரான மனோபாலா தான் சொல்ல வேண்டும்....
தினேஷ் அதிதி மேனன் நடிக்கும் களவாணி மாப்பிள்ளை

தினேஷ் அதிதி மேனன் நடிக்கும் களவாணி மாப்பிள்ளை

Latest News, Top Highlights
நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட உள்ளனர். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் தான் இந்த அனைத்து படங்களையும் இயக்கியவர். அந்த கால கட்டத்தில் வணிக ரீதியான சக்சஸ் புல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கவனிக்கப் பட்டவர் மணி வாசகம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது. மணிவாசகத்தின் மகனான காந்திமணிவாசகம் தயாரித்து, இயக்கும் “ களவாணி மாப்பிள்ளை “ படத்தில் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், ...
ஓவர் பந்தா காட்டும் சாய்பல்லவி பிரபல ஹீரோ குற்றசாட்டு

ஓவர் பந்தா காட்டும் சாய்பல்லவி பிரபல ஹீரோ குற்றசாட்டு

Latest News, Top Highlights
மலையாளத்தில் ப்ரேமம் படம் மூலம் அறிமுகமானவர் சாய்பல்லவி தன் முதல் படத்திலே தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் பிரபலமானார் அனால் தமிழில் இது வரை வாய்ப்பு இல்லாமல் இப்போது தான் வாய்ப்பு கிடைத்து கரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார் . சாய் பல்லவி ஓவர் பந்தா செய்கிறார் என தடாலடியாக அவர் மீது புகார் கூறியிருக்கிறார். ஹீரோ நாக சவுர்யா. கரு படத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கிலும் உருவாகிறது. இதனால் தெலுங்கு நடிகர் நாக சவுர்யா இதில் ஹீரோவாக நடிக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் சாய் பல்லவி அளப்பறைகள் செய்வதாக அவர் புகார் கூறியிருக்கிறார். இது குறித்து நாக சவுர்யா கூறியதாவது: சாய் பல்லவி இப்போதுதான் சினிமாவுக்கு வந்திருக்கிறார். ஒரு சில படங்கள்தான் நடித்திருப்பார். அதற்குள் தன்னை ஸ்டாராக நினைத்து கொண்டு நடந்துகொள்கிறார். அவரது செயல்களை வைத்துதான் இதை சொல்...
“கத்தி எதுக்குதான் தொப்புள்கொடி வெட்டத்தான்” இதைத்தான் படத்தில் காட்டியுள்ளோம். – மிஷ்கின்

“கத்தி எதுக்குதான் தொப்புள்கொடி வெட்டத்தான்” இதைத்தான் படத்தில் காட்டியுள்ளோம். – மிஷ்கின்

Latest News, Top Highlights
நான் என் வாழ்கையில் பார்த்த இரண்டு பார்பர்ஸ் எனக்கு மிகவும் பிடித்தவர்கள் அவர்ளை பற்றி ஓரு கதை எழுத வேண்டுமென்று நினைத்தேன். “சவரக்கத்தி” எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை. இப்படத்தில் ராம் “பிச்சை” கேரக்டரில் நடித்துள்ளார். பொய்யே கட்டிப்பிடித்து கொண்டு வாழ்கின்ற ஓரு பார்பர் கதாபாத்திரம். நான் “மங்கா” என்ற கேரக்டரில் கோவத்தைக் கட்டிப்பிடித்து வாழ்கின்ற ரவடி கதாபாத்திரம். நாங்கள் இருவரும் சந்தித்து கொள்ளும் காட்சி அதற்கு பின்பு நிகழும் சம்பவங்களின் அடிப்படையில் படத்தின் கதை இருக்கும். ஓரு நாளில் நிகழும் கதை இப்படம். இதற்கிடையில் “சுமத்ரா” என்ற கேரக்டரில் பூர்ணா ராமின் மனைவியாக காது கேட்காத, 2 கைக்குழந்தைகளுடன் 9 மாத கர்ப்பிணிப் பெண்ணாகவும் நடித்துள்ளார். க்ரைம் திரில்லர் போன்று விரைவான கதையம்சம் கொண்ட படம்தான் சவரக்கத்தி. முதல் முதலாக என்னுடைய தம்பி ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். இப்...
கை விட்ட விஜய் கரம் கொடுத்த சூப்பர்ஸ்டார் மகிழ்ச்சியில் அட்லீ

கை விட்ட விஜய் கரம் கொடுத்த சூப்பர்ஸ்டார் மகிழ்ச்சியில் அட்லீ

Latest News, Top Highlights
விஜய் அட்லீ கூட்டணி மிகவும் ராசியான கூட்டணி என்பது நாம் அறிந்த விஷயம் இந்த கூட்டணி மீண்டும் சேரும் என்று ஆவோளோடு இருந்தனர் அனால் எல்லோருக்கும் ஏமாற்றம் இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லை அட்லீக்கும் தான் தொடர்ந்து விஜயை வைத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருக்கும் இயக்குநர் அட்லீ விஜயை வைத்து இயக்கிய ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. அதோடு வசூலி மாபெரும் சாதனை பெற்றது இரண்டும் நூறுகோடி பட்டியலில் இடம் பிடித்தது இதையடுத்து அவர் மீண்டும் விஜயுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகக தொடங்கியுள்ளார். இது அவரது 62 வது படமாகும், இப்படம் முடிந்த பிறகு அட்லீயுடன் விஜய் இணைவார் என்று கூறிவந்த நிலையில், விஜய் தனது 63 வது படத்திற்கு வேறு ஒரு இயக்குநரை ஒகே செய்திருப்பதாக கூறப்பட்டுகிறது. தனது நான்காவது படம் விஜயுடன் தான் இருக்கும் என்...
ஆக்‌ஷனில் அதகளம் பண்ண வரும் ‘நிகிஷா பட்டேல் ’!

ஆக்‌ஷனில் அதகளம் பண்ண வரும் ‘நிகிஷா பட்டேல் ’!

Latest News, Top Highlights
தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக 'புலி' படத்தில் 2010-ம் ஆண்டு அறிமுகமானவர் நிகிஷா படேல். தமிழ் சினிமாவுக்கு ‘தலைவன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ‘என்னமோ ஏதோ’ படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். இதையடுத்து 'கரையோரம்', 'நாரதன்', '7 நாட்கள்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது நிகிஷா படேல் தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். புதுமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆக்‌ஷன் ரோலில் அதிரடியாக களமிறங்குகிறார் நிகிஷா. இப்படத்தில் முகுல் தேவ் வில்லனாக நடிக்கவுள்ளார். படத்தின் கதை குறித்து நிகிஷா கூறுகையில், ‘நான் ஒரு குத்துசண்டை வீராங்கனை, எனக்கு ஆக்‌ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசை இருந்தது. அந்த ஆசை இப்போது நிறைவேறவுள்ளது. தற்போது கமிட் ஆகியுள்ள இப்படத்தில் முழு ஆக்‌ஷன் ரோலில் மிரட்டவுள்ளேன். இனி வரும் காலங்களிலும் முழுக்க...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் கூட்டணியா கமல்ஹாசன் ஓபன் டாக்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் கூட்டணியா கமல்ஹாசன் ஓபன் டாக்

Latest News, Top Highlights
நடிகர்கள் ரஜினியும், கமலும் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது இருவருமே கட்சி உறுப்பினர்கள், கட்சி கூட்டங்கள் நடத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், இதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்று ரஜினி கூறியிருந்தார். தற்போது கூட்டணி குறித்து கமல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘ரஜினியும் நானும் சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு உண்மையில் காலம்தான் பதில் சொல்லும். இருவரின் கொள்கை விளக்கங்கள் பொருந்துகிறதா? என்று பார்க்க வேண்டும். ரஜினியும் நானும் சேர்வது என்பது இப்போது எடுக்கக்கூடிய முடிவே கிடையாது. ரஜினியும் நானும் சேர்வது தேவையா? என்பதை இருவருமே யோசிக்க வேண்டும்’ என்றார். மேலும் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னையில் அரசு முதலாளித்துவத்தை காட்டுகிறது. வேலை நிறுத்தம் செய்த 7...
ரஜினியை ஏன் ஆதரிக்கிறோம் ?? ஒரு ரசிகனின் வரிகள்…

ரஜினியை ஏன் ஆதரிக்கிறோம் ?? ஒரு ரசிகனின் வரிகள்…

Latest News, Top Highlights
நான் ரஜினியைத் தொடர்ந்து ஆதரித்து எழுதி வருவதைப் பார்த்த சில பேர், இவன் ஒரு படித்த முட்டாள், நடிகர்கள் பின்னால் செல்பவன் என்று தொடர்ந்து நாகரிகம் இல்லாமல் கூறி வருகிறார்கள்.. இவர்களுக்கான பதிவு தான் இது. நான் ஒரு படித்த முட்டாள் என்று கூறுகிறார்கள். என்னவோ ரஜினிக்கு எதிராக களத்தில் காமராஜரும், அண்ணாதுரையும் இருப்பதை போலவும், நான் அவர்களை விட்டு விட்டு ரஜினியை ஆதரிப்பது போலவும் கூறி வருகிறார்கள். களத்தில் ரஜினியோடு நிற்கும் ஒரே ஒரே தலைவராவது, உழைத்து சம்பாதித்து கட்சி நடத்துபவராக இருக்கிறாரா?(நடிகர்களைத் தவிர). நல்லகண்ணு அய்யா இருக்கிறாரே?? என்று கூறுவார்கள். கடைசியாக அவருடைய இடதுசாரி இயக்கம், தேர்தலில் நிற்க அவருக்கு சீட்டு கொடுத்தது எப்பொழுது என்று உங்களுக்கு தெரியுமா? இடதுசாரி இயக்கம் முதலில் அவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கத் தயாரா? ஏண்டா? தேர்தலியே நிற்காத ஒருவரை எப்படி ஆதரிக்க ...
தனுஷுடன் இணைந்து நடிக்கும் சூப்பர் ஸ்டார்

தனுஷுடன் இணைந்து நடிக்கும் சூப்பர் ஸ்டார்

Latest News, Top Highlights
தனுஷ் நடிப்பில் தற்போது ‘மாரி 2’ உருவாகி வருகிறது. பாலாஜி மோகன் இயக்கி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தை தனுஷே இயக்கி, நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷுடன், நாகார்ஜுனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. "முதலில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அவரால் நடிக்க முடியாததால், தெலுங்கில் மற்றொரு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜுனாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிய...