Sunday, November 8
Shadow

Top Highlights

மாரச் 1 முதல் தமிழ் படங்கள் ரிலீஸ் இல்லை…

மாரச் 1 முதல் தமிழ் படங்கள் ரிலீஸ் இல்லை…

Latest News, Top Highlights
கியூப் நிறுவனத்திற்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. தென்னிந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் கியூப் நிறுவனத்திற்கு எதிராக வரும் மார்ச் 1ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கம் (கில்ட்) ஆதரவு தெரிவித்துள்ளது. இதனிடையே, தங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தது அதிர்ச்சி அளிக்கிறது; பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என கியூப் நிறுவனர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்....
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் உண்மையில்  வெற்றியா இல்லை தோல்வியா உண்மை நிலவரம் இதோ

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் உண்மையில் வெற்றியா இல்லை தோல்வியா உண்மை நிலவரம் இதோ

Latest News, Top Highlights
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் கடந்த சில நாட்களாக ஒரே பிரச்னை படம் வெற்றியா தோல்வியா என்பது தான் இதற்கு ஒரு பத்திரிக்கையாளரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் சமுக வலைத்தளங்களில் சண்டைபோட்டனர் இது நாம் அறிந்த விஷயம் கடைசியில் யார் வெற்றி பெற்றது என்றால் அது பத்திரிக்கையாளர் கௌசிக் தான் இந்த படத்தின் முழு வசூல் விவரம் இதோ தானா சேர்ந்த கூட்டம் இந்த பொங்கலுக்கு திரைக்கு வந்தது. கண்டிப்பாக இப்படம் சூர்யாவிற்கு ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருக்க, படமும் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், படம் பொங்கல் விடுமுறை தாண்டி பெரிதாக வசூல் வரவில்லை, இந்நிலையில் இப்படம் 25 நாட்கள் கடந்த நிலையில் பல திரையரங்குகளில் எடுத்துவிட்டனர். தற்போது இப்படத்தின் வசூல் விவரம் இதோ... தமிழ்நாடு- ரூ 44 கோடி ஆந்திரா/தெலுங்கானா- ரூ 15 கோடி கர்நாடகா- ரூ 6 கோடி கேரளா- ரூ 6 கோடி மற்ற மாநிலங்கள்-...
சர்ச்சை இயக்குனரோடு கைகோர்த்த நயன்தாரா!

சர்ச்சை இயக்குனரோடு கைகோர்த்த நயன்தாரா!

Latest News, Top Highlights
கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி அனைத்து தரப்பினரிடையேயும் பெரும் சர்ச்சையை கிளப்பிய குறும்படம் ‘லக்‌ஷ்மி’. இக்குறும்படம் குறித்து பல இடங்களில் விவாதமும் ஏற்பட்டது. இணையதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த குறும்படத்தை இயக்கிய சர்ஜுன் என்பவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர். இவர் இயக்கிய மா என்ற குறும்படமும் அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது. இந்நிலையில் நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் சர்ஜுன். அறம், குலேபாகவலி படத்தினை தயாரித்த கே ஜி ஆர் ஸ்டுடீயோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. இது முழுக்க முழுக்க திகில் கலந்த பேய் படமாக உருவாகவுள்ளதாம். விரைவில் படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது....
காமெடி நடிகர் வடிவேலால் பிரமாண்ட இணயக்குனர் ஷங்கர் நொந்து நூடுல்ஸ் ஆனார்

காமெடி நடிகர் வடிவேலால் பிரமாண்ட இணயக்குனர் ஷங்கர் நொந்து நூடுல்ஸ் ஆனார்

Latest News, Top Highlights
ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி'. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது படக்குழு. ஆனால், பல முறை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், வடிவேலு தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலுமே இல்லை. இதனால், தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் படக்குழுவினரிடம் எந்த ஒரு பதிலுமே சொல்ல முடியாத சூழலில் உள்ளார்கள். இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர, விரைவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்கள். இதன் படப்பிடிப்பிற்காக போடப்பட்டுள்ள அரங்குகளும் அப்படியே இருப்பதால்,...
துல்கர் சல்மானின் 25-வது படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளைஅடித்தால்’!

துல்கர் சல்மானின் 25-வது படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளைஅடித்தால்’!

Latest News, Top Highlights
துல்கர் சல்மான் நடிக்கவந்த 6 வருடங்களில், அவருடைய 25வது படத்தை எட்டியுள்ளார். பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். 2012ஆம் ஆண்டு வெளியான ‘செகண்ட் ஷோ’ மலையாளப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். தமிழில் ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்து வரும் துல்கர், நடிக்கவந்த 6 வருடங்களில் 25வது படத்தை எட்டியுள்ளார். தேசிங் பெரியசாமி இயக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ படம், துல்கரின் 25வது படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் துல்கரின் ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் முடிவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது....
ஜிப்ஸியோடு இறங்கும் ஜீவா – ராஜு முருகன்!

ஜிப்ஸியோடு இறங்கும் ஜீவா – ராஜு முருகன்!

Latest News, Top Highlights
குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜூமுருகனுடன் நடிகர் ஜீவா இணையும் படத்திற்கு ஜிப்ஸி என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது ராஜூமுருகன் பாலாவின் வர்மா படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இதனையடுத்து இயக்குனர் ராஜூமுருகன் ஜீவாவிடம் ஜிப்சி கதையை கூறியுள்ளார். வித்யாசமான கதை என்பதால் ஜீவாவும் உடனே கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை தேசிங்கு ராஜா, மனம்கொத்திப் பறவை ஆகிய படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் S.அம்பேத்குமார் தயாரிக்கவுள்ளார். இயக்குனர் ராஜூமுருகன் இதுவரை குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்கள் மூலம் சமூக வாழ்வியலை பிரதிபலிக்கும் படங்களை கொடுத்துள்ளார். தற்போது ஜிப்ஸி படம் மூலம் ஜீவாவுடன் இணைந்து கமர்ஷியலான சமூக வாழ்வியல் படத்தை கொடுக்கவுள்ளார். இந்த படத்தை இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் ராஜூமுருகன் திட...
ஹார்ட்வேர்ட் பல்கலைக் கழகத்தில் ஒலிக்க இருக்கும் “ஜல்லிக்கட்டு” பட  பாடல்

ஹார்ட்வேர்ட் பல்கலைக் கழகத்தில் ஒலிக்க இருக்கும் “ஜல்லிக்கட்டு” பட பாடல்

Latest News, Top Highlights
ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியீடு எங்கெல்லாம் நடந்துள்ளது, என திரைத்துறை செய்தியாளர்களை கேட்டால், நீண்ட பட்டியல் ஒன்றையே தருவார்கள். அதில் சில மேடைகள், நம் புருவத்தை உயர வைக்கும். அதைத் தாண்டி, - ஆச்சரியத்தில் முழ்க வைக்கும்... ஆனந்தத்தில் திளைக்க வைக்கும் முயற்சியில் பல புதிய களங்களை தனது திரைப்படத்துக்காக தேர்ந்தெடுத்துள்ளது அஹிம்சா புரொடக்ஷன்ஸ். ஆம்! தமிழ்.... தமிழர்... தாயகம்... போன்ற மண் சார்ந்த உணர்வுகள் முன்எப்போதும் இல்லாத உச்சத்துக்கு பயணிக்கும் நிலையில், இன்னொரு வரலாற்றுப் பதிவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளன. சங்கம் வைத்து மொழி வளர்ந்த தமிழன், தனது கலையிலும், கலாச்சாரத்திலும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே, பல படிகள் முன்னேறியிருந்தான் என்பதை, இன்றைக்கு ஆதாரத்துடன் முன்வைக்கும்.... பண்பாட்டு பாசறையாக... வளர்ந்த நாகரீகத்தை காட்டும் நல்லதொரு சாட்சியாக விளங்கும் தொல்பொருள் ஆராய்ச...
விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் ஜோடி சேரும் நடிகை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் ஜோடி சேரும் நடிகை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
விஜய் 62, சூர்யா 36 படங்களின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அஜித் நடிக்கும் `விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 22-ஆம் தேதி துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 5 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அஜித் - சிவா நான்காவது முறையாக இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் அனுஷ்கா, ஆத்மிகா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பெயர்கள் அடிபட்ட நிலையில், இந்த தகவல்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் நயாகி யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா, அஜித்துடன் ‘ஏகன்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களில் நடித...
அர்ஜூன் பட நாயகி இரண்டாவது திருமணம்

அர்ஜூன் பட நாயகி இரண்டாவது திருமணம்

Latest News, Top Highlights
மலையாள நடிகை திவ்யா உன்னி முதல் கணவரை விவாகரத்து செய்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். தமிழில் வேதம், பாளைத்து அம்மன் படங்களின் மூலம் பிரபலமானவர் திவ்யா உன்னி. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் கடந்த 2002ம் ஆண்டு மருத்துவர் சுதீர் சேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவில் செட்டிலானார். இவர்களுக்கு அர்ஜூன் என்ற மகனும், மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் திவ்யா உன்னி நடனப் பள்ளி நடத்தியது அவரது கணவர் சுதீர் சேகரனுக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த விவாகரத்திற்குப் பிறகு சிறிது காலம் கேரளாவில் வாழ்ந்து வந்தனர். பின்னர் மீண்டும் தன்னுடைய இரு குழந்தைகளுடன் அமெரிக்காவுக்...
விஜய்யை மாஸாக காட்ட களமிறங்கிய இரு பிரபலங்கள்

விஜய்யை மாஸாக காட்ட களமிறங்கிய இரு பிரபலங்கள்

Latest News, Top Highlights
‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் விஜய்யின் தொடக்க பாடல் மற்றும் சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மூன்று வாரங்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகள் அங்கு படமாக்கப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், சண்டைப்பயிற்சி இயக்குநர்களாக தெலுங்கு திரையுலகின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராம் மற்றும் லக்‌ஷ்மண் படக்குழுவுடன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இதில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். விஜய் - ஏ.ஆ...