Sunday, November 8
Shadow

Top Highlights

ரகுவரன் பற்றி பலருக்கும் தெரியாத தகவலையும் அவர்கள் நட்பை பற்றி கூறிய ரஜினிகாந்த்

ரகுவரன் பற்றி பலருக்கும் தெரியாத தகவலையும் அவர்கள் நட்பை பற்றி கூறிய ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மாதிரி நட்புடன் பழுக்கும் நடிகர்கள் என்றால் அது மிகவும் குறைவு என்று தான் சொல்லணும் சூப்பர்ஸ்டார்வுடன் நடிக்கும் நடிகர்கள் எப்பவும் அவருக்கு மிக நெருங்கிய நட்பு வட்டராரத்துக்குள் வந்துவிடுவார்கள் அதிலும் ரஜினிகாந்த் அவர்களுடன் மிகவும் நெருங்கிய நண்பராக இருந்தவர் ரகுவரன் காரணம் அவரின் நடிப்பு மிகவும் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிடிக்கும் அதுனாலே ரஜினிகாந்த் முக்கிய படங்களில் நடித்தவர் ரகுவரன் . நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ரகுவரன் நடித்த பாஷா தற்போதும் பேசப்படும் படங்களுள் ஒன்று. அதற்கு காரணம் கதை, ரஜினியின் ஸ்டைல் மட்டுமின்றி வில்லன் ரகுவரனுக்கும் பெரிய பங்கு உண்டு. நடிகர் ரகுவரன் 2008ல் உடல்நலக்குறைவு காரணமாக காலமானர். இந்நிலையில் அவர் இசையமைத்த பாடல்களை ஒரு தொகுப்பாக ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதை நடிகர் ரஜினிகாந்த் தான் நேற்று வெளியிட்...
ரகுவரன் இசையமைத்து பாடிய பாடலை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!

ரகுவரன் இசையமைத்து பாடிய பாடலை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!

Latest News, Top Highlights
நடிகர் ரகுவரன் தமிழ்த் திரையுலகத்தில் மறக்க முடியாத ஒரு நடிகர், 1982 ஆம் ஆண்டு வெளிவந்த ஏழாவது மனிதன் படத்தில் அறிமுகமானார். வில்லனாக பல படங்களில் தன்னுடைய மிரட்டலை வெளிப்படுத்தி ஒரு சிறந்த நடிகனாக தன்னை முன்னிலை படுத்தியிருந்தார். பாட்ஷா, அருணாச்சலம் என அவர் நடித்த படங்களில் சிலவற்றை காலத்தாலும் மறக்க முடியாத ஒன்று. உடல்நலக்குறைவுக் காரணமாக 2008 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். ரகுவரன் சிறந்த இசைக் கலைஞர் என்பது பலருக்கும் தெரியாது. லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியில் பியானோவில் தேர்ச்சி பெற்றவர். இசை மீது அவருக்குள்ள ஆர்வத்தால் அவர் 30க்கும் மேற்பட்ட பாடல்களை இசையமைத்து பாடி வைத்துள்ளார். அவற்றை ரகுவரின் மனைவி நடிகை ரோகிணி, மகன் ரிஷிவரன் ஒரு இசை ஆல்பமாகத் தொகுத்துள்ளார்கள். ரகுவரன் - எ மியூசிக்கல் ஜர்னி என பெயரிடப்பட்டுள்ள அந்த ஆல்பத்தை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளா...
கவுதம் கார்த்திக் மற்றும் கார்த்திக் நடிக்கும் Mr.சந்திரமௌலி’ ஏப்ரல் 27 ரிலீஸ்

கவுதம் கார்த்திக் மற்றும் கார்த்திக் நடிக்கும் Mr.சந்திரமௌலி’ ஏப்ரல் 27 ரிலீஸ்

Latest News, Top Highlights
கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசன்றா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் திரு இயக்கும் படம் 'Mr.சந்திரமௌலி'. கார்த்திக்கும் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மிக வேகமாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் 'Mr.சந்திரமௌலி' வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஒரு முக்கியமான குத்துச்சண்டை காட்சியை சமீபத்தில் படமாக்கியுள்ளனர். தொடர்ந்து 18 மணி நேரம் நடந்துள்ள இந்த படப்பிடிப்பில் துளியும் சோர்வாகமல், முழு ஓத்துழைப்பையும் தந்து அசத்தியுள்ளார் கதாநாயகன் கவுதம் கார்த்திக். அவரது இந்த உழைப்பை 'Mr.சந்திரமௌலி' அணியும் இப்படத்தின் சண்டை இயக்குனர் 'ஸ்டண்ட்' சிவாவும் பாராட்டியுள்ளனர். இந்த குத்துசண்டை காட்சி இப்படத்தின் முக்கிய அம்சங்களின் ஒன்றாக இரு...
திரிஷா முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கும் “குற்றப்பயிற்சி”

திரிஷா முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கும் “குற்றப்பயிற்சி”

Latest News, Top Highlights
ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் சார்பாக G. விவேகானந்தன் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் "குற்றப்பயிற்சி". தாரைத் தப்பட்டை படத்தில் இயக்குநர் பாலாவிடம் பணியாற்றிய வர்ணிக் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 1980 காலகட்டத்தின் பின்னணியில் நடக்கும்படி அமைக்கபட்டிருக்கும் இத்திரைப்படத்தில், பெண் துப்பரிவாளராக முதன்மை கதாப்பாத்திரம் ஏற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை திரிஷா. மேலும் இப்படத்தில் , சுரபி, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒரு உண்மைசம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் கதை ஒரு கொலையும், கொலையின் பின்னணியும் துப்புதுலக்கும் விதமாக விருவிருப்பான திரைக்கதை அமைத்து உருவாகியுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் படத்தின் முதன்மை கதாப்பாத்திரம் பெண் துப்பரிவாளராக நடிப்பது இதுவே முதல் முறை. முதல் இந்திய...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்யின் 2.0 ரிலீஸ் மீண்டும் தள்ளிபோகிறது

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்யின் 2.0 ரிலீஸ் மீண்டும் தள்ளிபோகிறது

Latest News, Top Highlights
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றன. தான் நினைத்தது போன்று கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கவேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் ஷங்கர். முழுக்க 3டி கேமிரா தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் படம் என்பதால், கிராபிக்ஸ் காட்சிகள் செய்வதில் கடினமாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள். மேலும், பிப்ரவரி மாத இறுதியில் '2.0' டீஸர் வெளியீட்டு விழாவை ஹைதராபாத்தில் நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், ஏப்ரல் வெளியீடும் சாத்தியமில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு பாடலின் கிராபிக்ஸ் பணிகள் தொடங்கப்படாமலே இருக்கிறது. இதுவரை முடித்துள்ள காட்சிகள் அனைத்தையும் படத்தோடு இணைத்து DI பணிகள் உள்ளிட்டவற்றை முடிக்க காலதாமதமாகும். இதனால் தான் வெளியீட்டு தேதியை இன்ன...
பிரபல நடன இயக்குனரால் பாலியல் தொந்தரவு அமலா பால் போலீசில் புகார்

பிரபல நடன இயக்குனரால் பாலியல் தொந்தரவு அமலா பால் போலீசில் புகார்

Latest News, Top Highlights
பாலியல் தொல்லை கொடுத்ததாக நடனப்பள்ளி ஆசிரியர் மீது நடிகை அமலாபால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர், நடிகை அமலா பால் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் நடிகை அமலாபால் நடனப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னை தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார். நடன வகுப்பின் போது டான்ஸ் மாஸ்டர் தன்னிடம் ஆபாசமாக பேசி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அமலாபால் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஏஎல் விஜயை காதல் திருமணம் செய்து கொண்ட அமலாபால், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விவாகரத்து பெற்றார். தற்போது தனியாக வசித்து வரும் அவர்...
விஜய் சேதுபதி படத்தில் டப்ஸ்மேஷ் மிர்னாலினி

விஜய் சேதுபதி படத்தில் டப்ஸ்மேஷ் மிர்னாலினி

Latest News, Top Highlights
தியாகராஜன் குமாரராஜா இயக்கி தயாரித்து வரும் படம் `சூப்பர் டீலக்ஸ்'. விஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் டப்ஸ்மேஷ் பிரபலம் மிர்னாலினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் மூலம் மிர்னாலினி தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். தியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கும் இந்த படத்திற்கு மிஷ்கின், நலன் குமாரசாமி மற்றும் நீலன் சேகர் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கின்றனர். இப்படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். வேம்பு என்ற கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார்....
கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா

கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா

Latest News, Top Highlights
`தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யாயின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா, பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர். சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பானுப்ரியா, மௌனிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். நேற்று முன்தினம் இந்த படத்திற்காக ரேக்ளா ரேஸ் நடப்பது போன்ற காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதைப் பார்ப்பதற்காக நடிகர் சூர்யா தனது மகன் தேவுடன் தென்காசி சென்று கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அங்கு ரேக்ளா ரேஸ் பார்க்கும் வீடியோவையும், புகைப்படத்தையும் அவரது டு...
கத்தி படத்திற்கும், விஜய் 62 படத்திற்குமுள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

கத்தி படத்திற்கும், விஜய் 62 படத்திற்குமுள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

Latest News, Top Highlights
‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். சமீபத்தில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு கொல்கத்தா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு அனல் பறக்கும் சில ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க ஏ.ஆர்.முருதாஸ் திட்டமிட்டிருக்கிறாராம். அங்கு சுமார் 1 மாதம் வரை படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறதாம். முன்னதாக கத்தி படத்தின் ஓபனிங் சீன் கொல்கத்தாவில் தான் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விஜய்யின் ...
பார்த்திபன் மகளுக்கு, எடிட்டர் மகனுடன் கல்யாணம்

பார்த்திபன் மகளுக்கு, எடிட்டர் மகனுடன் கல்யாணம்

Latest News, Top Highlights
நடிகர் பார்த்திபனுக்கும், நடிகை சீதாவுக்கும் பிறந்த மகள் கீர்த்தனா. இவர் 2002-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. தற்போது மணிரத்னமிடம் கீர்த்தனா உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். விரைவில் புதிய படமொன்றை இயக்க இருக்கிறார். இந்நிலையில், கீர்த்தனாவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. மணமகன் பெயர் அக்‌ஷய். விசுவல் கம்யூனிகேஷன் படித்து இருக்கிறார். இவர் பிரபல சினிமா எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் ஆவார். கீர்த்தனா - அக்‌ஷய் திருமணம் வருகிற மார்ச் மாதம் 8-ந் தேதி சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது....