Sunday, November 8
Shadow

Top Highlights

ரஜினி திட்டம்போட்ட நாளில் களமிறங்கும் கமல்

ரஜினி திட்டம்போட்ட நாளில் களமிறங்கும் கமல்

Latest News, Top Highlights
கமல்ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்'. இரு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது விஸ்வரூபம்-2 ரிலீசாக இருக்கிறது. கிராபிக்ஸ் பணிகள் சமீபத்தில் முடிந்த நிலையில், டப்பிங் பணிகள் தற்போது துவங்கி இருக்கிறது. நடிகர் கமல்ஹாசனும் டப்பிங் பணிகளில் பிசியாகி இருக்கிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்தை, ஏப்ரலில் ரிலீஸ் செய்ய கமல் திட்டமிட்டுள்ளாராம். அதுவும் ரஜினியின் `2.0' படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த ஏப்ரல் 27-ஆம் தேதியே வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கிராபிக்ஸ் பணிகள் தாமதமாவதால் `2.0' ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த இடத்தை கமல் நிரப்ப முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ...
தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டுக்கு சிம்பு, வடிவேலு, திரிஷா விளக்கம்

தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டுக்கு சிம்பு, வடிவேலு, திரிஷா விளக்கம்

Latest News, Top Highlights
நடிகர்கள் சிம்பு, வடிவேலு, நடிகை திரிஷா ஆகியோர் மீது பட அதிபர்கள் சங்கத்தில் தயாரிப்பாளர்கள் புகார்கள் அளித்து இருந்தனர். இது, பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கூறியிருந்தார். வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்ததாகவும், அதில் திடீரென்று நடிக்க மறுத்து வடிவேலு விலகி விட்டதாகவும், இதனால் தனக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் குற்றம் சாட்டி இருந்தார். நடிகை திரிஷாவை ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சாமி-2 படத்துக்கு ஒப்பந்தம் செய்து இருந்தனர். ஆனால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று அவர் விலகி விட்டார். இதனால் திரிஷா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. ...
‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் முழு நீள காமெடி கலந்த ஜனரஞ்சகமான படம். – இயக்குனர் ஆறுமுக குமார்

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் முழு நீள காமெடி கலந்த ஜனரஞ்சகமான படம். – இயக்குனர் ஆறுமுக குமார்

Latest News, Top Highlights
வித்யாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, அதில் அசத்தி பெரிய வெற்றிகளை தொடர்ந்து சுவைப்பவர் இந்திய சினிமாவிலேயே சிலர் தான். இந்த பட்டியலில் விஜய் சேதுபதி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவரது அடுத்த படமான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' நாளை பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை '7C's Entertainment Private Limited' மற்றும் 'Amme Narayana Entertainment' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' குறித்து அதன் இயக்குனர் ஆறுமுக குமார் பேசுகையில் , '' இது ஒரு முழு நீள காமெடி கலந்த ஜனரஞ்சகமான படம். இந்த கதை களம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும். படத்தின் ஒவ்வொரு நடிகரையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தோம். படத்தின் ஒவ்வொரு நடிகரும் தனது பெஸ்ட்டை தந்துள்ளனர். விஜய் சேதுபதி அவர்களுடன் பணிபுரிந்தது ஒரு...
Mr.சந்திரமௌலி’ படப்பிடிப்புக்கு விஜயம் செய்த நடிகர் விஷால் !!!

Mr.சந்திரமௌலி’ படப்பிடிப்புக்கு விஜயம் செய்த நடிகர் விஷால் !!!

Latest News, Top Highlights
கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசன்றா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் 'Mr.சந்திரமௌலி' படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் தென்னிந்தியா நடிகர் சங்கத்தின் செயலாளருமான திரு.விஷால் அவர்கள் வந்து படக்குழுவினரை சந்தித்து அவர்களது வேகமான மற்றும் சிறந்த பணியை பாராட்டியுள்ளார். திட்டமிட்டபடி படப்பிடிப்பை சிறப்பாக நடத்துவதும், ரிலீஸ் தேதியை தற்பொழுதே ஏப்ரல் 27 என அறிவித்திருப்பதும் இயக்குனர் திரு மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களது அருமையான திட்டமிடுதலுக்கு சான்றாகும் என விஷால் கூறியுள்ளார். இதே போல் தமிழ் சினிமாவின் மற்றவர்களும் சிறப்பாக திட்டமிடவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்....
கீர்த்தி சுரேஷ் வரைந்த ஓவியத்தை பாதுகாத்து வரும் விஜய்!

கீர்த்தி சுரேஷ் வரைந்த ஓவியத்தை பாதுகாத்து வரும் விஜய்!

Latest News, Top Highlights
கீர்த்தி சுரேஷ் வரைந்து கொடுத்த ஓவியத்தை, தன்னுடைய வீட்டில் பத்திரமாகப் பாதுகாத்து வைத்துள்ளார் விஜய். விஜய்யின் பிறந்தநாளின்போது கடந்த வருடம் ஒரு ஓவியத்தைப் பரிசாகக் கொடுத்தார் கீர்த்தி சுரேஷ். இந்த ஓவியம், கீர்த்தி சுரேஷ் கைப்பட வரைந்தது. இந்த ஓவியத்தின் கீழே, ‘என்றென்றும் வெற்றிநடை தொடரட்டும்… பல கோடி ரசிகைகளில் ஒருத்தி’ என தமிழில் எழுதிக் கொடுத்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்த ஓவியத்தை, தன் வீட்டு வரவேற்பறையில் பத்திரமாக மாட்டி வைத்துள்ளார் விஜய். சமீபத்தில் தன் மகளின் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக விஜய் வீட்டுக்குச் சென்றார் பார்த்திபன். அப்போது விஜய் மற்றும் ஷோபா சந்திரசேகருடன் போட்டோ எடுத்துக் கொண்டார். அந்த போட்டோவில், அவர்களின் பின்புறம் கீர்த்தி சுரேஷ் வரைந்த ஓவியம் மாட்டப்பட்டிருந்தது....
இறுதிகட்டப் படப்பிடிப்பில் சர்வம் தாளமயம்

இறுதிகட்டப் படப்பிடிப்பில் சர்வம் தாளமயம்

Latest News, Top Highlights
'அடங்காதே', '4ஜி', 'ஐங்கரன்', 'குப்பத்து ராஜா', '100% காதல்', 'நாச்சியார்' ஆகிய படங்களைத் தொடர்ந்து ராஜீவ்மேனன் இயக்கத்தில் 'சர்வம் தாளமயம்' படத்தில் நடிக்கத் தொடங்கினார் ஜி.வி.பிரகாஷ். 'மின்சார கனவு' மற்றும் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் 3-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ட்ரம்ஸ் வாத்திய கலைஞராக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது ராஜஸ்தான் சுற்றியுள்ள பகுதிகளில் பாடல் ஒன்றை படமாக்கவுள்ளார்கள். அதோடு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவு பெறவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். 9 பாடல்கள் கொண்ட இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நாயகியாக அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் ஜி.வி.பிரகாஷுடன் நடித்துள்ளனர். இப்படத்தைத் தொடர்ந்து சசி இயக்கத்தில் ...
அபி சரவணன் நடிக்கும் திரு.வாக்காளர்

அபி சரவணன் நடிக்கும் திரு.வாக்காளர்

Latest News, Top Highlights
1986 law Batch Media Productions தயாரிக்கும் முதல் படமான ​'​​​திரு​. வாக்காளர்​'​ பட பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தின் இயக்குநர் தி.இரமேஷ் பிரபாகரன். இவர் வாசு, மகேந்திரன் ஆர்.வி.உதயகுமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இவர் ஏற்கனவே கன்னடத்தில் கள்மஞ்சா என்ற வெற்றி படத்தை இயக்கி உள்ளார்.​ இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அபி சரவணன் நடிக்கிறார். மேலும் 3 புதுமுகங்கள் நடிக்க உள்ளனர்.​ இப்படத்தின் பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன், நாடார் சங்க தலைவர் த.பத்மநாபன், திருவள்ளுர் மாவட்ட வியாபாரிகள் சங்க தலைவர் திருவடி மற்றும் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், ராஜா ரவி, வி.சி.குகநாதன், லியாகத் அலிகான், ஆர். சுந்தர்ராஜன், மனோஜ்குமார்...
ஜீவாவின் கொரில்லா படப்பிடிப்பு தொடங்கியது

ஜீவாவின் கொரில்லா படப்பிடிப்பு தொடங்கியது

Latest News, Top Highlights
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘கொரில்லா’. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி. ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கிறது. இந்தியாவில் நடிகர் ஒருவருடன் ’காங்’ சிம்பன்சி குரங்கு நடிப்பது இது தான் முதன்முறை என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியிருக்கிறது. இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு இன்று பாண்டிசேரியில் பூஜையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதம் தாய்லாந்தில் படப்பிடிப்பு தொடரவிருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடையும...
பாம்பனாக மாறிய சரத்குமார்

பாம்பனாக மாறிய சரத்குமார்

Latest News, Top Highlights
மகாபிரபு, ஏய், சாணக்யா, சண்டமாருதம்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய சரத்குமார் – இயக்குனர் ஏ.வெங்கடேஷ், மீண்டும் ‘பாம்பன்’ என்ற படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். இதில் சரத்குமார் வித்தியாசமான வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும், முதல் பாடல் பதிவு தற்போது தொடங்கி இருப்பதாகவும் சரத்குமார் அறிவித்திருக்கிறார். எஸ்.எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.கே.சங்கரலிங்கம் தயாரிக்கவுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். விரைவில் இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர...
வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட ஷாருக்கானின் 250 கோடி வீடு!

வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட ஷாருக்கானின் 250 கோடி வீடு!

Latest News, Top Highlights
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சினிமா மூலம் வரும் வருமானத்தை ரியல் ஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து வருகிறார். அவருக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் பல பண்னை வீடுகள் சொந்தமாக உள்ளது. அலிபக் எனும் கடலோரப் பகுதியில் உள்ள ஷாருக்கானின் பண்ணை வீடு சுமார் 20 ஆயிரம் ச.மீ பரப்பளவு கொண்டது. இந்த பண்ணை வீட்டின் மதிப்பு சுமார் ரூ.250 கோடி. ஆனால் இந்த பண்ணை வீட்டை ஷாருக்கான் வேறு ஒருவரது பெயரில் நிர்வகித்து வந்தார். வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஷாருக்கான் இந்த பண்ணை வீட்டுக்கு உரிய அனுமதிகளை பெறாதது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வருமான வரித்துறை சட்டம் பிரிவு 24-யின் கீழ் நடவடிக்கை எடுத்து அந்த பண்ணை வீட்டை முடக்கினர். தற்போது அந்த பண்ணை வீடு பினாமி சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளது....