Sunday, November 8
Shadow

Top Highlights

2ஜி தீர்ப்பு குறித்து தனது ஆதங்கத்தை வெளியிட்ட நடிகர் பிரசன்னா

2ஜி தீர்ப்பு குறித்து தனது ஆதங்கத்தை வெளியிட்ட நடிகர் பிரசன்னா

Latest News, Top Highlights
இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 2 ஜி வழக்கின் தீர்ப்பல் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் நிரபராதிகள் என சி.பி.ஐ. சிறப்பு நீமிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை வரவேற்றுள்ள திமுக-வினர் அதனை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து நடிகர் பிரசன்னா, அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “தீர்ப்பு சரியெனில் இன்றுவரை நாம் முட்டாளாக்கப்பட்டிருந்தோம்! தவறெனில் இன்றுமுதல் நாம் முட்டாளாக்கப்படுகிறோம். இந்திய ஜனநாயகத்தில் நாள்தோறும் மீண்டும் மீண்டும் முட்டாளாக்கப்படுவது வாக்காளப் பெருமக்களே! வழக்கு நடத்த அரசின் செலவெல்லாம் போகட்டும் taxpayerக்கே! வாழ்க ஜனநாயகம்! #2Gverdict என்று குறிப்பிட்டிருக்கிறார்....
இன்னும் கொஞ்ச நாளில் சினிமாவை விட்டு விலகுவேன் – அஜித் பட நாயகி

இன்னும் கொஞ்ச நாளில் சினிமாவை விட்டு விலகுவேன் – அஜித் பட நாயகி

Latest News, Top Highlights
நடிகர்கள் மட்டுமின்றி சில நடிகைகளும் தொழில் அதிபர்களாக மாறத் தொடங்கிவிட்டனர். நடிப்பு நிரந்தரம் அல்ல என்பதை உணர்ந்து சம்பாதித்த பணத்தை வேறு தொழில்களில் முதலீடு செய்து லாபம் பார்க்கிறார்கள். அந்த லிஸ்டில் காஜல் அகர்வாலும் இணையவிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் போது, நாயகிகள் சினிமா தான் உயிர் என்று இருக்கிறார்கள். எப்போதும் நடித்துக்கொண்டே இருப்போம் என்றும் நம்புகின்றனர். அது தவறு. சினிமா நிரந்தரமானது அல்ல. மார்க்கெட் போனதும் ஓரம் கட்டி விடுவார்கள். எனவே சினிமாவை தவிர்த்து வேறு தொழில் செய்ய நாயகிகள் தயாராக இருக்க வேண்டும். நடிப்பதை நிறுத்திவிட்டால் என்ன செய்வது? என்று நான் சிந்திக்க தொடங்கி இருக்கிறேன். வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. நடிகைகள் ஏதேனும் ஒரு வியாபார தொழிலில் ஈடுபட வேண்டும். அவர்கள் தகுதிக்கு ஏற்ப அதை தேர்வு செய்து கொள்வதே சிறந்தது. நான் சி...
தனது அடுத்த படம் இது தான்: ஓவியா

தனது அடுத்த படம் இது தான்: ஓவியா

Latest News, Top Highlights
`களவாணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. தனது முதல் படத்திலேயே அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், `கலகலப்பு' அவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. பின்னர் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்துள்ளார். மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியிருக்கும் ஓவியா, தற்போது ராகாவா லாரன்சுடன் காஞ்சனா 3 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர விஷ்ணு விஷாலுடன் சிலுக்குவார்பட்டி சிங்கம் மற்றும் ஓவியாவ விட்டா வேற யாரு சீனி படத்தில் நடித்து டுடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், டிகே இயக்கத்தில் `காட்டேரி' படத்தில் ஒப்பந்தமான ஓவியாவுக்கு பதிலாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், ரசிகர்களுடன் டுவிட்டர...
கடும் உழைப்பு மட்டுமே வெற்றியை தரும் – சிவகார்த்திகேயன்

கடும் உழைப்பு மட்டுமே வெற்றியை தரும் – சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
வெற்றியும் நட்சத்திர அந்தஸ்தும் சிலருக்கு இயல்பாகவே அமையும் , சிலருக்கு கடும் உழைப்பின் மூலம் கிடைக்கும். அப்படியான உழைப்பு மூலம் தன்னை உயர்த்திக்கொண்டு வெற்றி பெற்றுவருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவரது அசுர வளர்ச்சி அனைவரும் அறிந்ததே. அவரது 'வேலைக்காரன்' படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. மோகன் ராஜா இயக்கத்தில் , '24am ஸ்டுடியோஸ்' R D ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிக்கெட் புக்கிங் அனைவரையும் வாய் பிளக்க செய்துள்ளது. இதற்கு இயக்குனர் மோகன் ராஜாவின் வெற்றி பார்முலா , எல்லா வயது மக்களையும் கவர்ந்துள்ள சிவகார்த்திகேயனின் இமேஜ், அருமையான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மற்றும் தயாரிப்பாளர் R D ராஜா அவர்களின் பங்களிப்பு ஆகியவை காரணங்களாக கூறப்படுகின்றன. 'வேலைக்காரன்' குறித்து சிவகார்த்திகேயன் பேசுகையில் , '' 'அதிர்ஷ்டம் வாய்ப்ப...
விஷால் உள்குத்தால்  வெளியாகும் தினேஷின் “உள்குத்து”

விஷால் உள்குத்தால் வெளியாகும் தினேஷின் “உள்குத்து”

Latest News, Top Highlights
"உள்குத்து" திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் நாயகன் தினேஷ், தயாரிப்பாளர் PK FILM Factory G.விட்டல் குமார் , இயக்குநர் கார்த்திக் ராஜு , இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவாளர் P.K.வர்மா , நடிகர் பாலசரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு பேசினர். நடிகர் தினேஷ் பேசியது :- நீண்ட நாட்களுக்கு பிறகு நான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் வெளியாகிறது. வாழ்க்கை எனக்கு இந்த இடைவெளியில் நிறைய விஷயங்களை எனக்கு கற்றுதந்துள்ளது. எனக்கு நெருக்கமாக இருந்த சிலர் தூரமாக சென்றுள்ளனர். தூரமாக இருந்த சிலர் இன்று எனக்கு நெருக்கமாக உள்ளனர். கபாலி படத்துக்கு பிறகு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி என்றார். தயாரிப்பாளர் விட்டல்குமார் பேசியது உள்குத்து திரைப்படம் வெளியாவதற்கு முக்கியமான காரணம் கடவுளும் ...
திரிஷாவுடன் இணையும் கார்த்தி

திரிஷாவுடன் இணையும் கார்த்தி

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் 15 வருடங்களை கடந்தும் அரை டஜன் படங்களுடன் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் ‘96’, ‘சதுரங்க வேட்டை-2’, ‘மோகினி’, ‘கர்ஜனை’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. மேலும் நிவின் பாலி ஜோடியாக `ஹே ஜுட்’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இதில் ‘மோகினி’ என்ற படத்தை ஆர்.மாதேஷ் இயக்கியிருக்கிறார். ஹாரர் கலந்த திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்த டிரைலரை நடிகர் கார்த்தி வெளியிட இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படம் பிப்ரவரியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது....
சின்ன படங்களை கொல்லாதீங்க: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆவேசம்

சின்ன படங்களை கொல்லாதீங்க: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆவேசம்

Latest News, Top Highlights
ஓம் சாய் ஸ்ரீ கிரியேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நான் இப்படித்தான்’. பெங்களூரை சேர்ந்த சிவகுமார் படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கதாநாயகியாக பரிமளா நடித்துள்ள இந்தப்படத்தை வெண்ணிலா சரவணன் இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கு ஏ.கே.ராம்ஜி இசையமைக்க, கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். யானை மேல் குதிரை சவாரி, பெப்பே, ஒளிச்சித்திரம், நரிவேட்டை படங்களில் பணியாற்றிய கணேஷ்குமார் படத்தொகுப்பாளராக தனது பங்களிப்பை தந்துள்ளார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்தவிழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்க (கில்டு) செயலாளர் ஜாக்குவார் தங்கம், நடிகர் ‘முருகா’ அசோக், கேபிள் சங்கர், தரரிப்பாளர் திருநாவுக்கரசு, இயக்குனர் தங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியபோது சிறிய பட தயாரிப்...
டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் டிடி விவாகரத்து கேட்டு மனு

டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் டிடி விவாகரத்து கேட்டு மனு

Latest News, Top Highlights
தனியார் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. 'நம்ம வீட்டு கல்யாணம்', 'காஃபி வித் டிடி' போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார். குறும்புத்தனமான டிடியின் பேச்சுக்காகவே அவரின் நிகழ்ச்சிகளுக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது டிடிக்கும் அவரின் நண்பர் ஸ்ரீகாந்த ரவிச்சந்திரனுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2014 ஆம் ஜூன் மாதம் 29 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. தற்போது 34 வயது ஆகும் டிடிக்கும் அவரின் கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது மேலும் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கு டிடியின் கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திவ்யதர்ஷினிக்கும்(டிடி) அவரின் கணவர் ஸ்ரீகாந்துகும் பிரச்சினை ஏற்பட்டது. அண்மைக்காலமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிகின்றது. இந்நிலையில் இருவரும் பரஸ்...
அருவி படக்குழுவை வருடத்தெடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்

அருவி படக்குழுவை வருடத்தெடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்

Latest News, Top Highlights
'அருவி' படத்தின் பெரும்பாலான காட்சிகள் 'சொல்வதெல்லாம் உண்மை' போன்றதொரு நிகழ்ச்சியில் நடப்பது போன்று அமைத்திருப்பார் இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன். 'அருவி' படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், அப்படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் பலரும் ’சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை கிண்டல் செய்திருக்கிறார்கள் என்று பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பவே, 'அருவி' படத்துக்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு கடுமையான ட்வீட்களை வெளியிட்டிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது: இயக்குநர், அவர் வேலை செய்த நிகழ்ச்சியில், சேனலில் இது போன்ற விஷயங்களை பார்த்திருக்கலாம். ஆனால் அந்த சேனலை கிண்டல் செய்ய அவருக்கு தைரியம் இல்லை. 'சொல்வதெல்லாம் உண்மை' புகழடைவதற்கு எளிய இலக்காக இருக்கிறது. இன்னொரு பெண்ணின் மீது தனிப்பட்ட, மலினமான தா...
இரு பிரம்மாண்டமான இசை ஆல்பத்தை வெளியிடும் உலக புகழ் பெற்ற இசை மற்றும் நடன இயக்குநர் Dr.ரகுநாத் மனெட்

இரு பிரம்மாண்டமான இசை ஆல்பத்தை வெளியிடும் உலக புகழ் பெற்ற இசை மற்றும் நடன இயக்குநர் Dr.ரகுநாத் மனெட்

Latest News, Top Highlights
உலக புகழ் பெற்ற இசை மற்றும் நடன இயக்குநர் Dr.ரகுநாத் மனெட், "காதல் கவிதை" மற்றும் "தூரல்" என்ற இரு பிரம்மாண்டமான இசை ஆல்பத்தை தயாரித்துள்ளார். Dr.ரகுநாத் மனெட் மற்றும் AIRTEL SUPER SINGER புகழ் FARIDHA இருவரும் சேர்ந்து இந்த இசை ஆல்பத்தில் பணியாற்றியுள்ளனர். இந்த ஆல்பம் நமது கலாச்சாரயத்தை அழகாக உணர்த்தும் படி உருவாக்கப்பட்டுள்ளது. Archie Shepp, Michel Portal, Didier Lockwood, Carolyn Carlson, Richard Galliano, Dr. Balamurali Krishna, Drums Sivamani உள்ளிட்ட பல இசைக் கலைஞர்களுடன் Dr.ரகுநாத் மனெட் பணிபுரிந்துள்ளார். Dr.ரகுநாத் மனெட் பிரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான செவாலியர் விருதை (Chevilar award) கலைத் துறையில் தனது பங்களிப்பிற்காக வாங்கி உள்ளார். காதல் கவிதை மற்றும் தூரல் ஆல்பங்களை சென்னையில் பல முன்னணி சினிமா பிரபலங்களின் முன்னணியில் பிரமாண்ட முறையில் வெளியிடத் திட்டமிட்டுள்ளா...