Sunday, June 21
Shadow

Tag: #sunaina

நடிகை சுனைனா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சுனைனா  இவர் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சுனைனா ஏப்ரல் 17, 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பிறந்தார். இவர் நாக்பூர் மவுண்ட் கார்மல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், படித்துவந்தார். தற்போது வர்த்தக இளங்கலை படிப்பு படிப்பதற்கு ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்துள்ளார். செப்டம்பர் 26, 2008 ஆம் ஆண்டு சுனைனா நகுலுடன் இணைந்து நடித்த காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள நாக்கு முக்கா என்ற கானாப் பாடல் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இவர் நடித்த படங்கள்: சில்லு கருப்பட்டி, காளி, தொண்டன், கவலை வேண்டாம், நம்பியார், வன்மம், சமர், நீர்ப்பறவை, வம்சம், யாதுமாகி, மாசிலாமணி, காதலில் விழுந்தேன்...
`எனை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பை தொடங்கிய கவுதம் மேனன்

`எனை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பை தொடங்கிய கவுதம் மேனன்

Latest News, Top Highlights
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி இருக்கிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா'. தனுஷ் - மேகா ஆகாஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்ட நிலையில், கவுதம் மேனன் விக்ரமை வைத்து `துருவ நட்சத்திரம்' படத்தை இயக்கி வந்தார். தனுஷும் வடசென்னை படத்தில் பிசியாகி விட்டார். இந்நிலையில் சிறிய இடைவேளைக்கு பிறகு கவுதம் மீண்டும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார். சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. டிசம்பருக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ள கவுதம் மேனன் படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய...