
“ஒருதலைக் காதலின் வலியும், நட்பின் வெப்பமும்” – ‘இதயம் முரளி’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு! அட்லீ நம்பிக்கை, அதர்வா உற்சாகம்!
சென்னை:
இளம் தலைமுறையின் உணர்வுகளையும், காதலின் இனிமை மற்றும் வலியையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘இதயம் முரளி’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. Dawn Pictures தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி தயாரித்துள்ள இப்படம், ஜூலை 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா, ரசிகர்களின் ஆரவாரத்தால் திருவிழா போல் மாறியது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்ட இந்த நிகழ்வில், படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தின் உருவாக்கப் பயணம், அனுபவங்கள் மற்றும் திரைப்படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் அட்லீ, இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனின் அர்ப்பணிப்பை மனதார பாராட்டினார். “ஆகாஷ் பல ஆண்டுகளாக இந்தக் கதைக்காக உழைத்திருக்கிறார். அவரது உழைப்பும், விடாமுயற்சியும் ‘இதயம் முரளி’ மூலம் பலன் பெறும். இது அவரது திரைப்பயணத்தின் முக்கியமான மைல்கல்லாக இருக்கும்” என்று கூறிய அவர், “அதர்வாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான வெற்றிப் படமாகவும் இது அமையும்” என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
படத்தின் நாயகன் அதர்வா முரளி பேசுகையில், “இளம் தலைமுறையின் ஆற்றலுடன் இணைந்து பணியாற்றிய இந்த அனுபவம் மறக்க முடியாதது. காதல், நட்பு, குடும்ப உறவுகள் என அனைவரும் ரசிக்கும் வகையில் படம் உருவாகியுள்ளது. இயக்குநராக ஆகாஷின் முதல் படைப்பில் நான் ஒரு பகுதியாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன், இந்த திரைப்படம் வெறும் காதல் கதையாக இல்லாமல், மனித உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக இருக்கும் என்று தெரிவித்தார். “இளைஞர்களின் மனதில் இருக்கும் சொல்லப்படாத காதல், நண்பர்களின் உறவு, வாழ்க்கையின் அழகான தருணங்கள் அனைத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் இது” என்றார்.

நிகழ்வில் பேசிய நடிகர்கள் ரக்ஷன், டிராவிட், ஏஞ்சலின், மோனிஷா, நடிகைகள் ப்ரீத்தி முகுந்தன், கயாது லோகர் உள்ளிட்டோர், இந்தப் படம் தங்களுக்கு வழங்கிய நட்பு மற்றும் அனுபவங்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். படப்பிடிப்பின் போது உருவான நட்புறவுகளே இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாக அனைவரும் குறிப்பிட்டனர்.
ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரமஹம்சா மற்றும் சாய் ஆகியோர், பல ஆண்டுகளாக கனவாக இருந்த இந்தத் திட்டம் இன்று திரைக்கு வருவது பெருமையாக இருப்பதாக தெரிவித்தனர். காதலின் வண்ணங்களையும், உணர்வுகளையும் அழகாக காட்சிப்படுத்தியிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
இசையமைப்பாளர் தமன் எஸ். இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், திரைப்படத்தின் இசையும் கதையும் இணைந்து ஒரு உணர்வுபூர்வமான அனுபவத்தை வழங்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
காதல், நட்பு, குடும்ப பாசம் மற்றும் இளமைக்கால உணர்வுகளை ஒருங்கே பேசும் ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் அதர்வா முரளியுடன் பகத் பாசில், ப்ரீத்தி முகுந்தன், கயாது லோகர், ரக்ஷன், ஏஞ்சலின், சுதாகர், டிராவிட், மோனிஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் இதயங்களைத் தொடும் ஒரு காதல் அனுபவமாக உருவாகியுள்ள ‘இதயம் முரளி’, ஜூலை 10 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘Idhayam Murali’ Celebrates Love, Friendship and Emotions at Grand Pre-Release Event; Director Atlee Calls It a Career Milestone for Aakash Bhaskaran and Atharvaa
Chennai:
The team of Idhayam Murali, one of the most anticipated Tamil romantic entertainers of the season, celebrated its grand pre-release event in the presence of thousands of enthusiastic fans ahead of the film’s worldwide theatrical release on July 10.
Produced under the banner of Dawn Pictures, Idhayam Murali marks the directorial debut of Aakash Bhaskaran, who has also produced the film. Presented by Inban Udhayanidhi, the film will be released worldwide by Red Giant Movies.
The star-studded event turned into a celebration of love, friendship and cinema as the cast and crew shared memorable moments from the making of the film and expressed their excitement about its release.
The highlight of the evening was the presence of acclaimed filmmaker Atlee, who praised Aakash Bhaskaran’s dedication and perseverance in bringing the project to life.
“Aakash is like a younger brother to me. I have seen his passion for this story over the years. He has poured his heart into Idhayam Murali, and I believe this film will become a defining milestone in his filmmaking journey,” said Atlee.
He also expressed his confidence in the film’s lead actor, adding:
“I have always admired Atharvaa as an actor. I truly believe Idhayam Murali will be one of the biggest milestones in his career.”
Speaking at the event, Atharvaa Murali described the film as one of the most special projects of his career.
“Working with such a young and energetic team has been an unforgettable experience. Every actor and technician has contributed wholeheartedly to this film. It is a heartwarming entertainer that families can enjoy together, and I’m proud to have been part of Aakash’s directorial debut.”
Director Aakash Bhaskaran thanked the entire cast, crew and audience for their unwavering support.
“Idhayam Murali is a celebration of love, friendship and human emotions. We have made this film with complete sincerity, and I hope audiences of all age groups connect with its story and characters.”
Members of the cast, including Rakshan, Dravid, Angeline, Monisha, Preethi Mukundan and Kayadu Lohar, shared how the film created lasting friendships beyond the screen. They described the project as an emotional journey that strengthened their bond as a team.
Cinematographers Manoj Paramahamsa and Sai spoke about the years of dedication that went into shaping the film, expressing confidence that its visuals and emotional storytelling would leave a lasting impression on audiences.
Featuring music composed by Thaman S, Idhayam Murali promises a refreshing blend of romance, friendship, humour and heartfelt emotions. The film also features Fahadh Faasil, Kayadu Lohar, Preethi Mukundan, Rakshan, Angeline, Sudhakar, Dravid, Monisha and several other prominent performers in key roles.
With strong pre-release buzz and glowing appreciation from the industry, Idhayam Murali is all set to arrive in theatres worldwide on July 10, offering audiences an emotional cinematic experience celebrating love, friendship and cherished relationships.
