
ஜேசன் சஞ்சயின் இயக்குநர் அறிமுகம்… அக்டோபர் 2 முதல் திரையில் ‘சிக்மா’!
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கவனத்தை ஏற்கனவே ஈர்த்திருக்கும் ‘சிக்மா’ திரைப்படம், வரும் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார்.
‘சிக்மா’ படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் பெரும்பாலும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை வெளியான டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் படத்தின் மீதான ஆர்வத்தை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில், ‘அய்யய்யோ அம்மாடி’ பாடல் மெலோடியான இசையால் கவனம் பெற்றுள்ளது.
இரண்டு பாடல்களும் முற்றிலும் மாறுபட்ட இசை அனுபவத்தை கொடுத்திருப்பதுடன், படத்தின் உலகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளன. வண்ணமயமான காட்சிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் வித்தியாசமான கதைக்களம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ‘சிக்மா’ உருவாகியிருப்பதாக படக்குழுவின் வெளியீடுகள் உணர்த்துகின்றன.
இயக்குநராக தனது முதல் படத்தை கையாளும் ஜேசன் சஞ்சயின் பணியையும் லைகா புரொடக்ஷன்ஸ் பாராட்டியுள்ளது. திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் படத்தின் படப்பிடிப்பு மற்றும் உருவாக்கப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே.எம். தமிழ் குமரன் கூறுகையில், “‘சிக்மா’ அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. குறிப்பாக பாடல்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. படத்தின் முக்கிய அம்சங்களையும் கதையின் மையத்தையும் சுவாரஸ்யம் கருதி இன்னும் வெளிப்படுத்தாமல் வைத்திருக்கிறோம். இதுவரை வெளியான காட்சிகள் மூலம் ரசிகர்களுக்கு படத்தின் உலகத்தின் ஒரு சிறிய பார்வையை மட்டுமே கொடுத்துள்ளோம்” என்றார்.
வெளியீட்டை முன்னிட்டு ‘சிக்மா’ படக்குழு வித்தியாசமான விளம்பர மற்றும் புரமோஷன் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஃபரியா அப்துல்லா நடித்துள்ளார். ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேபி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜேசன் சஞ்சய் எழுதி இயக்கும் இப்படத்திற்கு தமன் எஸ். இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல். படத்தொகுப்பை கவனிக்கிறார். பெஞ்சமின் எம். கலை இயக்கத்தையும், ஹரிஹரசுதன் விஎஃப்எக்ஸ் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
ரசிகர்களிடம் ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சிக்மா’, ஜேசன் சஞ்சயின் இயக்குநர் பயணத்திற்கு எப்படி தொடக்கப்புள்ளியாக அமையப் போகிறது என்பதற்கான பதில் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் தெரியவரும்.

Jason Sanjay’s Directorial Debut ‘Sigma’ to Hit Theatres Worldwide on October 2!
Tamil cinema’s much-anticipated film ‘Sigma’ is all set to arrive in theatres worldwide on October 2. Produced by Subaskaran under the Lyca Productions banner, the film marks the directorial debut of Jason Sanjay.
While the makers have kept the film’s core storyline and several key details under wraps, the teaser and the two songs released so far have already generated considerable curiosity among audiences. The energetic track ‘Sigma Style’ has struck a chord with fans, while the melodious ‘Ayyayyo Ammadi’ has also received a positive response.
Interestingly, the two songs offer contrasting musical experiences and have given audiences a glimpse into the colourful and entertaining world that Jason Sanjay has created. The visuals released so far suggest that ‘Sigma’ is being positioned as a complete entertainer with a distinctive storyline, vibrant presentation and plenty of engaging elements.
The makers have also completed the film’s production as planned and within the scheduled timeframe. Lyca Productions has appreciated Jason Sanjay’s professional approach, clarity and attention to detail throughout the making of his debut directorial venture.
Speaking about the release, Lyca Productions CEO G.K.M. Tamil Kumaran said, “We are delighted to announce that ‘Sigma’ will release worldwide in theatres on October 2. The film has shaped up extremely well, and the response to the songs has further heightened expectations. We have deliberately kept the core story and several important aspects of the film under wraps to preserve the excitement. Through the visuals released so far, we have offered audiences only a glimpse into the colourful and entertaining world created by Sanjay.”
The team is also planning a series of innovative promotional and marketing activities for ‘Sigma’. More details regarding the trailer and music launch are expected to be announced officially soon.
Produced on a grand scale by Subaskaran for Lyca Productions, ‘Sigma’ stars Sundeep Kishan in the lead, alongside Faria Abdullah, Raju Sundaram, Sampath Raj, Shiv Panditt, Anbu Thasan and Yogi Babu, among others.
Written and directed by Jason Sanjay, the film has music by Thaman S. Krishna Vasanth is the cinematographer, while Praveen K.L. handles the editing. Benjamin M. is the production designer, and Hariharasuthan serves as the VFX supervisor.
With expectations already building around Jason Sanjay’s directorial debut, ‘Sigma’ is set to open in theatres worldwide on October 2.
