‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ – பிரம்மாண்டத்தைத் தாண்டி கதை, உணர்வுகளுடன் உருவாகியுள்ள புதிய உலகம்!
‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ – பிரம்மாண்டத்தைத் தாண்டி கதை, உணர்வுகளுடன் உருவாகியுள்ள புதிய உலகம்!
சென்னை:
சிரிப்பு, சாகசம், கற்பனை, அன்பு மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நடிகர்கள் சூர்யா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவில் பேசிய நடிகர் சூர்யா, ஒரு அழகான உலகத்தை திரையில் உருவாக்குவது எளிதான விஷயம் அல்ல என்றும், அதன் பின்னால் மிகப்பெரிய உழைப்பும் பலரின் அர்ப்பணிப்பும் இருப்பதாகவும் தெரிவித்தார்.
‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ படக்குழுவினர் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருப்பதாக பாராட்டிய சூர்யா, அனைத்து வயதினரும் குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதாகக் குறி...









