Tuesday, April 16
Shadow

Tag: திரிஷா

ஒவ்வொரு குழந்தைக்கும் எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுகிறார் திரிஷா…!

Latest News, Top Highlights
ஒவ்வொரு குழந்தைக்கும் எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நடிகை திரிஷா அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து பேசுவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் 3000 இளம் தலைவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார் . யுனிசெப் நிறுவனத்தின் நல் எண்ண தூதுவர் மற்றும் பிரபல தென்னிந்திய திரைப்பட நட்சத்திரமான த்ரிஷா கிருஷ்ணன், குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறையும் முடிவுக்கு கொண்டுவர 3000 இளைஞர்கள் இதுகுறித்து பேசவும், செயல்படவும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார் . வன்முறையை முடிவுக்கு கொண்டுவருதல் குறித்து இளைஞர்கள் மத்தியில் த்ரிஷா பேசுகையில் , "2014 முதல் 2016 வரை போஸ்கோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை எடுத்துரைத்தார் .தேசிய குற்றப்பிரிவு பணியகத்தின் 2016 ஆம் ஆண்டு அறிக்கையின்படி , 2014 ஆம் ஆண்டு போக்ஸோ சட்...

திரிஷா மற்றும் சிம்ரன் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியிடு

Latest News, Top Highlights
நடிகைகள் திரிசா, சிம்ரன் இருவரும் புதிய படம் ஒன்று நடித்து வருகின்றனர்.  சதுரம் 2 படத்தை இயக்கிய சுமந்த ராதா கிருஷ்ணன் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, பிச்சாவரம் மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு சுகர் என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைக்க உள்ளனர். கேமரா பணிகளை சரவணன் ராமசாமி செய்ய உள்ளார். மேலும் இந்த படத்தில் சதீஷ், ஜெக்திபாபு மற்றும் அபினவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்காக கடல் விளையாட்டுகளில் சிம்ரான், திரிஷா இருவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்....

திருமணம் எப்போது? நடிகை திரிஷா பதில்

Latest News, Top Highlights
நான் யாரையும் காதலிக்கவில்லை என்று '96' படத்தில் நடித்த நடிகை திரிஷா தெரிவித்துள்ளார். திருமணம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், எனக்கு பொருத்தமான ஒருவரை சந்தித்து விட்டால், உடனே திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன் என்றார். மேலும் தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
திரிஷா படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்

திரிஷா படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்

Latest News, Top Highlights
மலையாளத்தில் ‘இவடே’ படத்திற்கு பிறகு இயக்குநர் ஷியாமபிரசாத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஹேய் ஜூட்’ (HEY JUDE). இதில் ஹீரோவாக நிவின் பாலி நடிக்கிறார். நிவினுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சித்திக், நீனா குருப், விஜய் மேனன், அஜு வர்க்கீஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோபி சுந்தர் – ராகுல் ராஜ் – எம்.ஜெயச்சந்திரன் ஆகியோர் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார், கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அம்பளகாரா குளோபல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில், படக்குழுவால் வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் டிரையிலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, ஷூட்டிங் வெற்றிகரம...
`சாமி ஸ்கொயர்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

`சாமி ஸ்கொயர்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

Latest News, Top Highlights
விக்ரம் நடிப்பில் `ஸ்கெட்ச்' படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்' படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும் நடித்து வருகிறார். இதில் `சாமி ஸ்கொயர்' படத்தின் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹரி இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘சாமி’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் `சாமி ஸ்கொயர்' படத்தில் விக்ரம், தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவின் மகன் கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபு, விவேக், சூரி, ஜான் விஜய், உமா ரியாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்த...
`சாமி-2′ படத்தில் இருந்து திரிஷா விலகியதற்கு இதுதான் காரணம்?

`சாமி-2′ படத்தில் இருந்து திரிஷா விலகியதற்கு இதுதான் காரணம்?

Latest News, Top Highlights
ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’. இதில் விக்ரம் போலீஸ் அதிகாரியாகவும், திரிஷா ஐய்யர் வீட்டு பெண்ணாகவும் நடித்திருந்தார்கள். 14 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் ஹரி. தனது கதாபாத்திரத்தில் வலுவில்லை என்று கூறி, இப்படத்தில் இருந்து திரிஷா விலகினார். த்ரிஷா விலகியதற்கான சரியான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், அதற்கான காரணம் ஒருமாதிரியாக கிடைத்திருக்கிறது. `சாமி ஸ்கொயர்' படம் சம்பந்தமான சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகின்றது. வெளியான புகைப்படங்களில் `சாமி' படத்தில் வில்லனாக நடித்த பெருமாள் பிச்சைக்கு 29-வது நினைவு நாள் என்றும், அவருக்கு சிலை வைக்கப்படுவதாகவும், அவரது மகனாக பாபி சிம்ஹா வருவதாகவும் அந்த புகைப்படத்தில் தெரிந்து கொள்ள முடிகிற...
திரிஷாவுடன் இணையும் கார்த்தி

திரிஷாவுடன் இணையும் கார்த்தி

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் 15 வருடங்களை கடந்தும் அரை டஜன் படங்களுடன் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் ‘96’, ‘சதுரங்க வேட்டை-2’, ‘மோகினி’, ‘கர்ஜனை’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. மேலும் நிவின் பாலி ஜோடியாக `ஹே ஜுட்’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இதில் ‘மோகினி’ என்ற படத்தை ஆர்.மாதேஷ் இயக்கியிருக்கிறார். ஹாரர் கலந்த திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்த டிரைலரை நடிகர் கார்த்தி வெளியிட இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படம் பிப்ரவரியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது....