
காந்தி ஜெயந்தி தினத்தில் வெளியாகும் ‘கிட்டி’ – வித்தியாசமான உளவியல் திரில்லர் கதைக்களத்துடன் ரசிகர்களை சந்திக்கிறது
‘முருகா’ அசோக் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை நெடுமாறன் மோகன்தாஸ் இயக்குகிறார்
தமிழ் சினிமாவில் வழக்கமான கமர்ஷியல் கதைகளுக்கு மத்தியில், வித்தியாசமான கதைக்களத்துடனும் பரபரப்பான திரைக்கதையுடனும் உருவாகியுள்ள புதிய உளவியல் திரில்லர் திரைப்படம் ‘கிட்டி’. ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் திருமாறன் தயாரித்துள்ள இப்படத்தை நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கியுள்ளார்.
‘முருகா’ அசோக் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படம், வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் குற்றங்களை மையமாகக் கொண்ட திரில்லர் படங்களில், ஒரு சம்பவம் நிகழ்ந்த பிறகு அதை யார் செய்தார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதை மையமாகக் கொண்ட கதைகள் அதிகம் இடம்பெற்று வருகின்றன. ஆனால், அந்த வழக்கமான அணுகுமுறையிலிருந்து விலகி, ஒரு கதாநாயகனைச் சுற்றி நிகழும் சம்பவங்களையும், அவரது மனநிலையையும் மையமாக வைத்து வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் ‘கிட்டி’ உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
படத்தின் கதைக்களம் தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை எதிர்பார்ப்புடன் பயணிக்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கதையில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குநர் தரப்பில் கூறப்படுகிறது.
குறிப்பாக, படத்தின் நாயகன் ‘முருகா’ அசோக், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இப்படத்தின் கதாபாத்திரம் அமைந்துள்ளதாகவும், அந்த கதாபாத்திரத்தின் உடல் மொழி, மனநிலை மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் அசோக் சிறப்பாக நடித்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. அவருடைய திரையுலகப் பயணத்தில் ‘கிட்டி’ ஒரு முக்கியமான படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
மேலும், இப்படத்தில் அசோக்கிற்கு ஜோடியாக நிஷா, சங்கவி, சிமு அத்வானி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் ‘ஊமை விழிகள்’ படத்தின் இயக்குநர் ஆர். அரவிந்த்ராஜ், கதையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரபல நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, படத்தின் தயாரிப்பாளர் திருமாறன் விசாரணை அதிகாரியாக வரும் காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதையின் போக்கில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏற்படுத்தும் தாக்கம் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
ஒரு வித்தியாசமான திரைக்கதையை உருவாக்குவதுடன், கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களைத் தேர்வு செய்வதிலும் இயக்குநர் நெடுமாறன் மோகன்தாஸ் கவனம் செலுத்தியுள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான பின்னணியும், கதையின் நகர்வில் அவற்றுக்கான முக்கியத்துவமும் இருக்கும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கும்பகோணம், கடலூர், தரங்கம்பாடி மற்றும் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
‘கிட்டி’ படத்தின் தொழில்நுட்பக் குழு:
- தயாரிப்பு: திருமாறன் – ரியா கிரியேஷன்ஸ்
- கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: நெடுமாறன் மோகன்தாஸ்
- இசை: காதர்
- ஒளிப்பதிவு: வி.எஸ். வேலன்
- எடிட்டிங்: கார்த்திக் பாண்டியன்
- நடனம்: ராக் சங்கர்
- ஸ்டண்ட்: ‘பாப்புலர்’ பாபு
- பாடல்கள்: ப்ரியன், சீர்காழி சிற்பி, தமிழ்மகன்
- கலை இயக்கம்: வாலி
- மக்கள் தொடர்பு: சரண்
வழக்கமான குற்றப் புலனாய்வு திரில்லர்களிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையுடன், கதாநாயகனின் மனநிலையையும் அவரைச் சுற்றியுள்ள மர்மங்களையும் மையப்படுத்தி உருவாகியுள்ள ‘கிட்டி’, திரில்லர் திரைப்பட ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வித்தியாசமான கதைக்களம், மனநிலையை மையப்படுத்திய கதாபாத்திரம், பரபரப்பான திரைக்கதை என பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘கிட்டி’, வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

‘Kitty’ to Hit Screens on Gandhi Jayanti with a Gripping Psychological Thriller
‘Muruga’ Ashok plays the lead in Nedumaran Mohandas’ intriguing thriller
Tamil cinema is set to witness a new psychological thriller with a distinctive storyline and an engaging screenplay. Titled ‘Kitty’, the film is produced by Thirumaran under the banner of Riya Sri Creations Private Limited and directed by Nedumaran Mohandas. The film is scheduled for a worldwide theatrical release on October 2, Gandhi Jayanti.
Starring ‘Muruga’ Ashok in the lead, ‘Kitty’ promises to offer a different experience for audiences who enjoy suspense-driven narratives and unconventional storytelling.
While crime thrillers in Tamil cinema have traditionally revolved around investigating a crime and identifying the person responsible, ‘Kitty’ takes a different route. The screenplay is said to revolve around the protagonist and his psychological state, creating a narrative that gradually unfolds through the characters and situations surrounding him.
The film’s screenplay is designed to keep audiences engaged throughout, with several twists and turns expected to add to the suspense. Director Nedumaran Mohandas has also reportedly paid close attention to developing each character, ensuring that every role has significance within the narrative.
One of the major highlights of the film is ‘Muruga’ Ashok’s character. The actor plays a mentally challenged character, a role that is said to be significantly different from his earlier performances. According to the director, Ashok has approached the character with considerable commitment, effectively bringing out its emotional and psychological dimensions.
With a challenging role at the centre of the story, ‘Kitty’ is expected to become an important film in Ashok’s career and could open up new opportunities for him in Tamil cinema.
The film features Nisha, Sangavi and Simu Advani as the three female leads opposite Ashok. Director of the acclaimed film ‘Oomai Vizhigal’ R. Aravindraj appears in a pivotal role that is said to bring a major turning point to the story.
Veteran actor Y.G. Mahendran makes a special appearance, while producer Thirumaran also plays a police investigation officer in the film.
The makers have reportedly taken special care in casting the film, selecting actors based on the requirements of each character. The performances and interactions between these characters are expected to play a crucial role in taking the story forward.
The shooting of ‘Kitty’ has been completed across various locations, including Kumbakonam, Cuddalore, Tharangambadi and Chennai and its surrounding areas.
Technical Crew
- Production: Thirumaran – Riya Creations
- Story, Screenplay, Dialogues & Direction: Nedumaran Mohandas
- Music: Kadhar
- Cinematography: V.S. Velan
- Editing: Karthik Pandian
- Dance: Rock Shankar
- Stunts: ‘Popular’ Babu
- Lyrics: Priyan, Sirkazhi Sirpi, Tamilmagan
- Art Direction: Vali
- Public Relations: Saran
With its unconventional narrative, psychologically layered protagonist and suspense-driven screenplay, ‘Kitty’ aims to offer something different from the regular crime thrillers seen on screen.
Produced by Thirumaran for Riya Creations, the film is gearing up for its worldwide theatrical release on October 2, 2026, coinciding with Gandhi Jayanti.
