
ஆகஸ்ட் 14-ல் திரைக்கு வரும் ‘ஹாய்’… நயன்தாரா – கவின் கூட்டணியின் குடும்பக் கொண்டாட்டம் தொடங்குகிறது!
தமிழ் சினிமாவில் முதல் முறையாக நயன்தாராவும், கவினும் இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் படக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு வீடியோ, ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், முழுக்க முழுக்க குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து ரசிக்கும் வகையிலான பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் மனதை வருடும் தருணங்களை இணைத்து சொல்லும் இந்தக் கதை, சென்னை, கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய மூன்று நகரங்களை பின்னணியாகக் கொண்டு நகர்கிறது.
திரைப்படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோருடன் கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ள நிலையில், ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் கவனித்துள்ளதுடன், கலை இயக்கத்தை எஸ். கண்ணன் மேற்கொண்டுள்ளார்.
ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ்.எஸ். லலித்குமார் தயாரித்துள்ளனர். வினோத் சி.ஜே., கே.எஸ். மயில்வாகனன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகவும், வி.கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொட்யூசராகவும் பணியாற்றியுள்ளனர்.
ஏற்கனவே வெளியான பாடல் சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்று நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள வெளியீட்டு அறிவிப்பு வீடியோவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
படம் குறித்து இயக்குநர் விஷ்ணு எடவன் கூறுகையில், “’ஹாய்’ என்பது தலைப்பைப் போலவே எளிமையான, இனிமையான அனுபவத்தை தரும் படம். எந்த எதிர்மறை கதாபாத்திரங்களும் இல்லாமல், குடும்பம் முழுவதும் ஒன்றாக அமர்ந்து சிரித்தும் ரசித்தும் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பழைய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களின் உணர்வை இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் முயற்சிதான் இந்த ‘ஹாய்’” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற வெற்றி திரைப்படங்களில் இணை பணியாற்றிய அனுபவம் பெற்ற விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படைப்பு என்பதாலும், நயன்தாரா – கவின் ஆகியோரின் புதிய திரை ஜோடி என்பதாலும், குடும்ப ரசிகர்களை குறிவைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் தற்போது திரையுலகிலும் ரசிகர்களிடமும் குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Nayanthara and Kavin’s Family Entertainer ‘Hi’ Set for Worldwide Theatrical Release on August 14
The makers of ‘Hi’, starring Nayanthara and Kavin together for the first time, have officially announced that the film will hit theatres worldwide on August 14. A special announcement video released by the team has further heightened anticipation among moviegoers.
Directed by debutant Vishnu Edavan, Hi is positioned as a wholesome family entertainer that blends romance, comedy, emotions, and heartfelt relationships. Set across Chennai, Coimbatore, and Pollachi, the film promises an engaging and feel-good cinematic experience for audiences of all ages.
The film features an ensemble cast including K. Bhagyaraj, Prabhu, Radhika Sarathkumar, VTV Ganesh, Sathyan, Adithya Kathir, Qureshi, and several others in pivotal roles. The cinematography is handled by Rajesh Shukla, while Jen Martin has composed the music. Philomin Raj serves as the editor, and S. Kannan has overseen the production design.
Hi is jointly produced by Zee Studios, The Rowdy Pictures, and Seven Screen Studio, with Nayanthara, Vignesh Shivan, and S. S. Lalit Kumar as producers. Vinoth C. J. and K. S. Mayilvaganan are the co-producers, while V. K. Kubendran serves as the creative producer.
One of the film’s songs, released earlier, has already garnered millions of digital views, creating strong buzz around the project. The newly released announcement video has further amplified excitement ahead of the film’s theatrical release.
Speaking about the film, director Vishnu Edavan said, “Hi is a simple and heartwarming film, just like its title suggests. It has been crafted as a clean family entertainer with no conventional villains, offering audiences a joyful and entertaining experience that they can enjoy together with their loved ones. It captures the warmth and charm of classic family entertainers while presenting a refreshing story for today’s generation.”
Adding to the excitement is Vishnu Edavan’s association with acclaimed filmmaker Lokesh Kanagaraj, having previously worked on blockbuster films such as Kaithi, Master, and Vikram. Combined with the fresh pairing of Nayanthara and Kavin and a strong supporting cast, Hi has generated significant expectations among both the trade and audiences.
With its feel-good narrative, star-studded cast, and family-friendly appeal, Hi is all set to entertain audiences worldwide when it arrives in theatres on August 14.
