Friday, July 31
Shadow

‘வதந்தி சீசன் 2’ மர்ம உலகிற்கு இசையால் உயிரூட்டும் ‘தெய்வா’… பிரைம் வீடியோ வெளியிட்ட துள்ளல் பாடல் ரசிகர்களை கவர்கிறது!

‘வதந்தி சீசன் 2’ மர்ம உலகிற்கு இசையால் உயிரூட்டும் ‘தெய்வா’… பிரைம் வீடியோ வெளியிட்ட துள்ளல் பாடல் ரசிகர்களை கவர்கிறது!

சென்னை:

பரபரப்பும் மர்மமும் நிறைந்த கதைக்களத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘வதந்தி’ வெப் தொடரின் இரண்டாவது சீசனுக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில் பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ தொடரிலிருந்து ‘தெய்வா’ என்ற புதிய பாடலை வெளியிட்டுள்ளன.

இசையமைப்பாளர் சைமன் K. கிங் இசையமைத்து, இசைக்கோர்த்து, தயாரித்துள்ள இந்தப் பாடலை சைமன் மற்றும் யஷ்வந்த் இணைந்து உற்சாகமாகப் பாடியுள்ளனர். மணி ரோமியோ எழுதியுள்ள வரிகள், கிராமிய இசை நயத்துடன் கலந்த துள்ளலான தாளங்கள் மற்றும் கொண்டாட்ட மனநிலையை உருவாக்கும் இசை அமைப்பு ஆகியவை பாடலை முதல் முறை கேட்கும் ரசிகர்களையே கவரும் வகையில் அமைந்துள்ளன.

பாடலுடன் வெளியிடப்பட்டுள்ள இசைக் காணொளி, வழக்கமான லிரிக் வீடியோவாக இல்லாமல், தொடரின் படப்பிடிப்பு தளத்தில் உருவான மகிழ்ச்சியான தருணங்களையும், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் நட்புறவையும் பதிவு செய்துள்ளது. வண்ணமயமான காட்சிகள், உற்சாகமான நடன அசைவுகள் மற்றும் படப்பிடிப்பு பின்னணிக் காட்சிகள் இணைந்திருப்பதால், ‘தெய்வா’ பாடல் தொடரின் உலகத்தை ரசிகர்களுக்கு இன்னும் நெருக்கமாக அறிமுகப்படுத்துகிறது.

மதுரையின் பாரம்பரிய கலாச்சாரச் சூழலும், உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவின் ஆற்றல்மிக்க பின்னணியும் மையமாக உருவாகியுள்ள ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’, பரபரப்பான புதிய விசாரணைக் கதையை சொல்லவிருக்கிறது. நேர்மையான காவல் அதிகாரியான எஸ்.ஐ. மூசா ரஸா கதாபாத்திரத்தில் எம். சசிகுமார் நடித்துள்ளார். நெடுஞ்சாலைத் திட்ட தொடக்க விழாவின் போது தோண்டியெடுக்கப்படும் மனித எலும்புக்கூட்டைச் சுற்றி தொடங்கும் விசாரணை, மணி என்ற மர்ம கைதியை நோக்கிச் செல்லும் போது, வதந்திகள், பொய்கள், மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த சிக்கலான மர்ம உலகிற்குள் அவரை இட்டுச் செல்கிறது.

இந்தத் தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார். வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் யஷ்வந்த், அனகா மாருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மொத்தம் எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் தொடர் ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் தமிழில் பிரத்யேகமாக வெளியாகிறது. மேலும், தெலுங்கு மற்றும் இந்தி மொழி டப்பிங் பதிப்புகளுடன், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பார்வையாளர்களைக் சென்றடைகிறது.

தற்போது வெளியாகியுள்ள ‘தெய்வா’ பாடல் அனைத்து முக்கிய இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் கேட்கக் கிடைக்கிறது. தொடரின் மர்மமான கதைக்களத்திற்கு மாறாக, இந்தப் பாடல் உற்சாகமும் கொண்டாட்ட உணர்வும் நிறைந்த இசை அனுபவத்தை வழங்குவதால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

Prime Video Drops Energetic New Track ‘Daiva’ Ahead of the Premiere of Vadhandhi Season Two – The Mystery of Mani

Chennai:

Building excitement for the much-awaited premiere of Vadhandhi Season Two – The Mystery of Mani, Prime Video, in collaboration with T-Series, has unveiled ‘Daiva’, an upbeat new track from the critically acclaimed Tamil Original suspense thriller. Packed with infectious rhythms and vibrant visuals, the song offers audiences a lively glimpse into the world of the upcoming season.

Composed, arranged, and produced by acclaimed music composer Simon K. King, ‘Daiva’ is sung by Simon K. King and Yashwanth, with catchy lyrics penned by Mani Romeo. Blending energetic beats with a festive folk flavour, the track perfectly complements the series’ rooted cultural backdrop while delivering a fun and memorable musical experience.

The colourful music video goes beyond being just a song release. Featuring spirited choreography, lively celebrations and engaging moments from the cast, it also includes exclusive behind-the-scenes footage from the making of the series. The candid interactions and camaraderie shared by the cast and crew add warmth and authenticity, making ‘Daiva’ an entertaining musical celebration that enhances the anticipation surrounding the new season.

Set against the culturally rich landscape of Madurai and the electrifying atmosphere of the iconic Jallikattu festival, Vadhandhi Season Two – The Mystery of Mani unfolds a gripping new mystery. The story follows SI Moosa Raza, played by M. Sasikumar, an honest police officer who begins investigating human skeletal remains unearthed during the inauguration of a highway project. As the investigation leads him to a mysterious prisoner named Mani, he finds himself trapped in a dangerous web of rumours, deception and long-buried secrets.

The series is created, written and directed by Andrew Louis, and produced by Wallwatcher Films, with Pushkar and Gayatri serving as creative producers. Alongside M. Sasikumar, the series features Yashwanth, Anagha Maruthora, Aparna Das, Vivek Prasanna, Revathy Sharma and Arjun Nandhakumar in pivotal roles.

The eight-episode suspense thriller will premiere exclusively on Prime Video on 7 August in Tamil, with dubbed versions in Telugu and Hindi. It will also be available with subtitles in 15 languages, including English, reaching audiences across India and more than 240 countries and territories worldwide.

The song ‘Daiva’ is now streaming on all major music platforms, giving fans a vibrant musical preview of the suspense-filled journey awaiting them in Vadhandhi Season Two – The Mystery of Mani.