Friday, October 9
Shadow

சிவாஜி கணேசனின் ‘திருவிளையாடல்’ மீண்டும் திரையில்… அக்டோபர் 1ல் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

சிவாஜி கணேசனின் ‘திருவிளையாடல்’ மீண்டும் திரையில்… அக்டோபர் 1ல் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத காவியப் படைப்புகளில் ஒன்றான ‘திருவிளையாடல்’ திரைப்படம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில், அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் உருவான இப்படம், வெளியான காலகட்டத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

சிவாஜி கணேசன், சாவித்திரி, டி.எஸ். பாலையா, முத்துராமன், நாகேஷ், தேவிகா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘திருவிளையாடல்’ திரைப்படத்திற்கு கவிஞர் கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார். இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனின் இசையும் படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக அமைந்தது.

காலம் கடந்தும் ரசிகர்களின் நினைவில் நீங்கா இடம்பிடித்துள்ள இந்தப் படத்தை, ஸ்ரீ பால விநாயகர் பிக்சர்ஸ் சார்பில் ஜி. லதா தற்போது மறுவெளியீடு செய்யவுள்ளார்.

இதனை முன்னிட்டு, ‘திருவிளையாடல்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அக்டோபர் 1ஆம் தேதி, வியாழக்கிழமை, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காசினோ தியேட்டரில் நடைபெறுகிறது.

இந்த சிறப்பு நிகழ்வில், ‘திருவிளையாடல்’ படத்தின் தயாரிப்பாளர் ஏ.பி. நாகராஜனின் மகன் ஏ.என். பரமசிவம், நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், நடிகர் மகேந்திரன், நடிகர் இளவரசு, நடிகை வடிவுக்கரசி, நடிகரும் இயக்குநருமான அண்ணாதுரை கண்ணதாசன், கதாசிரியரும் இயக்குநருமான பூபதி ராஜா, முனைவர் மருது மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

பல தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ‘திருவிளையாடல்’ மீண்டும் திரைக்கு வருவதையொட்டி நடைபெறும் இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழா, சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கு சிறப்பு தருணமாக அமையவுள்ளது.

 

Sivaji Ganesan’s ‘Thiruvilayadal’ Set for Re-Release; Trailer Launch Event to Be Held on October 1

One of the timeless classics of Tamil cinema, ‘Thiruvilayadal’, starring the legendary Sivaji Ganesan, is all set to return to theatres after a long gap. Directed by Arutselvar A.P. Nagarajan, the film remains a memorable milestone in Tamil cinema and continues to be cherished by audiences across generations.

The film features an ensemble cast including Sivaji Ganesan, Savitri, T.S. Balaiah, Muthuraman, Nagesh and Devika. The songs were penned by legendary lyricist Kannadasan, while the music was composed by K.V. Mahadevan, whose compositions remain popular even today.

Originally a major box-office success, ‘Thiruvilayadal’ is now set for a grand re-release by G. Latha under the banner of Sri Bala Vinayagar Pictures.

As part of the re-release, a special trailer launch event for ‘Thiruvilayadal’ will be held on Thursday, October 1, at Casino Theatre, coinciding with the 99th birth anniversary of the legendary Sivaji Ganesan.

The event will witness the participation of several prominent personalities from the Tamil film industry. A.N. Paramasivam, son of the film’s producer A.P. Nagarajan, actor and producer Chitra Lakshmanan, actors Mahendran and Ilavarasu, actress Vadivukkarasi, actor and director Annadurai Kannadasan, writer-director Boopathy Raja, and Dr. Maruthu Mohan are expected to attend the event and deliver special addresses.

With the return of this iconic classic to the big screen, the trailer launch event is expected to be a special occasion for Sivaji Ganesan fans and lovers of classic Tamil cinema.