
இயக்குனர் டி. ஆர். ராமண்ணா மறைந்த தின பதிவு
தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன் ராமசந்திரன் என்பதை சுருக்கமாக ராமண்ணா அல்லது டி. ஆர். ராமண்ணா ஒரு புகழ்பெற்ற தென்னிந்திய திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவராவார். தமிழ்த் திரைப்படத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த டி. ஆர். ராஜகுமாரி இவரது மூத்த சகோதரி ஆவார்.
ராமண்ணா சிட்டி ஸ்டுடியோவில் ஒலிப்பதிவாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் படிப்படியாக ஒரு திரைப்பட இயக்குனராக வளர்ந்தார். தனது சகோதரி டி. ஆர். ராஜகுமாரியுடன் இணைந்து ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இதற்கு, தனது பெயரின் முதல் எழுத்தையும், தனது சகோதரி பெயரின் முதல் எழுத்தையும் கொண்டு ஆர். ஆர். பிக்சர்சு என பெயர் சூட்டினார். தமது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழித் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இவர் தயாரித்த திரைப்படங்களில் ...