Saturday, December 7
Shadow

Tag: இயக்குனர்

திட்டமிடுதல் என்பது நான் அப்பாவிடம் கற்று கொண்ட ஒரு விஷயம் – இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன்

Latest News, Top Highlights
திட்டமிடுதல் என்பது நான் அப்பாவிடம் கற்று கொண்ட ஒரு விஷயம் என்று இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பாவே நேசித்தேர்கள் இத்தவை பேரா என்பதை, இன்று வரை விடாமல் அடித்துக் கொண்டிருக்கும் என் தொலைபேசி பறை சாற்றுகிறது. என் இழப்பை தங்கள் வீட்டு இழப்பாக கருதி, அப்பா இந்த செய்தியை பல ஊடகங்களில் கொண்டு சென்ற அனைவரும் நன்றி. திட்டமிடுதல் என்பது நான் அப்பாவிடம் கற்று கொண்ட ஒரு விஷயம் அது ஒரு படப்பிடிப்பாகட்டும், இல்லை தன்னுடைய இறுதி யாத்திரை ஆகட்டும், எல்லாவம அழகாக யோசித்து நேர்த்தியாக திட்டமிடுவது அப்பாவின் பலம். படப்பிடிபை அப்பா, திட்டமிடும் நேரில் பார்த்து பிரமித்த எனக்கு அவர், தன் இறுதி யாத்திரை எப்படி இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறிய போது மகனாக நொறுங்கி போனேன். எங்கு தன்னை வைக்க வேண்டும், என்ன உடுத்த வேண்டும், வருபவர்களை எப்படி...

இயக்குனர் பூரி ஜெகன்நாத் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பூரி ஜெகன்நாத் இந்தியத் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் மூன்று முறை நந்தி விருதினை வென்றுள்ளார். பத்ரி, இதலு சிராவணி சுப்பிரமணியம் , இடியட், அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி, சிவமணி, போக்கிரி, தேசமுடுரு, பிஸ்னஸ் மேன், கேமராமேன் கங்கதோ ராம்பாபு, இதரம்மாயில்தோ ஆகிய புகழ்பெற்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் இந்தி மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்....

இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஏ. ஆர். முருகதாஸ் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களை இயக்கி வருகிறார். தீனா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி பின்னர், ரமணா, கஜினி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். முருகதாஸ் கள்ளக்குறிச்சியில் பிறந்து திருச்சி பிசப் ஹீபர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அவர் தனது கல்லூரிப் பருவத்தில் தமிழ் சினிமா துறையில் ஆர்வமாக இருந்துள்ளார். கல்லூரிப் பருவத்தில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நடிப்பது, பிரபலமான நடிகர்களைப் போல் குரல் மாற்றிப் பேசுவது போன்ற விசயங்களில் ஆர்வமாக இருந்துள்ளார். பள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதை அவரது நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர...

நடன இயக்குனர் சிவசங்கர் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
கே சிவசங்கர் இந்திய திரைப்பட நடன இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பணிபுரிந்து வருகிறார். இவர் இதுவரை 800 படங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ளார். பிரபல திரைப்பட நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர். திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மதராசா பாடல் மூலம் புகழ்பெற்றார். இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார். இவரது மூத்த மகன் விஜய் கிருஷ்ணாவுக்கும், பெங்களூரைச் சேர்ந்த ஜோதி என்பவருக்கும் 2013ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இவர் நடித்த படங்கள் : கண்ணா லட்டு தின்ன ஆசையா...

இயக்குனர் கே நட்ராஜ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
கே.நடராஜ் – இயக்குநர் மற்றும் நடிகர். அன்புள்ள ரஜனிகாந்த், வள்ளி, செல்லக்குட்டி, தலையாட்டி பொம்மை, இரண்டு மனம், செல்வி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இராணுவ வீரன், பொல்லாதவன் உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர் ரஜனிகாந்தின் நெருங்கிய நண்பர்.திரைப்படக் கல்லூரியில் இருவரும் ஒன்றாக பயின்றவர்கள். ”அன்புள்ள ரஜனிகாந்த்” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நட்ராஜ். இவர் ஒரு நடிகராகத்தான் திரைத்துறைக்குள் நுழைந்தார். “மூன்று முடிச்சு” படத்தில் ரஜினிகாந்தின் மனசாட்சியாக ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்த இவர், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நடத்திய நடிப்புக் கல்லூரியில் பயின்று டிப்ளமோ பெற்றவர். ”1973 – 74 ஆம் ஆண்டு நடிப்புக் கல்லூரியில் இவரும் ரஜினிகாந்தும் ஒன்றாகப் படித்தவர்கள். பயிற்சிக்குப் பிறகு ரஜினிகாந்த் திரைப்படங்களில் நடித்து புகழ்பெறத் துவங்கினார். இவர் பயின்ற அதே கல்லூர...

விஜய் நடித்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க பிரபல இயக்குனர் திட்டம்

Latest News, Top Highlights
நடிகர் விஜய் தன்னுடைய கேரியரில் ஆரம்பகாலத்தில் பல வெற்றி தோல்விகளை கண்டிருக்கிறார். அப்படி 1997 வந்து அதிகம் ரசிகர்களை ஈர்த்த படம் லவ் டுடே. இந்த திரைப்படம் 1997-ல் இயக்குநர் பாலசேகரன் இயக்கப்பட்டதாகும். இத்திரைப்படத்தில் விஜய் சுவலட்சுமி, மந்திரா, ரகுவரன், கரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் பவன் கல்யாண் மற்றும் தேவயானி நடிப்பில் சுஸ்வாகதம் என்ற பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது. வித்தியாசமான கிலைமாக்ஸ் கொண்ட இத்திரைப்படம் 100 நாள் ஒடி வெற்றிப்ப்பெற்றது. 22 வருடங்களுக்கு முன்பு வந்த விஜய் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் பாலசேகரன் தெரிவித்துள்ளார். விஜய் தற்போது மிகபெரிய அளவிற்கு வளர்ந்துள்ளது பற்றி பேசிய அவர், 'அப்போதே அவர் பொறுமையடன் இருப்பார், மற்றவர்கள் பேசுவதை உன்னிப்பாக கேட்பார், ஆனால் கேமரா...

இயக்குனர் மு.ராஜேஷ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மு. இராசேசு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர், திரைக்கதையாசிரியர், தன்னுடைய முழு நீள நகைச்சுவைத் திரைப்படங்களுக்காக அறியப்பட்டவர். இவருடைய முதல் திரைப்படமான சிவா மனசுல சக்தி 2009ஆம் ஆண்டு வெளியானது, அதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு பாஸ் என்கிற பாஸ்கரன் வெளியானது. இவ்விரண்டு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து பெரிய இயக்குநராக உயர்ந்தார். இவருடைய முதல் திரைப்படமான சிவா மனசுல சக்தியில், இரண்டாவது திரைப்படத்தின் கதாநாயகனான ஆர்யா (திரைப்படம்: பாஸ் என்கிற பாஸ்கரன்), சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இவருடைய இரண்டாவது திரைப்படமான, பாஸ் என்கிற பாஸ்கரனில் முதல் திரைப்படத்தின் கதாநாயகனான ஜீவா (திரைப்படம்: சிவா மனசுல சக்தி), சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.இவருடைய மூன்றாவது திரைப்படமான ஒரு கல் ஒரு கண்ணாடியில், இரண்டாவது திரைப்படத்தின் கதாநாயகனான ஆர்யா (திரைப்படம்: பாஸ் என...

இயக்குனர் ஷங்கர் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஷங்கர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவர் எஸ் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் இயக்கிய படங்கள்: ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன் , சிவாஜி: தி பாஸ், எந்திரன், நண்பன், ஐ, எந்திரன் 2 இவர் தயாரித்த படங்கள்: முதல்வன், காதல், இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, வெயில், கல்லூரி, அறை எண் 305-இல் கடவுள், ஈரம்,ரெட்டைசுழி...

சூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். அது முடித்தபிறகு ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது ரஜினியின் அடுத்த படம் அவருடன் இல்லை, கே.எஸ்.ரவிக்குமார் உடன் தான் தான் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பான செய்தி பரவி வருகிறது. தாணு தான் இந்த படத்தை தயாரிக்கப்போகிறார் என்றும் கூறப்படுகிறது....

இயக்குனர் மகேந்திரன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மகேந்திரன் புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஜெ. அலெக்சாண்டர். மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை. மகேந்திரன், புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற குறும்புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இது தமிழ்த் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எம்.ஜி.ஆரைக் கதாநாயகனாக வைத்துப் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தைத் திரைப்படமாக்கத் திரைக்கதை, உரையாடல் போன்றவற்றை எழுதி வைத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இதனைத் திரைப்படமாக்க முடியாமல் போனது. இவர் இயக்கிய படங்கள்: முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுகள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு, மெட்டி, அழகிய கண்ணே, கை கொடுக்கும் கை, கண்ணுக்கு மை எழு...