Sunday, February 16
Shadow

Tag: இயக்குனர்

திரைப்பட இயக்குனர் பஞ்சு அருணாசலம் பிறந்த தின பதிவு 

Birthday, Top Highlights
பஞ்சு அருணாசலம் தமிழ்த் திரைப்பட இயக்குநரும், பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். இவர் கண்ணதாசனின் உதவியாளராகப் பணியாற்றிப் பின்நாளில் பல நல்ல பாடல்களை தமிழ் திரைஉலகிற்கு எழுதியுள்ளார். இவரது முதல்பாடல் 'நானும் மனிதன்தான்' என்ற பாடல் 1960 இல் வெளியானது. கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நடத்திய "தென்றல்" என்ற பத்திரிக்கையில் "அருணன்" என்ற பெயரில் இவர் எழுதிய சில கதைகள் பிரசுரமாயின. பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன், கவியரசு கண்ணதாசன் ஆகியோரின் அண்ணன் கண்ணப்பன் அவர்களின் மகன்தான் பஞ்சு அருணாசலம். மகன் சுப்ரமணியம் என்கிற சுப்பு பஞ்சு நடிகர் சுப்பு ஆவார். ஏ.எல்.எஸ் ஸ்டூடியோவில் செட் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்து தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். செட் போடுவதற்கான பொருளை எடுத்துத் தருவது, பிறகு வேலை முடிந்தவுடன் வாங்கி வைக்கும் வேலை. அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் இளையராசாவை அறிமுகப்படுத்தினா...

இயக்குனர் ஏ. எல். விஜய் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஏ. எல். விஜய் இவர் இந்திய நாட்டு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். அவரது தந்தை ஏ. அழகப்பன் தயாரிப்பாளர் மற்றும் கவுன்சில் தலைவர் ஆவார். இவருக்கு உதயா என்ற சகோதரும் உண்டு. அவரும் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இந்திய திரைப்படத் துறையில் பிரபல இயக்குநர். இவர் 100 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார். அதன் மூலம் 2009ஆம் ஆண்டு சிறந்த கார்ப்பரேட் விளம்பர விருதை வென்றார். 2007ம் ஆண்டு அஜித் மற்றும் திரிஷா நடித்த கிரீடம் என்ற திரைப்படத்தில் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். 2008ஆம் ஆண்டு பொய் சொல்லப் போறோம் என்ற நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்குனர். 2010ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் ஏமி சாக்சன் நடித்த மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் பிரபல இயக்குனர் ஆனார். 2011ஆம் ஆண்டு விக்ரம், அனுஷ்கா, அமலா பால் மற்றும் சாரா அர்ஜுன் நடித்த தெய்வத்திருமகள் திரைப்படத்தையும், 2013ஆம் ஆண்டு விஜய...
இயக்குனர்  சரண் பிறந்த தின பதிவு 

இயக்குனர்  சரண் பிறந்த தின பதிவு 

Birthday, Top Highlights
சரண், தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இயக்குனர் கே. பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். ஜெமினி புரொடக்சன்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் இயக்கிய படங்கள்: மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ், ஆள் அம்பு சேனை, அசல், மோதி விளையாடு, வட்டாரம், இதய திருடன், அட்டகாசம், வசூல் ராஜா எம் பி பி எஸ், ஜெமினி, அமர்க்களம், காதல் மன்னன்...

இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர் மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஏ. சி. திருலோகச்சந்தர்  தமிழகத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் புகழ்பெற்ற பல தமிழ்த் திரைப்படங்களையும், சில இந்தி, தெலுங்குப் படங்களையும் இயக்கியுள்ளார். 1969 இல் இவர் இயக்கிய தெய்வமகன் திரைப்படம் ஆசுக்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதலாவது தென்னிந்தியத் திரைப்படமாகும். வேலூர் மாவட்டம் ஆற்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திருலோகச்சந்தர். 1962 இல் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த வீரத்திருமகன் திரைப்படத்தை முதன் முதலில் இயக்கினார். திருலோகச்சந்தர் 2016 ஜூன் 15 அன்று தனது 86-ஆவது வயதில் சென்னையில் காலமானார். இவருக்கு மல்லி சீனிவாசன் என்ற மகளும், ராஜ்சந்தர் என்ற மகனும் உள்ளனர். இவரது இறப்பிற்கு சில நாட்களுக்கு முன்னர் இவரது இன்னொரு மகன் பிரேம் திரிலோக் அமெரிக்காவில் காலமானார்....
இயக்குனர் அ. வின்சென்ட் பிறந்த தின பதிவு 

இயக்குனர் அ. வின்சென்ட் பிறந்த தின பதிவு 

Birthday, Latest News
அலோய்சியசு வின்சென்ட் 1960ஆம் ஆண்டு முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் பணியாற்றியவர். கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் பிறந்த, இவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சிறீதருடன் பல சிறப்பானப் படங்களில் பணி புரிந்துள்ளார். 1974ஆம் ஆண்டில் வெளியான பிரேம்நகர் என்ற தெலுங்கு படத்திற்காக பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். இவரது கடைசி மலையாளத் திரைப்படமாக 1985இல் வெளியான முப்பரிமாணத் திரைப்படமான பவுர்ணமி இராவில் அமைந்தது. 2003ஆம் ஆண்டில் இந்திய ஒளிப்பதிவாளர் சங்கம் (ISC) இவருக்கு கே. கே. மகசன், வி.கே.மூர்த்தியுடன் கௌரவ அங்கத்துவம் வழங்கியது. உடல் நலக்குறைவால் 25 பிப்ரவரி 2015 அன்று தனது 86ஆவது வயதில் சென்னையில் காலமானார். இவர் ஒளிப்பதிவு செய்த சில திரைப்படங்கள்:  அமரதீபம், உத்தம புத்திரன், எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப்பெண், கல்யாணப் பரிசு, வ...
இயக்குனர் பாண்டிராஜ் பிறந்த தின பதிவு 

இயக்குனர் பாண்டிராஜ் பிறந்த தின பதிவு 

Birthday, Top Highlights
பாண்டிராஜ் தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். சசிகுமாரின் தயாரிப்பில் இவர் 2009ல் இயக்கிய பசங்க திரைப்படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அடுத்து 2010ல் அருள்நிதியை கதாநாயகனாக வைத்து வம்சம் திரைப்படமும், சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து மெரினா திரைப்படமும் இயக்கினார். மெரினா திரைப்படத்தில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார். இவர் இயக்கிய திரைப்படங்கள்:  பசங்க, வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மூடர் கூடம், கோலி சோடா, இது நம்ம ஆளு...

இயக்குனர் மணிரத்னம் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மணிரத்னம் அவர்களின் இயற்பெயர் கோபால ரத்தினம் சுப்ரமணியம் ஆகும். இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர். இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்தவர். இவர் திரைப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2002ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி. இவருடைய படங்கள் சிறப்பான திரைக்கதைக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும், சுருக்கமான வசனங்களுக்கும், பெயர் பெற்றவை. யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமலேயே, தன் முதல் படமாகிய பல்லவி அனுபல்லவி படத்தினை இயக்கினார். முதல் சில படங்கள் வெற்றிபெறாவிட்டாலும் அவர் ஐந்தாவதாக இயக்கிய மௌன ராகம் (1986) பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது. தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை பெற்றார். அடுத்து இயக்கிய நாயகன் (198...

இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
கே. எஸ். ரவிகுமார் தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. தான் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதையும் இவர் வழமையாக கொண்டிருக்கிறார். ரவிக்குமார், இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். இயக்குனர் சேரன், ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களில் குறிப்பிடத்தகுந்தவர். கே எஸ் ரவிகுமார் காமெடி, நாடகம் மற்றும் த்ரில்லர் போன்ற எண்ணற்ற திரைப்படங்களை இயக்கியவர். அவரது படம் ( 2008 ) தசாவதாரம் முதல் நான்கு வாரங்களில் உலகம் முழுவதும் 16 மில்லியன் டாலர்கள் மொத்தமாக வருமானம் ஈட்டியது. மற்றும் இப்படம்  மிக அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் ஒன்றானது. இவர் இயக்கிய படங்கள் : மாயோன் , அயோக்யா, கோமாளி, என் ஆளோட செருப்பை காணோம், ரெமோ, றெக்க, முடிஞ்சா இவன புடி...
இயக்குனர் முக்தா சீனிவாசன் மறைந்த தின பதிவு

இயக்குனர் முக்தா சீனிவாசன் மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
முக்தா சீனிவாசன் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். ஜெயலலிதாவின் 100ஆவது படமான ‘சூர்யகாந்தி’ உட்பட, 65 படங்களை இயக்கியிருந்தார். நாயகன் உட்பட, ஏராளமான படங்களைத் தயாரித்தார். இவர் சிறந்த எழுத்தாளராகவும் இருந்தார். இவர் இயக்கிய திரைப்படங்கள்: முதலாளி, பாஞ்சாலி, நாலு வேலி நிலம், தாமரைக் குளம், ஓடி விளையாடு பாப்பா, மகனே கேள், பனித் திரை, இதயத்தில் நீ, பூஜைக்கு வந்த மலர், தேன் மழை இவர் தயாரித்த படங்கள்: கோடை மழை, நாயகன், எதிர்காற்று, கண்களின் வார்த்தைகள்...
இயக்குனர் பி. விட்டலாச்சாரியா மறைந்த தின பதிவு

இயக்குனர் பி. விட்டலாச்சாரியா மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
பி. விட்டலாச்சாரியா   இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர். விட்டல் புரடெக்சன் எனும் பெயரில், விட்டலாச்சரியா தனது சொந்த திரைப்பட நிறுவனத்தை நிறுவி, 1953ல் இராச்சிய லெட்சுமி எனும் கன்னடத் திரைப்படத்தை தயாரித்து, இயக்கினார். 1954ல் தெலுங்கு மொழியில் கன்னியாதானம் எனும் திரைப்படத்தை இயக்கினார். பின்னர் திரைப்படங்களை இயக்க சென்னைக்கு நிரந்தரமாக குடிபெயர்ந்தார். இவர் என். டி. இராமராவை கதாநாயகனாகக் கொண்டு 19 தெலுங்குத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்கள் தமிழ் மொழியில், மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இவர் இயக்கிய திரைப்படங்கள்: பெண்குலத்தின் பொன் விளக்கு...