இயக்குனர் கே. சுப்பிரமணியம் பிறந்த தின பதிவு
கிருஷ்ணசுவாமி சுப்பிரமணியம் 1930களிலும், 40களிலும் புகழ்பெற்று விளங்கிய தமிழ்த் திரைப்பட இயக்குனர். பொதுவாக கே. சுப்பிரமணியம் என அழைக்கப்பட்டவர். கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான இவர் 1936 இலிருந்து 1945 வரை பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கியவர். எம். கே. தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி, என். எஸ். கிருஷ்ணன் பி. யு. சின்னப்பா ஆகிய நடிகர்களைக் கொண்டு இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவான பல படங்களை இயக்கியவர். "தமிழ்த் திரையுலகின் தந்தை’ என்று வழங்கப்படுகிறார்.
கே. சுப்பிரமணியம் தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில், பிரபல வழக்குரைஞராக இருந்த கிருஷ்ணசுவாமி ஐயருக்குப் பிறந்தார். தந்தையைப் போலவே சட்டம் படித்த இவர், கும்பகோணத்தில் வழக்குரைஞராகச் சிலகாலம் பணியாற்றினார். பின்னர், திரைப்படத் துறையின் மீதுள்ள ஈடுபாட்டால் சென்னைக்கு வந்தார்.
தமிழ்த் திரைப்பட முன்னோடிகளுள் ஒருவரும், ...