Sunday, March 19
Shadow

Tag: தின

நடிகை இந்திரஜா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
விஜய்க்கு ஜோடியாக நடித்து பின்னர் சீரியல்களில் கவனம் ஈர்த்தவர் நடிகை இந்திரஜா. இவருக்கு வாய்ப்புகள் எளிதில் கிடைக்கவில்லையாம். பல சிக்கல்கள், வேதனைகள் பட்டே உயர்ந்துள்ளார். விஜய் நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் அஜித்தும் நடித்திருந்தார். அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இந்திரஜா. அதற்கு பிறகு ஏழு வருடங்கள் படம் இல்லாமல் சிரமப்பட்டுள்ளார். பின் எங்கள் அண்ணா என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். அதனை தொடர்ந்து முழுக்க முழுக்க சீரியல்கள் தான். பாசம் சீரியலின் மூலம் அவரின் சின்னத்திரை பயணம் தொடங்கியது. எதிர்பாராமல் வந்த சிக்கலால் சீரியலே நிறுத்தப்பட்டதாம். பின் சோதனைகளை கடந்து தான் பைரவி, வள்ளி என முக்கிய சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள்: எங்கள் அண்ணா, ராஜாவின் பார்வையிலே...

கவிஞர் கண்ணதாசன் மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
கண்ணதாசன் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர். கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா ஆகும். இவா் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே பிறந்தார். இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர். சிறு வயதில் இவரை சிகப்பு ஆச்சி என்பவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த...

நடிகை பிரணிதா சுபாஷ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பிரணிதா சுபாஷ் இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் அக்டோபர் 17, 1992 ஆம் ஆண்டு பிறந்தார். மற்றும் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னடப் பதிப்பில் முதன் முதலாக நடித்தார். இவர் நடித்த படங்கள்: எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் உதயன், சகுனி, மாசு என்கிற மாசிலாமணி...

நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
கீர்த்தி சுரேஷ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆவது ஆண்டில் கீதாஞ்சலி மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் 1992, அக்டோபர் 17 ஆம் நாளில் சுரேஷ்குமார், மேனகா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் நடித்த படங்கள்: பொன்னியின் செல்வன், தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சர்கார், சாமி 2, சீமராஜா, சண்டகோழி 2, பைரவா , பாம்பு சட்டை , ரெமோ, தொடரி, ரஜினி முருகன், இது என்ன மாயம்...

இசையமைப்பாளர் அரோள் கரோலி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அரோள் கரோலி என்பவர் ஒரு இந்திய இசையமைப்பாளர். இவர் மிஷ்கின் இயக்கி பாலாவின் பீ ஸ்டுடியோ தயாரித்த பிசாசு (2014) படத்திற்கு இசையமைத்தார். சினிமா துறையில் அருள் எனப் பலர் இருப்பதால் இயக்குநர் மிஷ்கின் அரோள் என இவருக்கு பெயரைமாற்றினார். அருளைக் கவர்ந்த இசைக் கலைஞர்களில் முதன்மையானவர் இத்தாலிய வயலின் இசை மேதை கரோலி. ஆகவே அவர் பேரையும் தன் பெயரோடு இணைத்துக்கொண்டார். அருள் முருகன் என்ற இயற்பெயர் கொண்ட அரோள் கரோலியின் பூர்வீகம் தேனி மாவட்டம் என்றாலும் வளர்ந்தது சென்னை மறைமலை நகரில். இவர் தன் ஐந்து வயதில் கர்நாடக சங்கீதத்தில் வயலின் வாசிக்க சிறி ரவிக்குமாரிடம் கற்கத்துவங்கினார். 12 வயதில் ஏ. கன்யாகுமாரியிடமும் வயலின் கற்றார். ஆசிரியர் சென்ட் பீட்டரிடம் மேற்கத்திய இசையில் பியானோ கற்றுக்கொள்ளவும் ஆரம்பித்தார். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும், இசை ஆர்வத்தின் காரணமாக மேற்கொண்டு படிக்க விரும்பவில்ல...

நடிகர் சத்யராஜ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சத்யராஜ் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் சுப்பையா ஆகும். இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். இவரது மகன் சிபிராஜ் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஒரு கடவுள்மறுப்பு கொள்கையுடையவர். இவர் நடிகர் மணிவண்ணனின் கல்லூரி நண்பர் ஆவார். வில்லாதி வில்லன் திரைப்படத்தினை இயக்கி நடித்துள்ளார். லீ என்ற திரைப்படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தில் இவர் மகன் சிபிராஜ் கதாநாயகனாக நடித்தார். 1987இல் சத்யராஜூம், அவருடைய மனைவியும், சத்யராஜின் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரைப் பத்திரிகை வைத்து அழைத்தனர். அதன்படி எம்.ஜி.ஆரும் தன் துணைவியாருடனும், அமைச்சர் முத்துசாமியுடனும் சென்றார். அதன்பின் திருமணத்திற்கு வந்தமைக்கு எம்.ஜி.ஆருக்கு நன்றி சொல்ல சென்ற போது எம்.ஜி.ஆ...

நடிகை சந்தியா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சந்தியா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். காதல் என்ற தமிழ்த் திரைப்படத்தில் 2004-ம் ஆண்டு அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழித் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். சந்தியா எனப்படும் இந்த நடிகையின் இயற்பெயர் ரேவதி என்பதாகும். இவர் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். இவர் 2004 இல் வெளியான காதல் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இந்த படம் தமிழ்நாடு மாநில விருதையும், பிலிம்பேர் விருதையும் பெற்றது. இவர் தற்போது வரை காதல் சந்தியா என்றே அழைக்கப்படுகிறார். இவருடைய தகப்பனார் அஜித் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை பார்த்தவர் மற்றும் தாயார் அழகுக்கலை நிபுணர் ஆவார். இவருடைய தாய்மொழி மலையாளம் ஆகும். இவர் சென்னையில் வித்யோதய்யா பிரைமரி பெண்கள் பாடசாலையில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளார். அப்போது காதல் திரைப்பட கதாநாயகியாக நடித்ததால், பின் பள்ளிப்படிப்பை நிற...

இயக்குனர் பூரி ஜெகன்நாத் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பூரி ஜெகன்நாத் இந்தியத் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் மூன்று முறை நந்தி விருதினை வென்றுள்ளார். பத்ரி, இதலு சிராவணி சுப்பிரமணியம் , இடியட், அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி, சிவமணி, போக்கிரி, தேசமுடுரு, பிஸ்னஸ் மேன், கேமராமேன் கங்கதோ ராம்பாபு, இதரம்மாயில்தோ ஆகிய புகழ்பெற்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் இந்தி மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்....

நடிகர் தேவ் ஆனந்த் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
தரம் தேவ் கிஷோரிமல் ஆனந்த் ஒரு பிரசித்தி பெற்ற இந்திய பாலிவுட் நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். தேவ் தனது மூன்று சகோதரர்களில் இரண்டாவதாக பிறந்தவர். அவரது மூத்த சகோதரர் சேதன் ஆனந்த் ஒரு திரைப்பட இயக்குனர் ஆவார், அதேபோல் அவரது இளைய சகோதரர் விஜய் ஆனந்தும் இயக்குனர் ஆவார். அவர்களின் சகோதரி, ஷீல் காந்தா கப்பூர், புகழ் பெற்ற ஹிந்தி மற்றும் ஆங்கில திரைப்படத்துறையின் இயக்குனர் சேகர் கப்பூரின் தாயார் ஆவார். பஞ்சாப் மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முந்தைய குர்தாஸ்பூர் மாவட்டத்தில் செல்வவளம் மிக்க வக்கீல் கிஷோரிமல் ஆனந்த் மகனாக தரம் தேவ் குந்தன் லால் கிஷோரிமல் ஆனந்த் பிறந்தார். லாகூரில்(தற்போது பாகிஸ்தானில்) உள்ள ஒரு அரசுக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து இளங்கலைப்பட்டம் பெற்றார். நடிப்பின் மேல் அவர் கொண்டிருந்த காதல், சொந்த நகரைத் துறந்து இந்தி திரைப்படத்தொழிலின் மையமான மும்பை நோக்கி வர...

இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஏ. ஆர். முருகதாஸ் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களை இயக்கி வருகிறார். தீனா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி பின்னர், ரமணா, கஜினி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். முருகதாஸ் கள்ளக்குறிச்சியில் பிறந்து திருச்சி பிசப் ஹீபர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அவர் தனது கல்லூரிப் பருவத்தில் தமிழ் சினிமா துறையில் ஆர்வமாக இருந்துள்ளார். கல்லூரிப் பருவத்தில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நடிப்பது, பிரபலமான நடிகர்களைப் போல் குரல் மாற்றிப் பேசுவது போன்ற விசயங்களில் ஆர்வமாக இருந்துள்ளார். பள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதை அவரது நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொ...