மித்ரா குரியன் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் மலயாளம் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் துணை கதாப்பாத்திரங்களிலே நடித்துள்ளார்.
இவர் நடித்த படங்கள் : புத்தனின் சிரிப்பு, சாது மிரண்டால்
மாதுரி தீட்சித் ஒரு இந்திய பாலிவுட் நடிகையாவார். 1980 மற்றும் 1990 ஆண்டுகளில் இந்தி படவுலகில் புகழ்பெற்ற நடிகைகள், நடன நாட்டிய நிபுணர்களின் வரிசையில், இவர் தன்னை ஒரு பெயர்பெற்ற நடிகையாகவும் நடன நாட்டிய கலைஞராகவும் நிலைநாட்டிக் கொண்டார். இவர் பல வகையான வணிகரீதியான வெற்றிப்படங்களில் தோன்றியதோடு பல படங்களில் அவருடைய நடிப்புத் திறமைக்காகவும் எண்ணற்ற மனம் கவரும் நடனங்களுக்காகவும் பெயர் பெற்றார். ஊடகங்கள் மாதுரியை பாலிவுட்டின் மிகவும் முதன்மை நடிகையாக அடிக்கடி மேற்கோள் காட்டுவதுண்டு. 2008 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் நான்காவது மிகவும் உயர்ந்த குடிமுறைசார்ந்த விருதான பத்ம ஸ்ரீ பட்டத்தை அளித்து பெருமை செய்திருக்கிறது.
மாதுரி தீட்சித் மும்பையை சார்ந்தவர். மராத்தி சித்பவன் பிராம்மண குடும்பத்தைச் சார்ந்த ஷங்கர் மற்றும் ஸ்நேஹலதா தீட்சித்திற்கு பிறந்த இவர் டிவைன் சைல்ட் உயர்நிலைப்பள...
சீலா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் நந்தா மற்றும் வீராசாமி போன்ற திரைப்படங்களில் நடித்ததிற்காக அறியப்பட்டார். இவர் சுமார் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இவர் நடித்த திரைப்படங்கள்: பூவே உனக்காக, நந்தா, டும் டும் டும், இளவட்டம், வீராசாமி, சீனா தானா 001, கண்ணா, வேதா,...
சாரீன் கான் இந்தித் திரைப்படங்களில் நடிக்கும் இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் பஞ்சாபி மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் அனில் சர்மா இயக்கிய வீர் எனும் திரைப்படத்தில் சல்மான்கானின் இணையாக நடித்தார். இத்திரைப்படம் ஜீ தொலைக்காட்சியின் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவர் நடிப்பில் வெளியான ஹவுஸ்புல் 2 எனும் திரைப்படம் வணிக ரீதியில் வெற்றி பெற்ற திரைப்படமாகும். 2013 ஆம் ஆண்டில் நான் ராஜாவாகப் போகிறேன் எனும் தமிழ்த் திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் தோன்றினார்.
சாரீன் கான் 14 மே, 1987 ஆம் ஆண்டு மஹாராஷ்டிரத்தின் மும்பை நகரில் பிறந்தார். இவர் இஸ்லாமிய பஷ்தூன் இனத்தினைச் சார்ந்தவராவார்.[1][2][3] இவர் இந்தி, உருது, ஆங்கிலம், மராத்தி மற்றும் பஷ்தூன் ஆகிய மொழிகளைப் பேசும் திறனுடையவர். மும்பையிலுல்ள ரிஸ்வி அறிவியல் கல்லூரியில் கல்வி பயின்றார்.
மருத்துவராக ஆ...
அம்ரியா தாஸ்த்தர், இவர் தன் படிப்பை கதிடிரால் அன்ட் ஜான் கானன் பள்ளியில் துவகினார். இவர் தன் மேல் நிலைக்கல்வியை திருபாய் அம்பானி பன்னாட்டுப் பள்ளியில் துவக்கினார். ஆனால் நடிப்புக்காக பள்ளிப் படிப்பை கைவிட்டார். இவர் பார்சி மொழியை புரிந்து கொள்ளக்கூடியவர் ஆனால் வீட்டில் குசராத்தி மொழியை பேசுவார் மேலும் ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளைப் பேசத் தெரிந்தவர். இவர் தற்போது மும்பையில் எச். ஆர். கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்பை படித்து வருகிறார். இவர் தன் வாழ்க்கையை வடிவழகியாக துவக்கினார்.
இவர் மனிஷ் திவாரியின் இந்தி திரைப்படமான இசாக் என்ற காதல் படத்தில் படத்தில் நடித்தார், இசாக் படத்தில் பிரித்திக் பாபருடன் இணைந்து நடித்தார்.
இவர் நடித்த தமிழ் படம்: அனேகன்...
பி. கண்ணாம்பா பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்பட நடிகை. மு. கருணாநிதியின் மனோகரா திரைப்படம் மூலம் வசனத்தை திறம்பட பேசி எல்லோராலும் பாராட்டை பெற்றவர். 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 25 படங்களை தயாரித்தும் உள்ளார்.
கண்ணாம்பா தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டவர். ஆந்திரப் பிரதேசம், குட்டப்பா என்ற ஊரில் எம். வெங்கணராசையா, லோகாம்பா ஆகியோருக்கு ஒரே குழந்தையாகப் பிறந்தார். தாயின் பெற்றோருடன் ஏலூருவில் வளர்ந்தார். 1927 ஆம் ஆண்டு கண்ணம்பா 16 வயதில் நாரலா நாடகி சமாஜன் நாடக மன்றத்தில் சேர்ந்து அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதியாக நடித்து பெயர் பெற்றார். அதன் பிறகு அந்த நாடக மன்றம் மேடையேற்றிய அனுஷியா, சாவித்திரி, யசோதா போன்ற நாடகங்களில் நடித்தார். இந்நாடக நிர்வாகிகளில் ஒருவரான கே. பி. நாகபூஷணம் 1934 இல் கண்ணாம்பாவைத் திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டு இருவரும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நாட்டிய மண்...
சண்முகசுந்தரி ஒரு தமிழ் நடிகை. இவர் பின்னணி பாடகியும், நடிகையுமான டி.கே.கலாவின் தாயார். எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தவர் நடிகை சண்முகசுந்தரி.
தன்னுடைய ஐந்தாம் அகவையில் இருந்து, நாடகங்களில் நடித்து வந்துள்ளார். சுமார் 45 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். இதுவரையிலும் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான படங்களுக்கு டப்பிங் எனப்படும் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.
இவர் எம்.ஜி.ஆருடன் இதயக்கனி, நீரும் நெருப்பும், கண்ணன் என் காதலன், என் அண்ணன் போன்ற படங்களில் நடித்துள்ளார். சிவாஜியுடன் லட்சுமி கல்யாணம்,வடிவுக்கு வளைகாப்பு படங்களிலும், ஜெமினியுடன் மாலதி படத்திலும் நடித்துள்ளார்.
இவர் நாடகம் மற்றும் திரைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக, தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றுள்ளார்.
நடிகர் வடிவேலுவுக்கு நிறை...
ஷோபா தென்னிந்தியத் திரைப்பட நடிகை. தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான இவர் உத்ராத ராத்திரி என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவரின் இயற்பெயர் மகாலட்சுமி. இவர் தனது 17வது வயதில் பசி தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமைக்காக தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.
சோபா கே. பி. மேனன் என்பவருக்கும், பிரேமா மேனன் என்பவருக்கும் பிறந்தார். தாயார் 1950களில் மலையாளப் படங்களில் பிரபலமான நடிகையாக விளங்கியவர். சோபா 1966 ஆம் ஆண்டில் சந்திரபாபுவின் இயக்கத்தில் வெளியான தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் பேபி மகாலட்சுமி என்ற பெயரில் குழந்தை நடிகையாக அறிமுகமானார். 1967 இல் பி. வேணுவின் இயக்கத்தில் உத்யோகாஸ்தா என்ற மலையாளத் திரைப்படத்தில் பேபி ஷோபா என்ற பெயரில் நடித்தார். இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்று சோபாவிற்கு...
கஸ்தூரி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ஆத்தா உன் கோயிலிலே (1991), ராசாத்தி வரும் நாள் (1991), சின்னவர் (1992), செந்தமிழ்ப் பாட்டு (1992), அமைதிப்படை (1994) போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இந்தியா, தமிழ்நாடு மாநிலம், சென்னையில் மே 1, 1974 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளைப் சென்னையில் படித்து முடித்தார். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றார். இவருக்கு ரவிக்குமார் என்ற கணவரும் மற்றும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது கணவர் அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரிகிறார்.
ஒரு தென்னிந்திய நடிகை என்னும் 30 நிமிட குறும்படத்தினை கஸ்தூரி குறித்து ரிச்சர்டு பிரேயரும் என்.சி ராஜாமணி இயக்கியுள்ளனர். கஸ்தூர...
லேகா வாசிங்டன் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் நடிக்கும் திரைப்பட நடிகையும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் உள்ளார். 2002 ஆம் ஆண்டு வாக்கில் எஸ் எஸ் மியுசிக் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவு தொகுப்பாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் ஜெயம் கொண்டான், வேதம், வ போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த படங்கள்: கல்யாண சமையல் சாதம், வ குவாட்டர் கட்டிங், ஜெயம் கொண்டான், உன்னாலே உன்னாலே...