Friday, February 7
Shadow

Tag: ஷங்கர்

இயக்குனர் ஷங்கர் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஷங்கர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவர் எஸ் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் இயக்கிய படங்கள்: ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன் , சிவாஜி: தி பாஸ், எந்திரன், நண்பன், ஐ, எந்திரன் 2 இவர் தயாரித்த படங்கள்: முதல்வன், காதல், இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, வெயில், கல்லூரி, அறை எண் 305-இல் கடவுள், ஈரம்,ரெட்டைசுழி...
கைவிடப்பட்டதா கமல்ஹாசன்- ஷங்கர் கூட்டணியில்  உருவாக்கும் இந்தியன் 2 ?

கைவிடப்பட்டதா கமல்ஹாசன்- ஷங்கர் கூட்டணியில் உருவாக்கும் இந்தியன் 2 ?

Latest News, Top Highlights
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றும் அதே நேரத்தில் முதல்கட்ட படப்பிடிப்பிலேயே திட்டமிட்ட பட்ஜெட்டை விட மூன்று மடங்கு செலவானதால் இந்த படத்தினை தொடர லைகா நிறுவனம் விரும்பவில்லை என்றும் தகவல் வந்தது. 350 கோடி பட்ஜெட்டில் இந்த படம் தயாரிக்கவிருந்தது. ஆனால் முதல்கட்ட படப்பிடிப்பின் பாதிகூட முடியாததால் லைகா நிறுவனம் அதிருப்தி தெரிவித்தது. மேலும் படத்தின் நாயகன் கமல் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இறங்கியுள்ளார். இதனால் படத்தின் படப்பிடிப்பும் தாமதமாகிக்கொண்டே இருப்பதால் அதிருப்தி அடைந்த லைகா நிறுவனம் இந்த படத்தில் இருந்து ஒதுங்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியன்2 முற்றிலுமாக கைவிடப்படும் என்று தெரிக...
’இந்தியன் 2’ படத்திற்கும் நிச்சயம் சர்ச்சைகள் கிளம்பும் – கமல்!

’இந்தியன் 2’ படத்திற்கும் நிச்சயம் சர்ச்சைகள் கிளம்பும் – கமல்!

Latest News, Top Highlights
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் விரைவில் துவங்கவிருக்கிறது ‘இந்தியன் 2’. இப்படத்திற்கு நிச்சயம் சர்ச்சைகள் எழும் என கமல் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னையில் உள்ள கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய கமல், ’பத்மாவத்’ வெளியீட்டால் நாட்டை உலுக்கிய கலவரத்தை பற்றி கூறினார். தமிழ்நாட்டில் எவ்வித சலசலப்புமின்றி மக்கள் ‘பத்மாவத்’ திரைப்படத்தை கண்டுகளிக்கின்றனர். இன்றைய தலைமுறையினருக்காக எடுக்கப்பட்ட ‘பத்மாவத்’ படத்துக்கு அடுத்த தலைமுறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டனத்திற்குரியது என்றும் கமல் கருத்து தெரிவித்தார். மேலும், தற்போதுள்ள அரசியல் சூழலில் தனது படங்களான ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘அன்பே சிவம்’, ‘தேவர் மகன்’ போன்ற திரைப்படங்களை வெளியிட்டிருக்க முடியாது. யாருக்கு தெரியும் ’இந்தியன் 2’ படத்துக்கும் பிரச்னைகள் வரலாம் என கமல் தெரிவித்துள்ளார்....
இந்தியன்-2 பற்றிய பிரமாண்ட தகவலை வெளியிட்ட ஷங்கர்

இந்தியன்-2 பற்றிய பிரமாண்ட தகவலை வெளியிட்ட ஷங்கர்

Latest News, Top Highlights
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’. ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு ஷங்கர் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார். 1996-ஆம் ஆண்டு ரிலீஸான இதன் முதல் பாகத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்தி அசத்தியிருந்தார். முதல் பாகம் மெகா ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதிலும் கமல்ஹாசனே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு இயக்குனர் ஷங்கர் டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‘இந்தியன் 2’ என்று எழுதப்பட்டிருக்கும் ஹீலியம் பலூனை தைவான் நாட்டில் தனது டீமுடன் சேர்ந்து பறக்கவிட்ட வீடியோவையும் பதிவு செய்துள்ளார். இந்த வீ...
அரம்பமே இப்படியா – திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஷங்கர்

அரம்பமே இப்படியா – திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஷங்கர்

Latest News, Top Highlights
விக்ரமின் 'ஐ' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஷங்கர் 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார். 1996-ஆம் ஆண்டு ரிலீஸான இதன் முதல் பாகத்தில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்தார். பார்ட்-1 மெகா ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதிலும் கமல்ஹாசனே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கவுள்ள இதற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், டி.முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார், ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். தற்போது, இயக்குநர் ஷங்கர் டிவிட்டரில் ‘இந்தியன் 2’ என்று எழ...
ஷங்கர் – கமல் இணையும் `இந்தியன் 2′ படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

ஷங்கர் – கமல் இணையும் `இந்தியன் 2′ படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

Latest News, Top Highlights
ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி மெகா வெற்றி பெற்ற படம் `இந்தியன்'. இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல் - ஷங்கர் மீண்டும் இணையும் `இந்தியன்-2' படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் `இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்தடுத்த பல படங்கள் வரிசைக்கட்டி நிற்பதால் ஏ.ஆர்.ரகுமானால் இந்த படத்திற்கு இசையமைக்க முடியாத நிலைய ஏற்பட்டுள்ளது. எனவே இந்த படத்திற்கு அனிருத்தை இயக்குநர் ஷங்கர் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அனிருத்தோ ...
அருவியை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குனர்

அருவியை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குனர்

Latest News, Top Highlights
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘அருவி’. இப்படத்தில் அருவியாக அதிதிபாலன் நடித்துள்ளார். லக்‌ஷ்மி கோபாலசாமி, ஷிவதா நாயர், ஸ்வேதா சேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தை காஷ்மோரா, ஜோக்கர், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வெளியிட்டனர். இப்படத்தை பார்த்த ரசிகர்கள், திரையுலகினர் என அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் அருவி படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். அருவி படத்திற்கு குவிந்து வரும் பாராட்டுக்களால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....