Thursday, September 17
Shadow

Tag: அப்டேட்

விஜயின் தளபதி-63 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
ரமலான் தினமான இன்று நடிகர் விஜய் நடிக்கும் தளபதி-63 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை இசையமைப்பாளர் ஏ அர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தளபதி-63க்கான முதல் பாடல் வேலைகள் ஆரம்பமானது என்று குறிப்பிட்டுள்ளார். தெறி, மெர்சல் திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்- அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள உள்ள நிலையியல், இந்த படத்தின் முதல் பாடல் வேலைகள் ஆரம்பமானது என்ற தகவலை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார்....
அதர்வா-ஹன்சிகா நடிக்கும்  ‘100’ பட ரீலிஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

அதர்வா-ஹன்சிகா நடிக்கும் ‘100’ பட ரீலிஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில், நடிகர் அதர்வா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள படம் '100'. இந்த படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்துள்ளார். காவ்யா வேணுகோபால் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் மே 3ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் திரையிடும் தேதி மே 9ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இப்படத்தைத் தொடர்ந்து அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன், வில் அம்பு என்று வரிசையாக பல படங்களில் நடித்தார். ஆனால், எந்த படமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்த நிலையில், தான் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான ஹரிஷ், ரைசா உடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். இப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்தார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படமும் செம ஹிட் கொடுத்தது. இந்நிலையில் சஞ்சய் பாரதி இயக்கத்தில் உருவாகும் `தனுசு ராசி நேயர்களே' படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகும் இதில் ஹரிஷ் க...
2019-ல் அருள்நிதி நடிக்கும்  ‘கே 13’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

2019-ல் அருள்நிதி நடிக்கும் ‘கே 13’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
கடந்தாண்டு மாறன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களைத் தேர்வு செய்து நடிக்கும் அருள்நிதி, அடுத்ததாக பரத் நீலகண்டன் இயக்கும் நடித்துள்ள "கே 13" இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் `நேர்கொண்ட பார்வை' படத்திலும் நடித்து வரும் ஷராதா ஸ்ரீநாத், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த இந்த படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் சென்சார் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தை தணிக்கை செய்த தணிக்கை குழுவினர், இந்த படத்திற்கு "யு/எ" சான்றிதழ் வழங்கியு...
சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான உள்ள மிஸ்டர் லோக்கல் படத்தின் ஆடியோ & டிரைலர் போன்றவிய வரும் 20ம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். எம்.ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு இப்படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்பட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதையடுத்து வரும் மே 1-ம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் மிஸ்டர் லோக்கல் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வரும் ஏப்ரல் 20ம் தேதி வெளியிட இருப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவ...
ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி தயாரிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி தயாரிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
  ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது 'தளபதி 63' படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தான் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ள '99 சாங்ஸ்' படத்தை மிகவும் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும் '99 சாங்ஸ்' படம் வரும் ஜூன் 29ம் தேதி வெளியாகவுள்ளதாகவும். எல்லோரின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். ஆஸ்கார் மற்றும் கிராமி விருதுகளை பெற்ற இசைக்கலைஞர் ஏ.ஆர். ரஹ்மான தன்னுடைய தயாரிப்பில் வெளியான '99 சாங்ஸ்' படத்தின் பாடல் வெளியீடு ஜூன் 15 வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இந்த படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்த படம் ஏ.ஆர். ரஹ்மான் பேனரில் வெளிவரவுள்ளது. இதன் பின்னணியில் ஒய்.எம். மூவிஸ், மற்றும் ...
சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே.16’ படத்தின் புதிய அப்டேட்

சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே.16’ படத்தின் புதிய அப்டேட்

Latest News, Top Highlights
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயனின் 16வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 22ம் தேதி துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்....
தம்மன்னா நடிக்கும் திகில் படத்தின் புதிய அப்டேட்

தம்மன்னா நடிக்கும் திகில் படத்தின் புதிய அப்டேட்

Latest News, Top Highlights
‘அதே கண்கள்’ இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கம் பெயரிடப்படாத திகில் படத்தில் நடிகை தம்மன்னா தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்று, இந்நிலையில், இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை தம்மன்னா-க்கு ஜோடி கிடையாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகை ஹன்சிகா நடித்துவரும் 'பார்னர்' படத்தில் அவரும் ஜோடி யாரும் இல்லாமல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் நடிகை தம்மன்னா நடித்துள்ள தேவி 2 அடுத்த மாதம் ரீலிஸ் ஆக உள்ளது. இதை தொடர்ந்து, விஷால்-சுந்தர் சி ஆகியோருடன் இணையும் படமான துருக்கி படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதுமட்டுமின்றி இவர் ஹிந்தியில் வெளியான குயின் படத்தின் தெலுங்கு ரீமேக் படமான மகாலட்சுமி என்ற படத்திலும் நடிகை தம்மன்னா நடித்து வருகிறார்....