
‘அதே கண்கள்’ இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கம் பெயரிடப்படாத திகில் படத்தில் நடிகை தம்மன்னா தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்று,
இந்நிலையில், இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை தம்மன்னா-க்கு ஜோடி கிடையாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகை ஹன்சிகா நடித்துவரும் ‘பார்னர்’ படத்தில் அவரும் ஜோடி யாரும் இல்லாமல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் நடிகை தம்மன்னா நடித்துள்ள தேவி 2 அடுத்த மாதம் ரீலிஸ் ஆக உள்ளது. இதை தொடர்ந்து, விஷால்-சுந்தர் சி ஆகியோருடன் இணையும் படமான துருக்கி படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதுமட்டுமின்றி இவர் ஹிந்தியில் வெளியான குயின் படத்தின் தெலுங்கு ரீமேக் படமான மகாலட்சுமி என்ற படத்திலும் நடிகை தம்மன்னா நடித்து வருகிறார்.