Sunday, June 21
Shadow

Tag: தின

நடிகர் ஆதித்யா பிறந்த தின பதிவு

நடிகர் ஆதித்யா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஆதித்யா மேனன் இந்திய திரைப்பட நடிகர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இவர் 2003-ம் ஆண்டு ஜே ஜே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலமே திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் நடித்த படங்கள்:  பிரமாண்ட நாயகன், இன்பா, பில்லா, ஆதி, வட்டாரம், தாஸ்

நடிகர் ஜெய் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஜெய் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இசையமைப்பாளர் தேவாவின் உறவினர். ஜெய் தன் 16-வது வயதில் விஜயுடன் பகவதி என்ற திரைப்படத்தில் நடித்தர். பின்பு சென்னை 28 என்ற முக்கிய கதாப்ப்த்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தற்போது வளர்ந்து வரும் நட்சத்திரமாக உள்ளார். இவர் நடித்த கோவா, வாமனன், எங்கேயும் எப்போதும், வடகறி மற்றும் திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற திரைப்படங்கள் பாராட்டப்படும் அளவிற்கு வெற்றியை பெற்றுள்ளது. இவர் நடித்த படங்கள்:  பிரேக்கிங் நியூஸ், மாநாடு, காக்கி, பார்ட்டி, நீயா 2, கலகலப்பு 2, ஜருகண்டி, எனக்கு வாய்த்த அடிமைகள், பலூன், தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும், இது நம்ம ஆளு, சென்னை 600028 : 2, புகழ், வலியவன், திருமணம் என்னும் நிக்காஹ், வடகறி, நவீன சரஸ்வதி சபதம், ராஜா ராணி, கோ, எங்கேயும் எப்போதும், அவள் பெயர் தமிழரசி, கனிமொழி, கோவா, அதே நேரம் அதே இடம், வாமனன், சுப்ரமணி...

நடிகை லிசா ரே பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
லிசா ரே ஒரு கனடிய நடிகை மற்றும் முன்னாள் ஆடை அலங்கார மாடல் ஆவார். 23 ஜூன் 2009 அன்று அவருக்கு பல்சாற்றுப்புற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவருக்கு சிகிச்சையின் முதல் சுழற்சி 2 ஜூலை 2009 அன்று தொடங்கியது. கனடாவின் ஆண்டரியோவில் உள்ள டொரோண்டோவில் இந்திய மரபு பெங்காலி தந்தை மற்றும் பூலிஷ் தாயாருக்கும் லிசா ரே பிறந்தார். மேலும் டொரொண்டோவின் புறநகர் பகுதியான எடோபிகோக்கில் வளர்ந்தார். ஐந்து ஆண்டுகள் உயர்நிலைப்பள்ளிகளில் பயின்று கல்விரீதியாக புலமை பெற்ற அவர் அவற்றில் நான்கு ஆண்டுகளில், எட்டோபிகோக் கல்வி நிறுவனம், ரிச்வியூ கல்வி நிறுவனம் மற்றும் சில்வர்துரோன் கல்வி நிறுவனம் போன்ற மூன்று வேறுவேறு உயர்நிலைப் பள்ளிகளில் பாடம் பயின்றார். லிசா அவரது தாய்வழிப் பாட்டியுடன் பூலிஷில் பேசுவார். மேலும் அவரது சினிமாவில் ஆர்வம் கொண்ட தந்தையுடன் பெடரிகோ பெலினி மற்றும் சத்யஜித் ரே ஆகியோரின் திரைப்பட...

நடிகர் சாம் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஷம்சுத்தீன் இப்ராகிம் என்ற இயற்பெயரைக் கொண்ட ஷாம் தமிழ்த் திரைப்பட நடிகராவார்.  நடிகர் ஷாம் தற்போது ‘2எம் சினிமாஸ்’ கே.வி.சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில், தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் ‘காவியன்’ என்றும், தெலுங்கில் ‘வாடு ஒஸ்தாடு’ என்றும் பெயர்  சூட்டப்பட்டுள்ளது.  நடிகர் ஷாம் - கஷீஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் நடித்த படங்கள்:  தர்மபிரபு, குஷி, 12பி, ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே, பாலா, அன்பே அன்பே, லேசா லேசா, இயற்கை, கிரிவலம், உள்ளம் கேட்குமே, ABCD, மனதோடு மழைக்காலம், தன்னானம் தன்னானம், தூண்டில், இன்பா, கிக், அந்தோணி யார்?, தில்லாலங்கடி, அகம் புறம்,  6...

நடிகர் பிரபுதேவா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பிரபுதேவா இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகனாவார். இவரின் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பிரபலமாக அறியப் படுகின்றார். இவரது முதலாவது நடனம் வெற்றிவிழாத் திரைப்படத்திற்கானதாகும். இவர் இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார். மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார். நடன ஆசிரியராக பல திரைப்படங்களில் பங்காற்றிய இவர் 1989 ஆவது ஆண்டில் வெளியான இந்து திரைப்படத்தில் நடிகை ரோஜாவுடன் இணைந்து நடித்தார். இதுவே இவர் முழுநேர கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமாகும். நடிப்பைத் தொடர்ந்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்த இவர் போக்கிரி, ...

நடிகை ஜெயபிரதா பிறந்த தின பதிவு

Birthday, Latest News
ஜெய பிரதா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி. ஜெய பிரதா, இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தின் இராஜமுந்திரியில் ஒரு நடுத்தர-வர்க்க குடும்பத்தில் லலிதா ராணியாகப் பிறந்தார். அவருடைய தந்தை கிருஷ்ணா தெலுங்கு திரைப்பட பண முதலீட்டாளர். அவருடைய தாய் நீலவாணி ஜெயபிரதாவை இளம் வயதிலேயே இசை மற்றும் நாட்டிய வகுப்புகளில் சேர்த்துவிட்டார். பதினான்கு வயதாக இருக்கும்போது அவர் தன்னுடைய பள்ளி ஆண்டு விழாவில் ஒரு நடன நிகழ்ச்சியை நடத்தினார். பார்வையாளர்களில் ஒரு திரைப்பட இயக்குனரும் இருந்தார். அவர் ஜெயபிரதாவிற்கு தெலுங்கு திரைப்படமான பூமிகோசம்-இல் மூன்று நிமிட நடன ஆட்டத்தை வழங்கினார். அவருக்குத் தயக்கமாகவே இருந்தது ஆனால் அவருடைய குடும்பம் அதை ஏற்றுக்கொள்ளுமாறு உற்சாகப்படுத்தியது. அந்தத் திரைப்படத்திற்கு அவருக்கு வெறும் 10 ரூபாய்கள் வழங்கப்பட்டது ஆனாலும் தெலுங்கு திரைப்படத் துறையின் மிகப் பிரபலங்களுக்...

நடிகர் மோகன் ராமன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மோகன் ராமன் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகராவார். மேலாண்மைப் பயிற்றுனராகவும் பணி புரிந்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில் துணை மற்றும் எதிர்மறை வேடங்களில் சிறப்பாக நடித்துப் பெயர் பெற்றுள்ளார். குறிப்பாக மர்மதேசம் (விடாது கறுப்பு), சிதம்பர ரகசியம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களால் பெரிதும் அறியப்பட்டவர். வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான வி. பி. ராமனின் மூத்த மகனாவார். தற்போதைய தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி. எஸ். ராமனின் அண்ணன் ஆவார். இவர் நடித்த திரைப்படங்கள்:  இதயம், மகாநதி, ஆனஸ்ட் ராஜ், ஒன்ஸ் மோர், ஆஹா, அரிச்சந்திரா, படையப்பா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தேவன், அன்பே அன்பே, மாஜிக் மாஜிக் 3டி, பெரியார், நான் அவனில்லை, குசேலன், டிஎன் 07 ஏஎல் 4777, குரு என் ஆளு, இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம், பயணம், சபாஷ் சரியானப் போட்டி, ராமானுஜன், சென்னை எக்ஸ்பிரஸ்...

பாடகர் ஹரிஹரன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஹரிஹரன் ஒரு திரைப்பட பின்னணிப் பாடகர். இவர் கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் 03.04.1955 அன்று பிறந்தார்.. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி ஆகிய மொழி படங்களில் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளார். கசல் பாடல்களைப் பாடுவதில் தேர்ச்சிப் பெற்ற இவர், கலோனியல் கசினிஸ் என்ற இசைக் குழுவின் உறுப்பினர். லெஸ்லி லூயிசும் ஹரிஹரனும் சேர்ந்து நடத்தும் இந்தக் குழு பல தனி பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. 2009ல் மோதி விளையாடு என்ற தமிழ்ப்படத்திற்குப் பின்னணி இசையும் அமைத்துள்ளது. இவர் 1992 ஆம் ஆண்டு ஏ. ஆர். ரகுமான் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகம் செய்யபட்டார். இவர் ரோஜா என்ற திரைப்படத்தில் "தமிழா தமிழா நாளை" என்ற பாடல் பாடினார். இத்திரைப்படம் ஏ. ஆர். ரகுமானுக்கும் அறிமுகப் படம். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தமிழ் குடும்பத்தில் (1955) பிறந்தவர். தந்தை திருவாங்கூர் இசைக் கல்லூரியின் முதல் பட்டத...
இயக்குனர் ராம நாராயணன் பிறந்த தின பதிவு

இயக்குனர் ராம நாராயணன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ராம நாராயணன்,  இந்தியத் திரைத்துறையைச் சார்ந்தவர். தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர். தயாரிப்பு பணிகளையும் செய்துள்ளார். இவரது திரைப்படங்களில் பலவற்றில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.  36 ஆண்டுகளில் 125 திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளது ஓர் உலக சாதனையாகும். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். இவர் ஒரு மலேய மொழிப் படத்தை இயக்கியுள்ளார்.சில திரைப்படங்களுக்கு கதையும் எழுதினார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இராம.நாராயணன், தமிழ், தெலுங்கு, ஒரியா, வங்காளி, மராத்தி, கன்னடம், குஜராத்தி, இந்தி, போஜ்புரி ஆகிய 9 மொழிகளில் 126 படங்களை இயக்கி செய்து சாதனை படைத்துள்ளார். வேறு எவரும் இவ்வாறு 100-க்கும் மேற்பட்ட படங்களை 9 மொழிகளில் இயக்கியதில்லை. இராம.நாராயணனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி. தந்தை பெயர் இராமசாமி. தாயார் மீனாட்சி ஆச்சி. ராமசா...
அரசியல்வாதி மற்றும் நடிகருமான பழ. கருப்பையா பிறந்த தின பதிவு

அரசியல்வாதி மற்றும் நடிகருமான பழ. கருப்பையா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பழ. கருப்பையா தமிழக அரசியல்வாதி மற்றும் நடிகரும் ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சி சார்பாக சென்னை மாவட்டத்தின் ஒரு பகுதியான துறைமுகம் தொகுதியில் 2011 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று 14வது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினரானார். இவர் அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் தோன்றி நடித்துள்ளார். பட்டினத்தார் ஒரு பார்வை, அரசியல் சதிராட்டங்கள், காலம் கிழித்த கோடுகள், கண்ணதாசன், காலத்தின் வெளிப்பாடு, எல்லைகள் நீத்த  ராம கதை, கருணாநிதி என்ன கடவுளா? என்ற நாவல்களை எழுதியவர் 2016 ஜனவரி 28ஆம் நாள் கட்சி கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டார் என்றும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெ. ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்தநாள் தன்னு...