நடிகர் ஜி. பட்டு ஐயர் பிறந்த தின பதிவு
ஜி. பட்டு ஐயர் தமிழ் நாடக, திரைப்பட நடிகரும், இயக்குநரும் ஆவார். இவர் அம்மாஞ்சி பட்டு ஐயர் என்றும் அழைக்கப்பட்டார்.
பட்டு ஐயர் 1906 ஏப்ரல் 26 இல் நாகப்பட்டினத்தில் பிரபலமான வணிகராக இருந்த என். கணேசய்யர் என்பவருக்குப் பிறந்தார். பள்ளியில் படிக்கும் போதே இசை, மற்றும் நாடகங்களில் இவருக்கு அதிக நாட்டம் இருந்தது. பள்ளிக்கூட நாடகங்களில் முக்கிய பாத்திரங்கள் ஏற்று பரிசுகளும் பெற்றிருக்கிறார். இவரும் நாகை மணி என்ற பெயரில் திரைப்படப் பாடல்கள் எழுதி வந்த எம். எஸ். மணி என்பவரும் மற்றும் சில நண்பர்களும் இணைந்து நாடகக் குழு ஒன்றை நிறுவி நாகப்பட்டினம், மாயவரம், திருவாரூர் போன்ற இடங்களில் நாடகங்களை நடத்தி வந்தனர்.
இவரது நாடகம் ஒன்றைக் காண வந்த ராவ்பகதூர் கே. எஸ். வெங்கட்ராமய்யர் என்பவர் இவரது நடிப்பைக் கண்டு, தனது பேத்தியின் கணவரான இயக்குநர் கே. சுப்பிரமணியத்திடம் இவரைத் திரைப்படங்களில் நடிக்கப் ப...



