Sunday, June 21
Shadow

Tag: #ameer

இயக்குனர் அமீர் பிறந்த தின பதிவு

இயக்குனர் அமீர் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
தமிழ்நாட்டில் மதுரையில் பிறந்த அமீர் பொருளியல் படித்தவர். 2002 ஆம் ஆண்டில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரைப்படவுலகில் நுழைந்தார். பின்னர் மௌனம் பேசியதே என்ற பெயரில் முதலாவது படத்தைத் தயாரித்தார். Teamwork Production House என்ற பெயரில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார். இவர் இயக்கிய படங்கள்:  மெரிசல், சந்தன தேவன், ஆதி பகவன், பருத்திவீரன், மௌனம் பேசியதே இவர் நடித்த படங்கள்:  சந்தன தேவன், அச்சமில்லை அச்சமில்லை, வட சென்னை, மெரினா, யுவன் யுவதி, யோகி இவர் தயாரித்த படங்கள் :  சந்தன தேவன், அச்சமில்லை அச்சமில்லை இவர் பாடல் பாடிய படம் :  பருத்தி வீரன்...
அருவா சண்ட டீசரை வெளியிட்ட இயக்குநர் அமீர்

அருவா சண்ட டீசரை வெளியிட்ட இயக்குநர் அமீர்

Latest News, Top Highlights
சிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து ஆதிராஜன் எழுதி இயக்கும் ‘அருவா சண்ட’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. புதுமுகம் ராஜா நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் மாளவிகா மேனன், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா, மதுரை சுஜாதா, காதல் சுகுமார், விஜய் டிவி சரத் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இந்தப்படம் காதல் சண்டையையும், கபடிச் சண்டையையும் கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. தரண் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். கௌரவக் கொலைகளின் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் கல்லேரி கலை அமைக்க, வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார். பரபரப்பான திரைக்கதையோடு உருவாகும் ‘அருவா சண்ட’ படத்தின் டீசரை, இயக்குநர் அமீர் வெளியிட்டார். டீசர் நன்றாக இருக்கிறது, படம் வெற்றிபெ...
அமீர் ரஜினிக்கு  வீசிய கத்தி, தாணுவையும் உரசியது

அமீர் ரஜினிக்கு வீசிய கத்தி, தாணுவையும் உரசியது

Latest News
சில தினங்களுக்கு முன் ரஜினியை ஒரு பொது மேடையில் வைத்து வாங்கு வாங்கென வாங்கிவிட்டார் அமீர். “பிரதமர் மோடியின் அறிவிப்பு புரட்சியானது என்று ரஜினி எப்படி கூறுகிறார்? கபாலி படம் அரசு நிர்ணயித்த டிக்கெட் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதா, மொத்த படத்தின் வருமானம் எவ்வளவு என்று ரஜினிகாந்த் கணக்கு காட்ட முடியுமா ? இதுவரைக்கும் எந்த பிரச்சினைக்கும் குரல் கொடுக்காத ரஜினி மோடியின் 500, 1,000 ரூபாய் செல்லாது என அறிவித்தற்கு வரவேற்பு அளித்தது ஏன்?” இப்படி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி, படபடவென கைத்தட்டல்களை அள்ளிக் கொண்டார் அமீர். அமீர் இப்படி ரஜினியை குறி வைத்து விளாசினாலும், பாதிக்கப்படப் போவது கபாலி படத்தின் தயாரிப்பாளர் தாணுதான். அமீர் கேள்வி கேட்டுவிட்டாரே என்பதற்காக எந்த இன்கம்டாக்ஸ் அதிகாரியும் தாணுவின் வீட்டுக் கதவை தட்டப் போவதில்லை. ஆனால் அமீரின் கேள்வி சில சங்கடங்களை தரும் அல்லவா? அதுத...