ரஜினிகாந்த், கமல்ஹாசன் முதல் ஜாக்கி ஷெராஃப், மோகன்லால் வரை… திரையுலகை தொடர்ந்து கலக்கும் பழம்பெரும் நட்சத்திரங்கள்!
90களில் கொடிகட்டிப் பறந்தவர்கள்… இன்றும் அதே மாஸ்!
ரஜினிகாந்த், கமல்ஹாசன் முதல் ஜாக்கி ஷெராஃப், மோகன்லால் வரை… திரையுலகை தொடர்ந்து கலக்கும் பழம்பெரும் நட்சத்திரங்கள்!
இந்திய சினிமாவில் ஒவ்வொரு தலைமுறைக்கும் தனித்துவமான நட்சத்திரங்கள் இருப்பார்கள். ஆனால், 90களில் ரசிகர்களின் மனதில் பதிந்த நட்சத்திரங்களுக்கான வரவேற்பு மட்டும் இன்னும் குறையவில்லை. அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த பலரும், இன்றைய தலைமுறை ரசிகர்களிடமும் தங்களது திரை ஆளுமையை தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர்.
காலம் மாறியிருக்கலாம்… சினிமாவின் தொழில்நுட்பம் மாறியிருக்கலாம்… ஆனால் இந்த நட்சத்திரங்களின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மட்டும் இன்னும் அப்படியே இருக்கிறது.
ரஜினிகாந்த் – வயது கடந்தாலும் குறையாத மாஸ்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற பெயரே தனி பிராண்ட். பல தலைமுறை ரசிகர்களை கடந்தும் இன்றும் திரையரங...
