Sunday, June 21
Shadow

Tag: #birthday

நடிகர் ஸ்ரீசரண் பிறந்த தின பதிவு

நடிகர் ஸ்ரீசரண் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பயணம் படம் மூலம் பிரபலம் ஆனவர் நடிகர் ஸ்ரீசரண். சென்னையைச் சேர்ந்த அவர் சித்தார்த் நடித்த 180 படத்தில் அவருக்கு நண்பராக நடித்திருந்தார். அஜீத்தின் பில்லா 2 படத்தில் பாபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஸ்ரீசரண் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்து வரும் தனி ஒருவனில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடித்த படங்கள்: முதல் முதல் முதல் வரை, பயணம், 180, பில்லா 2, கோபுரம், தனி ஒருவன், தமிழ் செல்வனும், தனியார் அஞ்சலும், பிருந்தாவனம் இவர் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றிய படம்: சச்சின்: எ பில்லியன் ரீம்ஸ்...

கன்னட நடிகர் ராஜ்குமார் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ராஜ்குமார்  பரவலாக அறியப்பட்ட‌ கன்னட திரைப்பட நடிகர் மற்றும் பின்னணிப் பாடகராவார். அவ‌ரின் ர‌சிக‌ர்க‌ள் அவரை "டாக்ட‌ர் ராஜ்", "ந‌ட‌ச‌ர்வ‌புமா", "அன்னாவரு" போன்ற செல்ல‌ப் பெய‌ர்க‌ளால் அழைப்பார்க‌ள். கன்னட திரைப்படத் துறையின் மிகச்சிறந்த நடிகரான ராசுகுமாரின் பல திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவரது மிகவும் புகழ் பெற்ற திரைப்படங்கள் சில "பேடரா கண்ணப்பா", "மகிசாசுர வர்த்தினி", "பூகைலாசா", "கோவதள்ளி சி.ஐ.டி 999", "பப்பூருவாகனா" ஆகும். இவர் "கோகக் இயக்கம்" என்ற கன்னட மொழியை கர்நாடக மாநிலத்தின் முதல் மொழியாக ஆக்கும் இயக்கத்தை வழிநடத்தி வெற்றி கண்டார். ராஜ்குமார் தமிழ்நாட்டில் க‌ஜ‌னூர் என்னும் ஊரில் பிறந்தார். அவ‌ர் ந‌டிப்பை அர‌ங்கத்தில் தொட‌ங்கினார். 1945 ஆம் ஆண்டில் "பெதார‌ க‌ன்னப்பபா" என்ற‌ திரைப்படத்தில் முத‌ல் முறையாக ந‌டித்தார், மொத்த‌மாக‌ 200 பட‌ங்க...

நடிகர் வருண் தவான் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
வருண் தவான் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இவர் தற்பொழுது மெயின் தேரா ஹீரோ மற்றும் ஹம்ப்டி சர்மா கி துல்ஹனியா, போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். வருண் தவான் 24ம் திகதி ஏப்ரல் மாதம் 1987ம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை டேவிட் தவான் ஒரு திரைப்பட இயக்குனர் ஆவார். இவரின் தாயின் பெயர் கருணா தவான் மற்றும் இவரின் அண்ணன் ரோஹித் தவான் ஒரு திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் நாட்டிங்காம் ட்ரெண்ட் பல்கலைக்கழகத்தில், இங்கிலாந்துல் வர்த்தக முகாமைத்துவம் பற்றி படித்துள்ளார்.2012ம் ஆண்டு கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தில் இவருடன் இரண்டு காதநாயகர்களில் ஒருவராக சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். இவர்களுக்கு ஜோடியாக நடிகை அலீயா பட் நடித்துள்ளார். இவர் நடித்துள்...
இயக்குனர் சக்ரி டொலெட்டி பிறந்த தின பதிவு

இயக்குனர் சக்ரி டொலெட்டி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சக்ரி டொலெட்டி என்பவர் ஒரு இந்திய அமெரிக்காராவார். இவர் இயக்குனர், நடிகர், திரைகதை ஆசிரியர் என பன்முகத் தன்மைக் கொண்டவர். தமிழ் மற்றும் பாலிவுட் திரைப்படத்துறையில் பணியாற்றியுள்ளார். பாலிவுட் திரைப்படத்துறையில் 2008ல் வெளிவந்த எ வென்னஸ்டே என்ற திரைப்படத்தினை 2009ல் உன்னைப் போல் ஒருவன் (2009) என்ற பெயரில் தமிழிலும், ஈநாடு (திரைப்படம்) (2009) என்ற பெயரில் தெலுங்கிலும் மறுஆக்கம் செய்தார். 2012ல் பில்லா 2 (திரைப்படம்) என்ற திரைப்படத்தினை இயக்கினார். இவர் இயக்கிய படங்கள்: உன்னைப் போல் ஒருவன், பில்லா 2, கொலையுதிர் காலம் இவர் நடித்த படங்கள்: சின்ன வீடு, தசாவதாரம், பில்லா 2...
நடிகை அஞ்சலா ஜவேரி பிறந்த தின பதிவு

நடிகை அஞ்சலா ஜவேரி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அஞ்சலா சவேரி இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். அவர் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ்த் திரையுலகில் நடித்துள்ளார். இவர் லண்டனில் பிறந்தவர்.மருத்துவ கல்லூரி மாணவியான இவர் படித்துக் கொண்டிருக்கும்போதே ஹிமாலய புத்ரா என்ற இந்தி படத்தின் மூலம் திரை வாழ்க்கையை தொடங்கினார். இவர் நடித்துள்ள படங்கள்: இனிது இனிது...
இயக்குனர் ராஜிவ் மேனன் பிறந்த தின பதிவு

இயக்குனர் ராஜிவ் மேனன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ராஜிவ் மேனன் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் 1997-ம் ஆண்டு பிரபு தேவா, அரவிந்த் சாமி நடித்த மின்சார கனவு திரைப்படத்தினை இயக்கியுள்ளார். பின்னர் 2000-ம் ஆண்டு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தை இயக்கி, பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2019-ம் ஆண்டு சர்வம் தாளமயம் திரைப்படத்தினை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படங்கள்:  சர்வம் தாளமயம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்...
ஹாலிவுட் நடிகை அமீலா பிறந்த தின பதிவு

ஹாலிவுட் நடிகை அமீலா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
போஸ்னியா நாட்டில் பிறந்த இவர் தமிழில் விவேகம் படம் முலம் அறிமுகமானார். இவர் ஹாலிவுட் படங்களான நவம்பர் மேன் மற்றும் பியரிங் இன் சாராஜெவோ ஆகிய படத்தின் நடித்துள்ளார். தீவிரவாதியாக நடித்திருக்கிறார் ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஸிமெஹிக். நடிகர் அஜித்துடன் நடித்த தனது அனுபவம் குறித்து பேசிய நடிகை அமிலா, ஹாலிவுட்டில் பியர்ஸ் ப்ரோஸ்னன் இயக்கிய ‘தி நவம்பர் மான்’ படத்தில் நான் நடித்திருந்தேன். அதில் எனது சண்டைக்காட்சியையும் நடிப்பையும் பார்த்துதான் விவேகம் படத்தில் நடிக்க அழைத்தனர். அதற்கு ஏற்ப எனது உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். அஜித்தை பார்ப்பதற்கு முன்புவரை அவர் இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஸ்டார். அப்படிப்பட்ட ஸ்டார் நடிகர் எங்கே நம்மை கண்டுகொள்ளப்போகிறார் என நினைத்திருந்தேன். நான் எதிர்பார்த்ததற்கு மாறாக எளிமையாக, அடக்கமான மனிதராக அதேவேளை தேர்ந்த நடிகராக இருந்தார். அவருடன் பணியாற்றியது அழகான ...
நடிகர் ராகவ் ரங்கணாதன் பிறந்த தின பதிவு

நடிகர் ராகவ் ரங்கணாதன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மதுரையில் பிறந்த இவர்  நஞ்சுபுரம் படம் மூலம் தனது சினிமா பயணத்தை துவக்கினார். சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில் படிப்பபை முடித்த இவர் டிவி நடிகை பிரிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து பல்வேறு டிவி ஷோகளில் நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள்:  டிக்கெட், மம்பட்டியான், வேலாயுதம், நஞ்சுபுரம், எந்திரன், சிலம்பாட்டம், சத்தம் போடாதே, வட்டாரம்...

தயாரிப்பாளர் சாமிக்கண்ணு வின்சென்ட் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சாமிக்கண்ணு வின்சென்ட்  தமிழ்த் திரைப்படத் துறையின் முன்னோடிகளில் ஒருவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் சலனப் படங்களைத் திரையிடத் தொடங்கிய இவர், பின்னாளில் கோயமுத்தூரில் மூன்று திரையரங்குகளை நடத்தினார்; பல தமிழ்ப் படங்களையும் தயாரித்தார். கோவையில் முதன் முதலில் மின்சாரத்தால் இயங்கும் அச்சகத்தையும், அரிசி ஆலையையும், நிறுவியவர் இவரே. கோவையின் முதல் மின்சார உற்பத்தி ஆலையும் இவரால் நிறுவப்பட்டதே. சாமிக்கண்ணு வின்சென்ட் 1883 ஏப்ரல் 18-ஆம் தேதி கோவை கோட்டைமேடு பகுதியில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் தம்புசாமி. இவர் கோவை நகராட்சியில் பணிபுரிந்தார். [3]தனது 22-ஆவது அகவையில் தென்னக இரயில்வே திருச்சி பொன்மலை புகைவண்டி நிலையத்தில் பொறிமுறைவரைதலறிஞனாக மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் 19௦5-ம் ஆண்டு டியூபாண்ட் என்கிற பிரெஞ்ச் திரைப்படவியலாளரை சந்திக்...

நடிகை சுனைனா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சுனைனா  இவர் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சுனைனா ஏப்ரல் 17, 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பிறந்தார். இவர் நாக்பூர் மவுண்ட் கார்மல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், படித்துவந்தார். தற்போது வர்த்தக இளங்கலை படிப்பு படிப்பதற்கு ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்துள்ளார். செப்டம்பர் 26, 2008 ஆம் ஆண்டு சுனைனா நகுலுடன் இணைந்து நடித்த காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள நாக்கு முக்கா என்ற கானாப் பாடல் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இவர் நடித்த படங்கள்: சில்லு கருப்பட்டி, காளி, தொண்டன், கவலை வேண்டாம், நம்பியார், வன்மம், சமர், நீர்ப்பறவை, வம்சம், யாதுமாகி, மாசிலாமணி, காதலில் விழுந்தேன்...